தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வித்தை தெரிந்த வியாபாரி!

இல்யாஸ் இப்றாலெவ்வை
வாயோடு முடிச்சுப்போட்டு !
வயிறு நிரப்பியும் நிரப்பாமலும் பாம்புகள் !
சுருண்டும் விரிந்தும் கிடக்கிறது!
வித்தைகள் தெரிந்தவர் பாம்புகளை !
திறுக்கிக் கட்டுகிறார் !
வயதான பாம்புகள் பற்கள் !
விழுந்திருக்கும் இல்லையெனில் புடிங்கி இருப்பார் !
பெரிய முட்டைகள்!
இட்டிருக்கிறது உடையாமல் கையால்கிறார்!
நம்பித்தான் வங்கிச்செல்கிறார்கள் !
மருமகனும் வங்கிச்செல்கிறார்!
அரசியல்வாதிகளின் வாக்குறிதிகள் போல !
வீடு செறுமுன்னே உடைந்து !
காற்றோடு கலந்து விட்டது !
எங்கு தேடுவது !
பலூன் வியாபாரியும் இல்லை !
அவர்களும் மறந்தும் விட்டார்கள் !
வேறொருவர் வருவார் !
வாக்குறுதிகளைத் தந்துவிட்டு !
பலூன்களை விற்றுச்செல்வார் !
மருமகனும் அவர்களும் தேடுகிறார்கள் !02.!
காற்றில் கலந்ததையும் தொலைந்தவர்களையும் !
தோல்கள் மட்டும் அவனிடம் !
வெறுமனே அவர்கள் அடுத்த!
முறை வரட்டும் பலூன் !
வியாபாரியும் தேர்தலும்

விதி

இரா சனத், கம்பளை
மரணத்துடன் போராடும்!
கணவனின் உயிரைக் காக்க!
மருத்துவச் செலவுக்காக!
மடிப்பிச்சை கேட்கும்!
மங்கையைக்கூட விலை!
மாதுவாக்கின்றது விதி

வறுமை

இரா சனத், கம்பளை
குங்குமம் வாங்குவதற்கு !
வழியில்லாததால் மனைவி!
திருநீறு அணிகின்றாள்!
ஐயோ! இறைவா !
கணவன் வாழும்போதே அவள்!
விதவையாய் காட்சியளிப்பது!
ஏன்? !
கடவுளே! அவளை!
விதவையாக்கிய வறுமைக்கு!
வாழ்க்கைச் சட்டத்தில்!
என்ன தண்டனை?!

நிலை மாற்றம்

நவின்
கருப்பும் வெளுப்பும் மட்டும்!
கடவுள் படைத்த நிறங்கள் என்றால்!
சாம்பல் நிறத்து பூனைக்குட்டிகள்!
எங்கள் வீட்டில் வளருவதேன்?!
உயர்வும் தாழ்வும் மட்டும்!
உண்மை நிலைகள் என்றால்!
உலகின் தராசுகள் எல்லாம்!
துக்கம் தொண்டையடைத்து!
சமமாய் தொங்காமல்!
'சவமாய்' அன்றோ தொங்கும்?!
நீரின் நிலையென்ன?!
திரமா? வளியா?!
திரவியமா?!
பிறப்பும் இறப்பும்!
இரு நிச்சய நிலைகளா?!
நான் வினவுமுன்!
இல்லை இல்லை!
இரண்டுக்கும் நடுவே!
'இருப்பு' என்ற!
நிச்சயமில்லா நிலையுண்டு!
என்றுநீங்கள் இயம்பக்கூடும்.!
நிச்சயம் இல்லாததை!
நிலை என்று !
எவ்வாறு உரைத்தீர்?!
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே!
உயிரின் நிலையை!
ஓரளவு ஊகிக்க !
உங்களால் முடியும்.!
இறப்புக்கும் பிறப்புக்கும் இடையே!
உயிரின் பயணத்தை!
உரைக்க இயலுமா?!
ஆக...!
நீர் ஒரு நிலை யில்லை!
உயிர் ஒரு நிலையிலில்லை!
உலகும் நிலையில்லை!!
அன்று கவிக்கோ சொன்னான்,!
சரி தவறுகளுகளையும்!
சமய பேதங்களையும்!
பிரிக்கும் வரையரைகள்!
ஓடும் நீரில் கிழித்த கோடுகள்!
ஒன்றும் நிலையில்லை;!
உழைத்துக் களைத்து!
புடைத்து காய்த்த கைகளில்!
பிறப்பு இரேகைகள்!
இன்னமும் மாறாமலா இருக்கும்?!
நிலை மாற்றம்!!
மாற்றமே நிலை

கனவு

சின்னு (சிவப்பிரகாசம்)
தேடல் துவங்கிய நாளில்!
தேவதை தோன்றினாள்!
இலக்குகள் அற்ற வாழ்வின்!
முகவுரை எழுதினாள் !
அணிகள் சேர்ந்த அங்கம்!
அகவுரை எழுதத் தோன்றும்!
இருமதி கொண்ட மதிக்கும்!
இனிமை கொடுத்திடும் !
அயலவள் எனச் சொன்னேன்!
அனுமதி கோரினாள்!
தந்தேன் எனச் சொன்னேன்!
ஒருமையில் பேசினாள்!
தனியறை எங்கு என்றேன்!
தகவலோ எனக் கேட்டாள்!
தனிமையில் என்று சொன்னேன்!
தறுதலை என்றனள் !
விண்ணில் என்றே சொன்னேன்!
மீன்களா என்றாள்!
உன் கண்கள் எனச் சொன்னேன்!
முத்தங்கள் தந்தாள்!
விதிமுறை என்ன என்றேன்!
விதிகள் இல்லை என்றாள்!
அங்கம் வயல்வெளி என்றதும்!
வரைமுறை என்றனள் !
தேர்தான் என்று சொன்னேன்!
ஊர்வலம் எனச் சொன்னாள்!
மொழிபவள் என்றதும்!
இமைகள் மூடினாள்!
பொதிகை எனச் சொல்ல!
தென்றல் என்றனள்!
உன் குழல் தான் எனக் கேட்டு!
இசைபோல் பேசினாள்!
கனிகள் எனச் சொன்னேன்!
தோப்பில் என்றனள்!
அழகினில் எனக் கேட்டு!
அடித்தே ஓடினள்

பரதேசி

சின்னு (சிவப்பிரகாசம்)
தீயைத் தீண்டிவிட்டேன் !
தீப்புண்ணும் பெற்று விட்டேன் !
தனிமை என்னும் பெரும் பேயை !
தாரமாகப் கொண்டு விட்டேன் !
பிழைப்பைத் தேடும் பிணையக் கைதியாய் !
வாழ்வு முழுதும் ஓடிடும் ஆறாய்!
திக்கற்ற வாழ்வில் நானும் !
திசை மாறிய மானாய் !
விசைத்தறி வந்தபின் !
கைத்தறி கொண்ட !
மனிதனின் மனமாய் !
அலைபாயும் மனதுடன் !
பிறதேசம் வாழும் !
பரதேசி எனக்கு !
என் வீட்டு விழாக்கள் !
என்றும் எனதில்லையே!

கண்டதும் காதல்!

சின்னு (சிவப்பிரகாசம்)
இலை மீது இட்ட!
இருசொட்டு நீரை!
தழை முழுதும் பரப்பி!
தாமரையாய் மலரும்!
தாரகையே!
கரை மீது மோதும்!
அலை போல பார்வை!
கண்டு மீள்வதும்!
காண துடிப்பதும்!
கண்டுமா சிரிக்கிறாய்!
மலை மீது பிறந்து!
மடுவை மணந்து!
மகிழ்வோடு வாழும்!
நிலவாய்!
மாளிகையில் பிறந்து!
மல்லிகையாய் மலர்ந்த!
மரிக்கொழுந்தே எனை!
மணப்பாயோ!
சத்திரத்தில் சந்தித்து !
சடுதியில் முடிவெடுத்து !
காதலிக்க துவங்கிவிட்டேன் !
உண்ண வந்தவளே !
உலகம் அறிந்தவளே !
கணினி மொழி கற்றவளே !
மனதின் மொழி உணர்வையோ !
தடுமாறும் உள்ளத்தில்!
திசைமாறும் எண்ணமோ!
மனதில் வரும் சொல்லையெல்லாம்!
கவிதை என்றே சொல்கிறது!
ஓவியம் வரைந்தாலும்!
காவியம் எழுத!
கவிதை புனைந்தாலும்!
என் நாவில் சிதறும் சொற்களை!
சேர்த்து வைத்தாலும்!
அனைத்தும் சொல்லத் தலைப்படும்!
உன் அழகை மட்டுமே!
துள்ளும் மானும்!
துவண்ட செடியும்!
கோடை வெயிலும்!
கொடும் பனியும்!
பாவையர் கொஞ்சும்!
செல்லக் கிளியும்!
நிறைந்த குளமும்!
வறண்ட நிலமும்!
வாடைக்காற்றும்!
உன்னில் காண்கிறேன்!
உன் !
மோகனப் புன்னகைக்கு, பேசும்!
மொழிகளில் விளக்கம் இல்லை!
நீ !
மூன்று விரல் கொண்டு !
முகம் குனிந்து உண்ணுகையில் !
சிலிர்க்கும் சிந்தனைகள் !
சிதைய மறுக்குதடி !
காணும் முகத்தில் எல்லாம் கண்ணே !
உன் கண்கள் தெரியுதடி !
காரை தடத்தினிலும் !
உன் கால்தடம் தெரியுதடி !
வண்ண உடைகள் எல்லாம் !
நீ உடுத்த வெளிர்க்குமடி !
வாகனப் புகையும் கொஞ்சும்!
பனிபோல தெரியுதடி !
வண்ண தோகை கொண்டு !
வண்ணமயில் ஆடி வந்தால் !
உன் கண்கள் சுழற்றதே !
வண்ண மயில் நாணி !
தோகை உதிர்த்து விடும்!
கொக்கு பறக்கையிலே !
உன் விரல்கள் நீட்டாதே !
மீன்கள் மீன்கள் என்று !
விரல்கள் கொய்து விடும் !
ஆடும் சபைகளுக்கு !
அன்பே நீ போவதே .!
நீ கொஞ்சம் அசைந்தாலே ,!
ஆடும் நங்கையர்கள் !
அடங்கி ஒடுங்கிடுவர் .!
ஆடல் அரசி என்று !
பட்டமும் தந்திடுவார்!
ஆணாய் பிறந்து விட்ட !
ஆணவம் அழியுதடி!
உன் கடைக்கண் பார்வை தந்து !
என் வாழ்வுக்கு அர்த்தம் கொடு

நினைவுகள்

லியோ
தென்றலும் புயலுமாய்
மனம் தொடும் காற்று
நினைவுகள்

வாழ்க்கை

லியோ
ஒரே பத்திரிகையில்
பிறந்த நாள் வாழ்த்தும்
நினைவஞ்சலியும்
வாழ்க்கை...

வெறுமை

அக்மல் ஜஹான்
எப்போதும் முடிவதில்லை.....!
இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்!
இதயம் நிரம்பாத!
செயற்கை வாழ்வின்!
வெறுமைகள்