யாரால் சபிக்கப்பட்டவர்கள்.. பயணிகள் - நெடுந்தீவு முகிலன்

Photo by Pramod Tiwari on Unsplash

யாரால் சபிக்கப்பட்டவர்கள் இந்த பூக்கள்!
------------------------------------------------------!
ஈழத்து தமிழ் பெண்கள் - 36 வயதிலும்!
அடிசல்லியில் கொக்கான்!
...விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
...!
வடக்கு கிழக்கு விதவைகள்!
85 ஆயிரத்தையும் தாண்டி விட்டதாக!
தகவல்கள் தெரிவிக்கின்றன!
தொழில் இல்லையா ...? பெண்களை!
விபச்சாரம் செய்ய சொல்கிறார்கள்!
நம் நாட்டில் படித்த இராமர்களும் கூட ...!
ஆடுப்புளுக்கையை கூட்டியள்ளி!
தோட்டத்தில் பசளை இடுகிறாள்!
ஒரு பட்டதாரி பெண்!
இலங்கையின் கல்வியறிவு 96 வீதம்!
ஆகிவிட்டது - இதில்!
வேலைவாய்ப்பு எத்தனை வீதம்!
மகரந்தமணிகள் காற்றில் பறந்து!
கல்யாணம் செய்து கொள்கின்றன!
பூக்கள் கர்ப்பமாகின்றன - பாவிகளாகிவிட்டனர்!
முதிர்கன்னிகள்!
பேரீச்ச மரங்கள் கூட!
பாலை வனத்தில் பூத்து காய்த்து!
சிரித்துக்கொண்டிருக்கின்றன!
மலையக பெண்களின் வியர்வை துளிகளையும்!
பறித்து விடுகின்றன தேயிலை செடிகள்!
யூரோக்களையும்... ஸ்டெலிங் பவுன்களையும்....!
டொலர்களையும் .. ரூபாய்களுக்கு மாற்றி!
நம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்!
முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே .....!
02.!
பயணிகள் கவனத்திற்கு - கவிதைத்தொகுதியில் இருந்து.....!
---------------------------------------------------------!
ஒற்றை கதவு!
பேரூந்து!
உருண்டுகொண்டிருந்தது!
எழுந்து நின்றவர்களுக்கு!
...மேற்தட்டு தலைக்கு!
அடிக்கிறது!
அரிசி மூட்டைகள்!
வாழைக்குலைகள்!
என்னைபெரல்கள்!
பால்மாப்பெட்டிகள்!
விளக்குமாறு தும்புத்தடிகள் என்று ...........!
எல்லா இருக்கைகளையும்!
இடம்பிடித்துவிட்டன!
புழுதி!
மேல் எழுந்து பறப்பதால்!
சாளரங்கள்!
அடைக்கப்பட்டிருந்தன!
அதனால்!
உள்ளே வியர்வை!
வெள்ளம் போட்டுக்கொண்டிருந்தது!
புழுக்கத்தில்!
குழந்தைகள் குமரிகள்!
முனகிக்கொண்டிருன்தனர்!
அதற்குள்ளும்!
ஒவ்வொருவரையும்!
துளாவி தட்டி தடவி!
கையை நீட்டி!
காசு கேட்கும்!
நடத்துனரின் நர்த்தனம்!
நல்லாவேயில்லை!
கிடங்குகளில் உள்விழுந்து!
பேரூந்து நிமிருகையில்!
முகம் தெரியாதவர்கள்!
முன் பின் தெரியாதவர்களுக்கே!
முத்தம் கொடுத்துக் கொண்டு!
நின்றார்கள்!
வெற்றிலை துப்புபவர்களுக்கும்!
புகைப்பிடிப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டதாகவே!
பின் இருக்கைகள்!
காட்சி அளித்தன!
!
வயிற்றில் குழந்தையோடு!
வந்த பெண்ணுக்கு!
இருக்கையாக மாற்றப்பட்டது!
சீமெந்து பைக்கற்றுக்கள் தான்!
என்ன தான் நாடகங்கள்!
நடந்து முடிந்தாலும்!
ரசிக்க கூடியதாக!
இருந்தது!
வரவிருக்கும்!
புதுத் திரைப்படங்களினது!
புதுப் புது பாடல்களை
நெடுந்தீவு முகிலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.