இலை மீது இட்ட!
இருசொட்டு நீரை!
தழை முழுதும் பரப்பி!
தாமரையாய் மலரும்!
தாரகையே!
கரை மீது மோதும்!
அலை போல பார்வை!
கண்டு மீள்வதும்!
காண துடிப்பதும்!
கண்டுமா சிரிக்கிறாய்!
மலை மீது பிறந்து!
மடுவை மணந்து!
மகிழ்வோடு வாழும்!
நிலவாய்!
மாளிகையில் பிறந்து!
மல்லிகையாய் மலர்ந்த!
மரிக்கொழுந்தே எனை!
மணப்பாயோ!
சத்திரத்தில் சந்தித்து !
சடுதியில் முடிவெடுத்து !
காதலிக்க துவங்கிவிட்டேன் !
உண்ண வந்தவளே !
உலகம் அறிந்தவளே !
கணினி மொழி கற்றவளே !
மனதின் மொழி உணர்வையோ !
தடுமாறும் உள்ளத்தில்!
திசைமாறும் எண்ணமோ!
மனதில் வரும் சொல்லையெல்லாம்!
கவிதை என்றே சொல்கிறது!
ஓவியம் வரைந்தாலும்!
காவியம் எழுத!
கவிதை புனைந்தாலும்!
என் நாவில் சிதறும் சொற்களை!
சேர்த்து வைத்தாலும்!
அனைத்தும் சொல்லத் தலைப்படும்!
உன் அழகை மட்டுமே!
துள்ளும் மானும்!
துவண்ட செடியும்!
கோடை வெயிலும்!
கொடும் பனியும்!
பாவையர் கொஞ்சும்!
செல்லக் கிளியும்!
நிறைந்த குளமும்!
வறண்ட நிலமும்!
வாடைக்காற்றும்!
உன்னில் காண்கிறேன்!
உன் !
மோகனப் புன்னகைக்கு, பேசும்!
மொழிகளில் விளக்கம் இல்லை!
நீ !
மூன்று விரல் கொண்டு !
முகம் குனிந்து உண்ணுகையில் !
சிலிர்க்கும் சிந்தனைகள் !
சிதைய மறுக்குதடி !
காணும் முகத்தில் எல்லாம் கண்ணே !
உன் கண்கள் தெரியுதடி !
காரை தடத்தினிலும் !
உன் கால்தடம் தெரியுதடி !
வண்ண உடைகள் எல்லாம் !
நீ உடுத்த வெளிர்க்குமடி !
வாகனப் புகையும் கொஞ்சும்!
பனிபோல தெரியுதடி !
வண்ண தோகை கொண்டு !
வண்ணமயில் ஆடி வந்தால் !
உன் கண்கள் சுழற்றதே !
வண்ண மயில் நாணி !
தோகை உதிர்த்து விடும்!
கொக்கு பறக்கையிலே !
உன் விரல்கள் நீட்டாதே !
மீன்கள் மீன்கள் என்று !
விரல்கள் கொய்து விடும் !
ஆடும் சபைகளுக்கு !
அன்பே நீ போவதே .!
நீ கொஞ்சம் அசைந்தாலே ,!
ஆடும் நங்கையர்கள் !
அடங்கி ஒடுங்கிடுவர் .!
ஆடல் அரசி என்று !
பட்டமும் தந்திடுவார்!
ஆணாய் பிறந்து விட்ட !
ஆணவம் அழியுதடி!
உன் கடைக்கண் பார்வை தந்து !
என் வாழ்வுக்கு அர்த்தம் கொடு
சின்னு (சிவப்பிரகாசம்)