விதி - இளந்திரையன்

Photo by FLY:D on Unsplash

அம்மி மிதித்து !
அருந்ததி தேடி !
அந்தணன் காட்டிய !
பகலிலும் பார்த்ததாகப் !
பல்லிளித்து !
மோதிரம் மாத்தி !
மொய் எழுதிப் !
போன உறவுகளும் !
சாட்சியாக !
சக வாழ்வுக்காய் !
கைப் பிடித்ததென்னவோ !
உண்மைதான் !
நான் வரும் வரை !
நடு நிசியென்றாலும் !
நாக்கு வரண்டு !
தண்ணீர் குடிக்கும் !
உன்னைப் பார்த்து !
சிரிக்கின்றாள் !
அருந்ததி !
- இளந்திரையன்
இளந்திரையன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.