தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கடிதம்

செல்வா
ஆக்கம்: செல்வா!
கடல் தாண்டி!
பொருள் தேட சென்ற!
கணவனுக்காக.!
கொண்டவளின்!
எண்ணங்களையும்!
ஏக்கங்களையும்!
வார்த்தைகளாக!
சுமந்தபோதும்!
உதிர்ந்து விடாமல்!
ஊமையென!
நித்திரைகெட்டு!
நெடும் பயணம்!
தொடர்ந்து!
விசா இல்லாமல்!
விமானம் ஏறி!
பேணுகிறவன் கைகளால்!
பேரிடி தாக்கினாலும்!
கடமை தவறாது!
கொண்டபணியினை!
குறைவின்றி முடிக்க!
உரியவனிடம்!
ஓப்புவிக்கிறேன்!
ஓரம் கிழிக்கப்பட்டு!
“கடிதமென”!
!
ஆக்கம்: செல்வா

களவு கூட சந்தோஷம்தான்

செயவேலு வெங்கடேசன்
குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்!
சிமெண்ட் பெஞ்சில்!
தி ஜாவின் மோகமுள்!
உடனான தணிமை,!
முன் வராண்டா வேப்பமர!
முன்னிரவு தென்றலில்!
இளையராஜாவின் இசையுடன்!
ஜென்சியின் இனிமையுடனான!
எப் எம் அலைவரிசை.!
அலுவலகம் முடிந்து!
நண்பர்கள்!
பாய் கடை டீ பிஸ்குத்!
தம் அரட்டை,!
காலை செய்தித்தாள்,!
மாலை தொலைக்காட்சி,!
செய்திஇ மெகா சீரியல்,!
பின்னிரவு பால் பழம் தம்,!
மற்றும் எத்தனை எத்தனையோ?!!..!
களவு போயும்கூட!
கவலையில்லை,!
சந்தோஷமே!!..!
என்னுடனான என்!
குழந்தையின் திருடப்பட்ட!
சந்தோஷ தருணங்கள்!
களவு போனதில்..!
!
-க.செ.வெங்கடேசன்.. அபுதாபி

ஜோதிராமலிங்கம் கவிதைகள்

ஜோதிராமலிங்கம்
ஜோதிராமலிங்கம். !
-------------------------- !
முக்கியம் !
o !
வேண்டாத பகுதிகளின் !
மிச்சம் சிலை. !
வேண்டாத வார்த்தைகளின் !
மிச்சம் கவிதை. !
வேண்டாதவற்றின் !
மிச்சம் வாழ்க்கை. !
எனவே !
வேண்டியவை முக்கியம் !
வேண்டாதவை அதிமுக்கியம் !
000 !
!
----------------------------!
முனியாட்டம் !
o !
பள்ளிக்கு வந்ததும் !
காலை பய பரப்பு. !
குகை முனியப்பன் கோயில் !
பட்டாக்கத்தி டுதாம் வேகமாய். !
மதிய உணவு இடைவேளையில் !
வெய்யிலில் ஓடி !
நெஞ்சு படபடக்க !
கும்பலாய் நின்று !
பயத்துடன் பார்க்க !
காற்றில் அசைந்தது !
பட்டாக்கத்தி- !
கூடவே !
மீசை உயர விழிகள் பிதுங்க !
முறைத்தார் முனி. !
கத்தியில் உயரே குத்திய !
எலுமிச்சை பொதக்கென விழ !
பிடித்த ஓட்டம் !
பள்ளிக்கூட வாசலில். !
000

எச்சி ... அடுத்த நிறுத்தம் ... குறுக்குச் சுவர்

ரசிகவ் ஞானியார்
1.எச்சி!
காறி உமிழ்ந்த!
எனது எச்சில்!
புனிதம்தான்!
சட்டையில் வந்து!
தெறிக்கும்பொழுதுதான்!
அசிங்கம் உணருகிறேன்.!
தெறிப்பதை தடுக்க!
துப்புவதை நிறுத்துகிறேன்!
2.அடுத்த நிறுத்தம் மனிதநேயம்!
இருக்கவோ ? எழவோ?!
இருக்கையின் நுனியில் ....!
மனப்போராட்டம் !!
பெரியவரின் தள்ளாமை ...!
தர்மசங்கடப்படுத்துகிறது !!
இருக்கவோ ? எழவோ?!
எழுந்துவிட தீர்மானித்தேன்!
இரக்கத்திற்காக அல்ல ..!
இறக்கத்திற்காக !!
எனது நிறுத்தத்திலேயே ...!
மனிதநேயமும் இறங்கிப்போனது!!
3.குறுக்குச் சுவர்!
ஏறவிடாது வழிமறித்து!
பேருந்தின் படிக்கட்டில்!
தொங்கும் பயணிகளை!
சில சமயம்!
தள்ளிவிட்டுவிட்டுதான்!
மேல் ஏற வேண்டியதிருக்கிறது!
வாழ்க்கையிலும் அப்படித்தான்!
- ரசிகவ் ஞானியார்!
K.Gnaniyar,!
Software Developer,!
TransIT mPower Labs,!
Bangalore

தாலாட்டு

s.உமா
பட்டுத் துகிலெடுத்து!
தொட்டிலொன்று கட்டிவைத்தேன் !
கட்டிக் கனியமுதே!
கண்ணுரங்க வாராயோ!!
!
மலர்மேனி நான்அணைத்து!
மடிமீது வைத்திருந்து!
தட்டித் தூங்க வைப்பேன்!
தளிர்க் கொடியே தூங்காயோ!!
!
வண்ணத்து பூச்சியினம்!
வட்டமிட்டே தாவி வரும்!
பொன்மேனி தனைக் கண்டு !
பூ வெனவே மயங்கிவிடும்..!
!
கண்ணத்து கதுப்பெடுத்து!
கொத்தவரும் கிளிக்கூட்டம்!
விண்ணத்து மீன்களெல்லாம்!
விளையாடத் தேடிவரும்!
!
பாட்டெடுத்து பாடிடுவேன்!
பக்கத்தில் துணையிருப்பேன்!
இளங்காலைச் சூரியனே !
எட்டி நீ பார்க்காதே..!
!
படித்து பட்டம்பெற!
பாடுபடும் அண்ணனங்கே!
பிரித்த பக்கமெல்லாம்!
பேசா உன் சித்திரங்கள்!
கண்டு சினங் கொண்டு!
உன் எதிர் வந்து நின்ற்வனை!
சின்ன இதழ்விரித்து!
சிரித்து வலை வீசிவிட்டாய் !
தொட்டு உனை தூக்கவைத்தாய்!
துள்ளி விளையாடவைத்தாய்!
பாடமெல்லாம் போகட்டும் உன்!
பட்டு மேனி துவளாதோ?!
!
சிட்டாய் நீ ஓடிவந்து!
சீக்கிரமே தூங்கிவிடு!
காத்திருக்கு எதிர்காலம்!
கண்ணுரங்க நேரமில்லை..!
!
கலைகள் பல கற்றிடனும்!
கடமை யெல்லாம் செய்திடனும்!
பெரிய பெயர் பெற்றிடனும்!
புகழ்வானில் பறந்திடனும்..!
!
அன்புக் கொண்டு பிறரிடத்தில்!
அற்புதமாய் வாழ்ந்திடனும்!
தாய்தேசம் தழைக்கவைக்க!
தன்னலமே மறந்திடனும்.. !
!
மயக்கவரும் மாலையிலே!
மான்விழியாள் கண்டுவிட்டால்!
விழித்திருக்க வேண்டிவரும்!
விண்ணுலகம் இறங்கிவரும்..!
!
இப்போதே தூங்கிவிடு!
இருவிழிக்கு ஓய்வுகொடு!
எப்போதும் காத்திடுவான்!
எம்பெருமான் துனையிருப்பான்

ப்ரியனின் 4 கவிதைகள்

ப்ரியன்
கன்னத்தில் முத்தம் !
எனக்கு !
கவிதையெல்லாம் !
எழுத தெரியாதென்றபோது !
கன்னத்தில் !
அழுத்தமாய் ஆழமாய் அழகாய் !
முத்தமிட்டு இப்போது !
எழுதென்றாய்! !
இப்போதும் சொல்கிறேன் !
உன் இதழ் என் கன்னத்தில் !
எழுதிய அளவுக்கு !
எனக்கு கவிதை எழுத வராது! !
- ப்ரியன். !
!
தூரம் !
***** !
உனக்கும் எனக்குமான !
தூரம்! !
அது !
விழிக்கும் இமைக்குமான !
தூரம்! !
- ப்ரியன் !
!
குறுநகை !
******** !
என் யுக யுகத்திற்கான !
சந்தோசம்; !
நீ சிந்தும் ஒற்றை !
குறுநகையில் !
ஒளிந்திருக்கிறது! !
- ப்ரியன். !
!
குறிப்பு !
******* !
கவிதை ஒன்றின் ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்! குறிப்பை ஆளாளுக்கு அலசிப் போனார்கள்! யாருமே கண்டுகொள்ளாமல் அனாதையாய் கிடந்தது கவிதை! !
- ப்ரியன்

இரயில் பயணங்களில்

ராமலக்ஷ்மி
நிற்கின்ற புகைவண்டியிலே!
ஜன்னல் ஓர இருக்கையிலே!
அமரக் கொடுத்து வைக்கையிலே-!
சடாரெனப் பக்கத்து!
இருப்புப் பாதையிலே!
‘தடதட’ சத்தத்துடன்!
பாய்ந்து வரும்!
எதிர்திசை வண்டி!
ஏற்படுத்தும் ஓருணர்வை-!
நாமிருக்கும் வண்டிதான்!
நாலுகால் பாய்ச்சலில்!
நகர்வது போலவே..!
பிடித்த பிரமை!
'மடமட'வென்றே!
விலகிடும் வந்த வேகத்தில்..!
பின்னால் தேய்ந்து!
சன்னமாகிடும் சத்தத்திலும்-!
கண் முன்னால் விரிந்திடும்!
சற்றுமுன் கண்ட!
அதே காட்சியிலும்..!
வாழ்விலும் கூட இதுவே நியதி-!
பிரச்சனை தடதடவென வருகையிலே!
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்!
எடுத்திடலாம் ஓட்டம்!
என்றுதான் மனமது விழையும்..!
நின்று எதிர் கொண்டாலே புரியும்!
நின்ற இடத்திலேயே நாம் இருக்க!
பிரமாண்டமாய் தெரிந்த!
பிரச்சனையது சடுதியில்!
தேய்ந்து பின் மாயமாய்!
மறைந்தே போயிடும்.!
இன்னல் திரையும் விலகி-மிக!
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்.!

நாளை...?

ஜெ.நம்பிராஜன்
ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்!
முந்தைய நாளின் கனத்த நினைவுகள்!
இமைகளின் மேலே அமர்ந்து கொள்கின்றன!
சன்னல் திரையை விலக்கினால்!
முகத்திலடிக்கும் சூரிய ஒளியில்...!
பொட்டல் வெளியும் ஒற்றைப் பனையும்!
எதிரில் தென்படும் மனிதர்களின்!
முகங்களிலும் வெறுமை!
மண்டிக் கிடக்கிறது!
தூரத்து வானத்தைப் பார்த்தபடி!
நேரத்தை ஓட்டுவது எப்படி?!
இரவு எப்போது வரும்!
இரவினில் இமையை மூடாமற்தடுக்கும்!
சிந்தனைத் தூசொன்று...!
நாளையையும் இவ்வாறே நகர்த்தியாக வேண்டும்!
-ஜெ.நம்பிராஜன்!
சமர்ப்பணம்: !
சிதைந்த வாழ்வுடனும் சிதிலமடைந்த இல்லங்களிலும் வசிக்கும் ஈழத்தோழர்களுக்கு... இக்கவிதை

தமிழென்னும் தேனாற்றில்

சத்தி சக்திதாசன்
மனமென்னும் வீணைதனில் இசைக்குதிந்த தமிழ் ராகம்!
மழலைப் பருவத்திலே விளைந்ததிந்த தமிழ் மோகம்!
நினைவென்னும் ஆழ்கடலில் மிதக்குதிந்த கவிதா யாகம்!
நிற்காமல் பொழியும் எண்ணமென்னும் மொழி மேகம்!
விழிமூடும் வேளயிலும் கனவாக மிதக்குமெந்தன் தாய்மொழியே!
வழியெங்கும் தோரணங்களாய் கவிதைப் பூக்கள் அலங்கரிக்கும்!
!
எனை வரவேற்க காத்திருக்கும் தமிழ்மொழியின் இனிய சந்தங்கள்!
என்றும் எனை வாழ வைக்கும் இனிய கவிதை வரிகள்!
காலமெனும் கப்பலில் காததூரம் கடந்து விட்டேன் நண்பா!
காணும் காட்சியெங்கும் கற்பனைப் பூக்களாய் மலர்கின்றதே!
!
மீதியுள்ள வாழ்நாளில் விரல்களின் வளைவினால் விளையட்டும் எழுத்துக்கள்!
மனிதனிவன் மனதினிற்கு நல்கவிதை தானெ என்றும் நிம்மதி!
மீண்டுமொரு பிறப்புண்டு என்றேதன் இறை சொல்வானெனில்!
மறுபடியும் மிதக்கவிடு தமிழ் தேனாற்றில் என்றே நான்!
!
மனமுருகி வேண்டிடுவேன் ; அன்னை தமிழே அருளிடுவாய்!
மழையாக பொழியட்டும் அப்போதும் தமிழ்க் கவிதைகள் !
!
-சக்தி சக்திதாசன்

ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்

ரவி அன்பில்
உள்ளே வயிரத்த ஒளிச்சு வெச்சு!
வெளியே கரித்துண்டா வாள வெச்சு!
புள்ளே நீ பொளச்சுப் போடினு சொன்னா!
புரியலையே உம் பேச்சு, மாரியாத்தா!!
பொத்தக் குடிசையிலே குடியேற வெச்சு!
பொம்பளைக கூசாம என்னை ஏச வெச்சு!
ஒத்தச் சேலையிலே ஒளப்பாட வெச்சே!
ஒனக்கே அது நியாயமா, மாரியாத்தா?!
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல!
அடிச்சுப் போட்டா கேப்பாரும் இல்ல!
குப்பையக் கெளறி குறுணையப் பொறுக்க!
கோளியாநான் நீ சொல்லு, மாரியாத்தா!!
ஒத்தரும் இங்க ஒதவாமப் போக!
ஒருவாரமா எனக்கு சித்தாளு வேலே!
கொத்தனாரு ராயப்பன் கூசாம வந்து!
கட்டிலுக்கு வாடீன்னான், மாரியாத்தா!!
பொச்சப் பொத்திட்டுப் போவேனு சொன்னேன்!
பொசுக்குனு என்கையை ஒருபிடி பிடிச்சான்!
மிச்சத்த நெனச்சாலே கண்ணீரு முண்டுது!
மகமாயி, பெரியதாயி, எம் மாரியாத்தா!!
ஒத்தக் கை எம்மேலே ஒரசிட்ட தாலே!
ரத்தக் கை நான் வெச்சேன், மாரியாத்தா!
குத்திக் குதறிக் கூறேடுததுப் போட்டேன்!
எங்கப்பன் அருவாளு, மாரியாத்தா!!
சவத்தப் பொதச்சிட்டேன், மாரியாத்தா - ரத்த!
சேலையயும் அலசிப்புட்டேன், மாரியாத்தா!
வெவரங் கெட்டுப் போனாலும், மாரியாத்தா - நான்!
வெக்கங் கெட்டுப் போவலையே, மாரியாத்தா!!
தள்ளி ஒரு கெணறு உண்டு, மாரியாத்தா - நான்!
தூக்குப் போடக் கயிறு உண்டு, மாரியாத்தா!
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்!
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?!
கூறுகெட்ட கொத்தனாரு, மாரியாத்தா - என்னைக்!
கொலைகாரி ஆக்கிப் புட்டான், மாரியாத்தா!
ஊரு விட்டு ஊரு போறேன், மாரியாத்தா - என்னை!
உருப்படியா பாத்துக்க, மாரியாத்தா!!
வயிரத்த உள்ள வெச்சே, மாரியாத்தா - ஒரு!
கரித்துண்டா வாள வெச்சே, மாரியாத்தா!
வயிறெரிஞ்ச வெக்கையிலே, மாரியாத்தா - அந்தக்!
கரித்துண்டும் வயிரமாச்சு, மாரியாத்தா