இடி இடிக்க பூமி நடு நடுங்க !
பித்தம் தலைக்கேறி !
வாந்தியெடுத்தது வானம் !
கிருதயுகம, திரேதயுகம், துவாபரயுகம் !
எல்லாம் சுமூகமாக முற்றுப்பெற்றபோதும் !
கலியுகத்தில் மட்டும்.. !
பூமாதேவியின் !
கோரத்தனமான ஆட்டத்தில் !
அண்டம் - ஆங்காங்கே சரிந்து !
நிமிர்ந்தது !
அச்சரிவுகளுக்கு அசைவுகொடுக்க முடியாமல் !
ஏழுகடல்களும் ஆட்டம்கண்டு !
கொடுங்கோபத்தோடு கொந்தழித்தது !
பெருக்கெடுக்கும் கடல்நீரை குடிமனைகள் மீது !
உமிழ்ந்துகொட்டியது !
வெறித்தனமான சூறாவளியின் வேகத்தில் !
கட்டடங்கள்முதற்கொண்டு !
மரங்கள், மனிதஉயிர்கள் !
மற்றும் எல்லாஉயிரினங்களும் !
ஒன்றாய் துவைக்கப்பட்டது !
சாவுக்கஞ்சி அவை எழுப்பிய !
கூக்குரல்கள் !
வங்கம் முதல் வைகுண்டம்வரை !
பேரதிர்வைக்கிளப்பியது-அதிர்வின் எதிரொலியில் !
வானமும் பலதுண்டங்களாய் வெடித்துச்சிதறியது !
மண்ஆசை !
பெண்ஆசை !
பொன்ஆசை கொண்டவர்கள் !
கொள்ளாதவர்கள் !
எல்லோரும் ஒன்றாய் !
சாதி, மதம், இனம், பால் !
வேறுபாடின்றி !
ஒரேபடுக்கையில் !
மூர்ச்சையடைத்துப்போய்ப் !
பிணங்களாய்ப் பிரண்டுபோயினர் !
சொற்ப இடைவெளிகளின் பின் !
வெடித்துப் பிழந்த வானம் !
இருளைமட்டுமே மெழுகியிருந்தது !
ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்து போனபோது !
அண்டம் - எங்கும் மௌன விரதத்துடன் !
ஏதோவொன்றிற்காய்க் காத்துக்கிடந்தது
எதிக்கா