கைம்மாறு - பொலிகையூர் சு. க சிந்துதாசன்

Photo by Jr Korpa on Unsplash

என் மனவெளியில்!
விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான்!
வாழ்விருப்பின் அடையாளம்!
அர்த்தப்படுத்தப்பட்டது.!
அவ்வலியின் உச்சமே என்னுள்!
மலைசுமக்கும் மறத்தையும் தந்தது.!
என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும்!
தங்குமடங்களிலேயே!
நிறைவுற்றுப் போயினவெனினும்…!
மாற்றீடாய்!
தங்குமடங்களைத் தரிசனத்துக்கான!
தலங்களாய்!
ஆக்கும் திறனைத் தந்ததும்!
அவ்வலிகளே.!
வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்…!
பீறிட்டுக் கொண்டிருந்தன.!
இருந்தும்!
என் மனவாழம்!
அறியாமலவை!
தோற்றே போயின.!
குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு!
பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும்!
துரியோதனன் எனக்கு!
உயிர்ப்பிச்சை தந்துள்ளான்.!
அர்ச்சுணன் கையில்!
நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது!
பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன்!
பல தலைகளையும் கொய்திருக்கும்.!
காக்கப்பட்டவன் எவனெனினும்!
‘காத்தவன்’ கடவுளல்லவா!
கணமேனும் அவனை!
மறக்கிலேன்
பொலிகையூர் சு. க சிந்துதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.