நட்பினை நாங்கள்!
பந்தமில்லா சொந்தமென்போம்..!
சுத்தமான தென்றலென்போம்!
கற்புடைய காதலென்போம்..!
உறவில்லப் பங்காளிகள்!
உள்ளத்தைப் பங்கிடுவோம்..!
உள்ளத்தினை உழவுசெய்து!
உண்ர்வினைப் பயிர்செய்து..!
நட்பென்னும் பயிரினை!
அன்பென்னும் ஆயுதத்தால்!
அறுவடை செய்து!
இன்பத்தில் திளைத்திருப்போம்..!
இனைந்தே வாழ்ந்திருப்போம்…!
உள்ளத்து ஊஞ்சலில்!
நட்பினை அமரவைத்து!
சுவாசத்தின் மூச்சினை!
கையாய்க் கொண்டு!
ஊஞ்சலினை ஆட்டிடுவோம்..!
உணர்வினை இணைத்திடுவோம்..!
தவறுகள் செய்தால்!
தவறாமல் தண்டிப்போம்..!
நன்மைகள் செய்தால்!
நன்றாய் ஆதரிப்போம்..!
உண்மைக்கு உதாரணமாய்!
உலகத்தில் வாழ்ந்திருப்போம்..!
சாகாவரம் ஒன்று!
நட்பிற்க்கு வேண்டுமென்று!
இருகை கூப்பி!
இறைவனை வேண்டிடுவோம்

ரமேஷ்குமார்