1987 - அமைதி - பா.அகிலன்

Photo by FLY:D on Unsplash

பின்னரும் நான் வந்தேன், !
நீ வந்திருக்கவில்லை !
காத்திருந்தேன்... !
அன்றைக்கு நீ வரவேயில்லை, !
அப்புறம் !
சுவாலை விட்டெரிகிற தீயொடு !
தென்திசை நாட்கள் பெயர்ந்தன, !
காலம் தாழ்த்தி !
தெருவோரம் நாய் முகரக் கிடந்த !
உன் மரணம் செவிப்பட்டது நண்ப, !
துக்கமாய் சிரிக்கும் உன் முகம் நினைவில் வர !
தொண்டை கட்டிப் போயிற்று... !
எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே !
”விதி” என்றாகிவிட்ட சுதந்திரத்துடன் !
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம் !
பா.அகிலன் !
1990
பா.அகிலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.