முழுக்க நனைந்தபின்!
முக்காடெதற்கு?!
ஒத்துக்கொள்கிறேன்..!
உன் பார்வை!
பெய்த மழையில் நான்!
முழுக்க நனைந்த பிறகும்,!
முக்காடாய் உன் பர்தாவை!
விலக்கவில்லையே நீ!
இன்னும்...!
கண்மணி உன்னருகே!
வந்தமர ஆசையெனக்கு..!
உன்னிரு விழிமீன்கள்!
நீரின்றி நீந்துமழகை!
கிட்டத்தில் கண்டு!
ரசிக்கத்தான்...!
கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த!
எட்டப்பனை அடியோடு!
வெறுத்த என்னால்,!
கருப்புத் திரைதாண்டி!
அழகுப்பதுமை உன்னை!
காட்டிக்கொடுக்கும் அந்த!
இரட்டைப்பிறவிகள் உன்னிரு!
கண்களை மட்டும்!
விரும்பாமலிருக்க முடியவில்லை!
என்னால்
ராம்ப்ரசாத், சென்னை