தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அவளே.. அவளே!

சத்தி சக்திதாசன்
நெஞ்சமெனும் வானத்தில்!
எண்ணமெனும் தூரிகையால்!
வர்ணம் தீட்டிய வானவில்லாய்!
விளைந்து நின்ற பொன்மயிலே!
உள்ளமென்னும் தடாகத்தில்!
வெள்ளமான அன்பினிலே!
மலர்ந்து நின்ற தாமரையாய்!
மிதந்த வண்ணப் பூங்கொடியே!
பசுமையான இதயத்தினுள்ளே!
பயிராய் வளர்ந்த காதலுக்கு!
மழையாய் உந்தன் புன்னகையால்!
உயிரைத் தந்த மான்விழியே!
விரும்பாக் குணங்கள் மலிந்த!
இதயம் இரும்பாய் ஆனவரிடையே!
கரும்பாய் இனிக்கும் பூங்கொடியே!
காதலுக்கு அருமருந்தாய்ச் சுரந்தவளே

திருட்டு

நிலா
இரவில் ஒளி திருடியதால்
பகலில் ஒளிந்து கொள்கிறாள்
நிலா.

கோவில்

நிலா
உள்ளே கல்லிற்கு பட்டில் அலங்காரம்.
வெளியே பிச்சையெடுக்கும் குழந்தை அம்மணமாய்.
கோவில்.

ஒரு சாண் வயிறு!

ஆர்.எஸ்.கலா
ஒரு சாண் வயிறுக்கு!
மனிதன் தினம் தினம்!
தேடலில் இறங்குகிறான்!
பல வழியைத் தேடி ஓடுகிறான்.!
ஆகாரம் கிடைக்காதவன்!
விதி என்று புலம்புகிறான்!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு!
உழைக்க மார்பை உயர்த்தி!
சூளுரைக்கிறான்.!
ஒரு சாண் வயிறு!
இல்லை என்றால்!
படைத்தவனாலேயே!
மனிதனை அடக்க!
முடியாமல் போகும்!
பசி என்பதை தீர்க்கவே!
உசாராகின்றான் உழைக்க!
உடை விற்கிறான் பொருள் விற்கிறான்!
உடம்பையும் சேர்த்து விற்கிறான்!
கேள்வி எழுப்பினால் வயிற்றைக்!
காட்டுகிறான் இதற்காகத்தான் என்று!
சுய மரியாதை இல்லாமல்!
கௌரவம் பாராமல்!
உறவு மட்டும் இன்றி பிறரிடமும்!
கை ஏந்துகின்றான் ஒரு சாண்!
வயிற்றை நிரப்ப வழியில்லாமல்!
மூச்சுப் போனால் உயிர் இல்லை!
மூச்சு இழுக்கும் போதும் கடமைக்காக!
என்று கூறி ஊத்துகின்றான் பாலை ஒரு சாண்!
வயிற்றை நிரப்புவதிலே குறியாக!
இருக்கின்றான் இறக்கும் தறுவாயிலும்!
உண்மையைக் கூறி கேட்கிறான்!
பொய் சொல்லியும் கேட்கிறான்!
தட்டிப் பறிக்கிறான் உதைத்து வாங்குகிறான்!
கொள்ளையும் அடிக்கிறான் கொலையும் புரிகின்றான்!
வயிற்றுப் பிழைப்புக்கு என்று பெயர் சூட்டுகின்றான்!
ஓராயிரம் குற்றம் புரிகின்றான்!
சாட்சிக்கு ஒரு சாண் வயிற்றை!
காட்டுகின்றான்.!
அறிவு உள்ளவன் தன் வயிற்றையும்!
நிரப்புகின்றான் பிறர் வயிற்றுக்கும்!
சேகரிக்கின்றான் .!
அறிவு கெட்டவன் தன் வயிற்றையே!
போடுகின்றான் பட்டிணி

தகிக்கும் தனிமை!

ஆர்.எஸ்.கலா
அன்புக்காக ஏங்குகின்றேன்!
உண்மை அன்புக்காக ஏங்குகின்றேன்!
ஒன்றே ஒன்று கேட்கின்றேன் அதுதான் !
உண்மை அன்பு!
பணம் இல்லை பாசம் இல்லை!
பந்தம் இல்லை சொந்தம் இல்லை!
சொந்த வீட்டில் நிம்மதி இல்லை!
சென்ற இடத்தில் மதிப்பு இல்லை!
வருவோரும் போவோரும் காட்டும்!
அன்பு உண்மை இல்லை உறவு!
என்று சொல்லி வரும் உறவும் !
நிலைப்பது இல்லை நல்ல ராசி!
இல்லை நான் என்ன செய்வேன்!
தினமும் ஏங்குகின்றேன் உண்மை!
அன்பைத் தேடுகின்றேன்!
சோகத்துக்கு நான் தோழியானேன்!
வெறுப்புக்கு நான் விருப்பானேன்!
ஏமாற்றம் அது என் வீடானது இருந்தும்!
என் இதயம் அதை ஏற்க மறுத்து அன்பை!
நாடுகின்றது தேடுகின்றது!
தினமும் ஏமாற்றம் விடிவு இல்லா!
இருளாட்டம் முடிவில்லா தொடர்கதையாக!
தொடரும் என் ஏக்கம்!

முரண்

-விநா-
விடிந்ததும்
இருண்டு
விடுகிறது
தெருவிளக்கின்
வாழ்க்கை...!!!

ஈழம்

சூர்யா
எம்படை நடக்க
எதிரிகள் தொடை நடுங்கும்...
அயலவன் குடல் அறுக்க
புலிப்படை திமிரி எழும்...
பெண் புலி எதிரில் நிற்க்க
வான் அது உயிர் விடுமே...
மண்ணிலே இரத்தம் என்றால்
புலிகளின் வேட்டை தான்....
தூரத்தில் அலறல் என்றால்
புலிகளின் வருகை தான்...
கண்களில் கோவம் கொண்ட
கருவேங்கை அவர்கள் தான்....
நடையிலே சிங்கம் மிரலும்
யாழியின் வீரம் தான்....
களத்திலே ஆண்மை உணரும்
ஈழத்து பெண்கள் தான்...
மாரிலே இரத்தம் வழங்கும்
எம்மின பெண்கள் தான்...

இனிக் கனவு பார்க்கிலேன்

எசேக்கியல் காளியப்பன்
மழையாக வந்துநான் மனத்துளே இறங்குவேன்!
--மண்ணென ஏன்விழுந்தாய்?!
விளையாடும் தென்றலாய் கிளையாட்டி வருகிறேன்!
--வேரொடும் ஏன்சரிந்தாய்?!
குளிரூட்டும் மலருடன் கொடியெனப் படருவேன்;!
--குடைசாய்ந்து கருகினாய்,ஏன்?!
தெளிவான எண்ணமும் திடமான நெஞ்சமும்!
--தெரியாது சென்றமா னே!!
கோடையில் மழையெனக் கொட்டுவாய் என்றுநான்!
--கொண்டதும் பகற்கன வே!!
மேடையில் மாலையாய் மேல்விழு வாயென!
--மிக,நினைத் ததும்கன வே!!
ஓடையில் உன்னொடும் உருண்டதாய் என்னுளே!
--உணர்ந்த்தும் பொய்க்கன வே!!
பாடையில் மாலையாய் வந்து,நீ விழுவதாய்ப்!
--பார்க்கிலேன் இனிக்கன வே

கதைப்பொருளாய் ஆகுபவர்

எசேக்கியல் காளியப்பன்
மாலுக்கு மருமகனை மனத்துள்ளே நினைத்தவர்கள்!
பாலுக்கும் ‘பார்லிக்கும்’ பைத்தியமாய் ஆவாரோ?!
வேலுக்கும் மயிலுக்கும் வேதனையைச் சொல்பவர்கள்!
காலுக்குத் தள்ளாட்டம் களைப்பால்தான் வேறில்லை!!
தோலுக்கும் சதைகளுக்கும் தொண்டடிமை யாகிடுவோர்!
காலுக்கும் நோயிற்கும் கதைப்பொருளாய் ஆகாரோ?!

அம்மா! என்று

ரா ராஜ்குமார்

மதக்கலவரத்தில்
வெடிகுண்டுகள்...
வெடித்துச்சிதறின
மனித உடல்கள்...
இரத்தவெள்ளமாய்
மக்கள்...
தூரத்தில் ஓர் குரல்
அம்மா! என்று
எந்த மதச்சொல்?