என் தாயின் மடிதனிலே!
ஏழாவது மகவு நான்!
ஏழும் ஏழு விதம்!
எனக்கென தனி விதம்!
கடைக்குட்டி ஆயினேன்!
கடை கடையாய் ஓடினேன்!
கடனாய்க் காபி வாங்கினேன்!
தாயின் தலைவலி தீர உதவினேன்!
செருப்பில்லா பாதங்கள்!
தெருவெல்லாம் என் போன்ற சிறுவர்கள்!
நாலு கிலோ மீட்டர் நடையைக் கட்டி!
நாங்கள் கற்றோம் நாலெழுத்து!
காலை சென்றேன் பள்ளிக்கு!
கிழிஞ்ச கால் சட்டையோடும்!
கிளுகிளுக்கும் அட்டை போட்ட!
கிழிஞ்சு போன நோட்டோடும்!
பள்ளிக் கூடம் முடிந்து வந்து!
பம்பரங்கள் சுற்றினேன்!
பால்கரக்கும் பசு மாட்டினை!
பக்குவமாய்க் குளிப்பாட்டினேன்!
காலம் கடந்திட்டாலும்!
கடந்த காலம் மறக்கவில்லை!
கற்றறிந்த கல்வி அன்று!
கஞ்சி ஊத்துது எனக்கு இன்று!
கல்வி கற்றுத் தந்திட்டக்!
கல்விமான்களை நினைக்கிறேன்!
காலமெல்லாம் நன்றி சொல்லி!
களிப்புடனே வாழ்கிறேன்
ஜான் பீ. பெனடிக்ட்