தேடல் துவங்கிய நாளில்!
தேவதை தோன்றினாள்!
இலக்குகள் அற்ற வாழ்வின்!
முகவுரை எழுதினாள் !
அணிகள் சேர்ந்த அங்கம்!
அகவுரை எழுதத் தோன்றும்!
இருமதி கொண்ட மதிக்கும்!
இனிமை கொடுத்திடும் !
அயலவள் எனச் சொன்னேன்!
அனுமதி கோரினாள்!
தந்தேன் எனச் சொன்னேன்!
ஒருமையில் பேசினாள்!
தனியறை எங்கு என்றேன்!
தகவலோ எனக் கேட்டாள்!
தனிமையில் என்று சொன்னேன்!
தறுதலை என்றனள் !
விண்ணில் என்றே சொன்னேன்!
மீன்களா என்றாள்!
உன் கண்கள் எனச் சொன்னேன்!
முத்தங்கள் தந்தாள்!
விதிமுறை என்ன என்றேன்!
விதிகள் இல்லை என்றாள்!
அங்கம் வயல்வெளி என்றதும்!
வரைமுறை என்றனள் !
தேர்தான் என்று சொன்னேன்!
ஊர்வலம் எனச் சொன்னாள்!
மொழிபவள் என்றதும்!
இமைகள் மூடினாள்!
பொதிகை எனச் சொல்ல!
தென்றல் என்றனள்!
உன் குழல் தான் எனக் கேட்டு!
இசைபோல் பேசினாள்!
கனிகள் எனச் சொன்னேன்!
தோப்பில் என்றனள்!
அழகினில் எனக் கேட்டு!
அடித்தே ஓடினள்
சின்னு (சிவப்பிரகாசம்)