இன்ப நிலா
பூமியின் மேல் டார்ச்சடிக்க
என் சொந்த நிலா
வீட்டிலே சோர் வடிக்க
அவள் அருகே நான் அமர்ந்து
பற் பல கதை பேச
என் நெசஞ்சிலே அவள் கண்கள்
காதல் கனைவீச
வீணை என வண்டுகள் சத்தமிட
அவள் நடுநெற்றியில்
நானும் மெல்ல முத்தமிட
வெட்க காற்றடித்து அவ
முந்தானை முனுமுனுக்க
சில்லென காற்று வந்து
கதவு சன்னல்ல பூட்டி வைக்க
சத்தமே இல்லாத சாமத்தில்
அவளோடு கலந்திருக்க
திடுக்கிட்டு எழுந்த போது
பக்கத்தில் யாரும் இல்ல
வெக்கத்தில் நான் சிரிக்க
தலையணையின் மேல் இருந்த
பணிமாறுதல் கடிதமும்
நமட்டு சிரிப்பு சிரித்தது.....

சிவபிரகாஷ்