முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை,!
எங்களுக்கும் புரிகின்றது!.!
உன் பிள்ளைகளை!
கரையேற்றப் போகின்றாய்!
என்றாவது ஒருநாள்!.!
அப்பொழுது நாங்களும்!
உன்னுடன் இருப்போம்...!
மகிழ்ச்சியாய் அல்ல!
அமைதிச்சமாதியாய்!
உன் மடியில்!!
முன்னொரு ஜென்மத்தில்!
எங்கள் மேல்!
உனக்கென்ன பகை?...!
இன்றுவரை உன்!
குழந்தைகளை கரையேற்ற!
கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றாய்?...!
மறந்துவிடு!!
உன்குழந்தைகளைக் கரையேற்றுவதை!!
மன்னித்துவிடு!!
இது தெரியாமல்!
இவர்கள் உன்னை!
இரசித்துக்கொண்டிருக்கிறார்கள்!. !
-சிபி.பாபு.!
----------------------------------------!
நாள்:28.02.2000!
இடம்:புதுச்சேரியின் கடற்கரையில்!
நண்பர்கள் ரசித்து எழுதிய கவிக்கு,!
நான் எதிர்த்து துளிர்த்த வரிகள் இவை.!
இங்கே உங்களுக்காக
சிபி பாபு