பாதைகளிலேயே!
பயணம் செய்யும்!
உங்கள் வாழ்க்கையில்!
உடன்பாடில்லை எனக்கு.!
பயணங்களுக்கான!
பாதைகளை மெல்ல!
உருவாக்குவதில் மட்டுமே!
உள்ளம் போடுகிறது கணக்கு.!
திருமணம், குழந்தை,!
தீண்டும் காமம்!
இதிலெல்லாம் வீழாது!
இருக்க விரும்புகிறேன்.!
உழைக்கும் வரை!
உழைத்து வாழும் வரை!
வாழ்ந்து யாருக்கும்!
வருத்தமில்லாமல் போகிறேன்.!
என் கால்கள்!
எங்கு செல்கிறதோ!
அங்கே எனக்கொரு!
அழகிய குடில்.!
பள்ளம் வரினும்!
வெள்ளம் வரினும்!
அழியும் உலகில்!
வாசிப்பேன் பிடில்.!
எண்ணத்தின் போக்கில்!
வண்ணத்துப் பூச்சியாய்!
இயற்கை அழகில்!
குடிப்பேன் தேன்.!
இன்ப துன்பத்தில்!
இன்னும் தவித்தால்!
என் வாழ்க்கை!
எங்கும் வீண்.!
சிறகு முளைத்ததும்!
பறந்திடும் பறவையாய்!
துளிகள் பிறந்ததும் மேகம்!
துறக்கும் மழையாய் நானும்.!
!
-ஒளியவன்
ஒளியவன்