அன்றைப் போலவே!
இன்றும் எல்லாம்!
முடிந்து விட்டது!
சிரிப்பும் சிறு கெக்கலிப்பும்!
கம்மலும் இருப்பும்!
கதவு சாத்திப் போய்விட்டது!
ஒரு வரவுக்காய்!
நானும்!
ஒரு செலவுக்காய்!
இவர்களும்!
மூடிய அறைகளுக்குள்!
பதினாறு வயதில்!
திருவிழா போலவே!
இருந்தது!
முப்பது வயதிலும்!
முடியாமல் போனது!
கூண்டுக்குள்!
அடைபட்ட கிளி!
சிறகடித்துச் சிறகடித்து!
சிறகுதிர்த்தது!
கூண்டைக் கொத்தி!
இரும்பை வளைக்கும்!
முயற்சியில்!
சொண்டு மட்டும்!
பச்சைப் பசேல் காடும்!
பறந்து திரியும்!
உரிமையும்!
கிளிக்கு மட்டும் தானா?!
- இளந்திரையன்

இளந்திரையன்