01.!
வெளிப்பட்டது!
------------------!
காலம் நமக்கு கற்று தந்தது !
மிகவும் குறைவு -ஆனால் !
களம் நமக்கு கற்று தந்தது!
மிகவும் அதிகம்!
அதிலும் முள்ளிவாய்க்கால்!
நமக்கு விட்டு சென்றது அதிகம்!
கற்றதற்கு நாம் கொடுத்த !
விலை மிக அதிகம்!
கொடுங்கோலர்கள் நமக்கு !
நம்மை அடையாளம் காட்டியிருக்கிறார்கள்!
நம்மில் இருக்கும் கவிஞர்களை!
நமக்கு வெளிபடுத்த உதவினார்கள்!
நம்மால் முடிந்தது!
அது மட்டும் தான்,!
பல தலைவர்களை!
நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்கள்!
நம்மிடையே இருப்பது!
அனைவரும் தலைவர்கள் தான்!
மேடை பேச்சாளர்களை!
உருவாக்கி இருக்கிறார்கள்!
நாம் பேசுவதற்கு மட்டுமே !
தகுதியானவர்கள்!
நம்மை நம்மைவிட நம் !
எதிரி புரிந்துகொண்டான் -ஆனால்!
இனத்தான் புரியாமல் ஏமாந்தான்.!
இனியும் நம்பியிருக்கிறான் !
கை கொடுப்போம் என்று -என்றோ!
கை கழுவியது அறியாமல் ...... !
!
02.!
மூலவரா ? உற்சவரா?!
---------------------------!
பார்த்திருந்த நாள் முதலாய் -உன் !
பார்வை வரம் வேண்டி !
காத்திருந்த காலத்திலே !
கை தவற விட்ட பின்பு !
காலம் கடந்த பின்னர் !
கண்டெடுத்து கரை சேர -உன் !
இதயக் கோயிலின் பூஜைக்கு !
காத்திருக்கும்- நான்!
மூலவரா ? உற்சவரா?

கோவிந்தபிள்ளை, சிறீதர்