காதல் கொள் - தமிழ்ஹாசன்

Photo by Tengyart on Unsplash

காதல்!
இந்த மூன்றெழுத்தில்!
முக்குளிக்காதவர் !
எவரும் இல்லை.!
இந்த!
ஒற்றை வார்த்தையில்தான்!
ஓராயிரம் மின்சாரம்.!
இது மனிதனின்!
மிருக எண்ணங்களை!
தோலுரிக்கிறது!!
காதலின் தனித்துவமே!
மனிதர்கள் இன்றி!
மற்றவைகளும் அதனை!
காதலிப்பதுதான்!!
வானம்-மேகத்தை!
காதல் கொள்கிறது!
மழைகளாய்......!
இரவு-நிலவை!
காதல் கொள்கிறது!
நட்சத்திரங்களாய்......!
கடல்-கரையை !
காதல் கொள்கிறது!
அலைகளாய்......!
பூ- காற்றை!
காதல் கொள்கிறது!
நறுமணமாய்......!
பூமி-நிழலை!
காதல் கொள்கிறது!
சுவடுகளாய்......!
தேகம்-நிர்வாணத்தை!
காதல் கொள்கிறது !
ஆடைகளாய்......!
கவிஞன்-கவிதையை!
காதல் கொள்கிறான்!
பொய்களாய்......!
காதல் கொள்ளாத!
எவையும் காற்றில்!
காணமல் போய்விடும்.!
காதலிக்காதவனும்,!
காதலிக்கப்படாதவனும்!
பூமியில் பாரமே!!
காதல் கொள்பவரிடம்!
பொய்கள் இன்றி!
பொறுமையே!
மிகுதியாய்ப் பிறக்கும்.!
ஆயுதமின்றி!
அமைதியே!
அதிகமாய் இருக்கும்.!
காதலர்க்கு,!
இதயங்கள் தவிர!
மற்றவை களவாடத்!
தெரியாது!!
இரண்டு கருவி!
இணையும் போதுதான்!
இசை பிறக்கிறது!!
இரண்டு வார்த்தை!
சேரும் போதுதான்!
கவிதை பிறக்கிறது!!
இரண்டு இதயம்!
மாறும் போதுதான்!
காதல் பிறக்கிறது!!
காதல்,அங்கே!
யுத்தம் இருக்காது!
முத்தத்தின் சத்தம்!
மட்டுமே இருக்கும்.!
அங்கே,!
வன்முறை இருக்காது!
வாழும் வரை வயது!
மட்டுமே பாதியாய்!
இருக்கும்.!
ஆதலால் மனிதா,!
ஒருமுறையேனும்!
கனவிலாவது காதல்கொள்.!
கனவுகள் அர்த்தப்படும்!!
உன் கனவுகள்!
மெய்ப்பட வேண்டுமானால் .....!
உன் காரியம்!
நிறைவேற வேண்டுமானால்......!
உன் கரங்கள்!
கண்ணீரை துடைக்கவேண்டுமனால்.....!
உன் காலடியில்!
பூக்கள் பூக்கவேண்டுமனால்.....!
ஒன்று செய்!
அதுவும்!
இன்றே செய்.!
கட்டாயம்!
'காதல் கொள்'
தமிழ்ஹாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.