காதல் - மு.கந்தசாமி நாகராஜன்

Photo by Didssph on Unsplash

மு.கந்தசாமி நாகராஜன் !
மறப்பது... !
நினைப்பது... !
மறக்க நினைப்பது... !
நினைக்க மறப்பது.. !
ஒரு !
குழப்பமான !
கவிதை தான் !
காதல் !
வந்த காதலால் !
வருகின்ற நல்வினையை !
வெல்லத்தான் இயலுமோ !
புல்லர்தம் !
உலகினிலே...? !
தீராத !
துன்பமென்றும் !
தெவிட்டாத !
இன்பமென்றும் !
போற்றினாலும் !
தூற்றினாலும் !
அறிந்தவர் யார் !
அவனியிலே !
உண்மைக் காதல் !
என்னவென்று...? !
வருடும் போது !
அழுகை தரும் !
வலிக்கும் போது !
சிரிப்பைத் தரும் !
விந்தையான !
வியாதி !
இதன் பெயரென்னவோ? !
காதல்தானே...? !
வெல்லும் வரை !
துடித்த மனது !
வென்ற பின்னர் !
மருளுவதேன்? !
பாவை உந்தன் !
பாதம் தொட !
பாதையாக மாறிடவா? !
தென்றலாக மாறி !
தேவி உந்தன் !
கூந்தலினை வருடிடவா? !
மாலை !
நிலை கொள்ள !
மருளும் நெஞ்சத்தைத் !
தருகின்ற !
காதல்... !
கேலிக் கூத்தாகிக் !
கொடியவரின் !
இரவுக்குப் !
பெயராகிப் !
போனதென்ன..? !
!
மயில் மகளே... !
உனை !
மாலை சூட !
குயில் போலக் !
கூவி அழைக்கிறேன் !
நெஞ்சத்தில் !
மஞ்சம் கொள்ள !
நீ !
வஞ்சமின்றி !
வந்து விடு !
அழைப்பது காதலா? !
இதயத்தைத் !
தொலைப்பது காதலா? !
தொலைந்து போன !
இதயத்தைத் !
தொலைவிலிருந்தும் !
அழைப்பதே !
காதல்! !
காதல் !
காதல் !
காதல் !
காதல் போயிற் !
சாதல் !
சாதல் !
சாதல் !
பாரதி !
மொழிகளே வேதம் !
படைப்போம் !
புதியதோர் !
காதல் கீதம்
மு.கந்தசாமி நாகராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.