பழுதடைந்துபோன!
என் வீட்டின் கதவுகளை!
என்றாவது!
நீ தட்டக்கூடும்!
என எதிர்பார்ப்புகளோடும் !
மௌனமாகிப்போன!
என் புல்லாங்குழலின்!
துளைகளில்!
உன் இசை குறிப்புகள்!
வந்தமரக்கூடும்!
என பரிதவிப்போடும்…… !
உன்னை தேடி வந்த!
அந்திமழையின் விசாரிப்புகளுக்கு!
பதில் கூறும் துணிச்சல் அற்று ,!
காத்துக்கொண்டே இருக்கிறேன் .. !
உனக்காக!
நான் வங்கி வைத்த கைகடிகாரம்!
நின்ற பின்னும்!
உன் மீள்வருகைக்காக!
காத்துக்கொண்டே இருக்கிறேன் .... !
உறைந்துபோன!
என நிகழ்காலம்!
மீண்டும் உயிர்பெறும்!
என்கிற பேராசையில் மிதந்தபடி!
காத்துக்கொண்டே இருக்கிறேன் ... !
நீ வரும் வரைக்கும்!
காத்திருத்தலின் வலியை!
உடைந்த!
என் புல்லாங்குழல் வழி!
இசைக்கத்தான் எத்தனிக்கிறேன்,!
அவை மௌனங்களை மட்டுமே!
சொட்டுகிறது !
இசைக்கபடாத என் இசைக்குறிப்புகள்!
மரித்துவிடுமோ!
என அச்சப்படுகிறேன் நான் .!
சீக்கிரம் வந்துவிடு
க.உதயகுமார்