ஒ என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
ஊன்றப் பயன் படுத்து!
ஊன்றப்படும் வித்து தான்!
விருட்சமாகிறது!
அழுத்தப் படும் பந்து தான்!
மேலேழுகிறது!
இழுக்கப் படும் அம்பு தான்!
இலக்கு எய்துகிறது!
!
ஆகவே என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
உழைக்கப் பயன் படுத்து!
உழைக்கும் வர்கம் உயர்ந்ததாகத்தான்!
உலக வரலாறு!
ஏய்த்தவர்கள் எழுந்ததில்லை!
உழைத்தவர்களால் தான்!
உலகம் ஒளிர்கிறது!
முடிந்தால் உலகத்துக்கு உழை!
இல்லையேல் நாட்டுக்கு!
குறைந்தபட்சம் வீட்டுக்காவது உழை!
உழைப்பு என்ற மந்திரம் இருக்கும் வரை!
ஏழ்மை என்ற சைத்தான் நெருங்குவதில்லை!
!
ஆகையால் என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்த பயன் படுத்தாதே!
நூறு கோடி கைகளும் இந்தியாவின்!
இரும்பு தூண்கள்!
உன் கைகள் புரட்சிகள் செய்யட்டும்!
புதுமைகள் செய்யட்டும்!
நாளை உலகம் நம்மை!
நல்ல தலைவன் என்று சொல்ல வேண்டாம்!
நல்ல மனிதன் எனறாவது சொல்லட்டும்!
!
ஆகவே என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
ஊன்றப் பயன் படுத்து
ராஜா கமல்