வானம் நிகர்த்தளவு !
வைர நெஞ்சம் நிறுத்தி !
பூமி புரட்டமுடியுமென !
பூதமென உறுதிகொள்வாய் ! !
பகுத்த சிறுகடுகின் !
பல்லாயிரத்தி லொன்றொத்த !
அளவினதுதான் !
அணுவதன் சிறு பிளவுதான் !
அண்டம் நொறுக்கும்தான் !
அதனுள்ளடைத்த செறிவுதான்! !
சினமூட்டும் நிகழ்வுகளால் - உனை !
செறிவூட்டி வைப்பாய் ! !
சிறிதளவேனும் சினமாற்றாது !
உனக்குள் உனையே !
உருக்காலையென !
நெருப்பு பூட்டிக்கொள்வாய் ! !
எரிமலையென !
நெருப்புக் குழம்பினை !
நெஞ்சத்துள் புதைத்துவைப்பாய் ! - நீ !
வாய்க்கும் காலத்தே !
வெடித்துவிடு !
புரட்சிக்கணலாய் சீறியெழு !
பூதமென !
பூமிதனை புரட்டிப்போடு ! !
மாற்றம் கிட்டும் ! ஏனெனில் !
எல்லாமும் !
மாற்றத்திற்குட்பட்டதுதான் ! !
!
ஆக்கம் !
இ.ஜேசுராஜ் - கீரனூர்
இ.ஜேசுராஜ்