விவரெங்கெட்ட பூக்களும்,வெட்கங்கெட்ட நானும்!!
--------------------------------------------------!
ஒவ்வொரு மூர்க்கமான மோதலிலும்!
மாறி மாறி!
சில பூக்களையும் இலைகளையும்!
இழந்துகொண்டிருந்தது!
காற்றிடம் மரம்.!
வாடிக்கையான சண்டை போல்!
இல்லாமல்!
இன்று கொஞ்சம் உக்கிரமாயிருந்தது!
தள்ளாடியபடியே!
நான் மரத்தினடியில் அமர்ந்தேன்!
சாராய நெடி ஏகமாய் அடித்தது!
குடித்துவிட்டு வந்திருந்த காற்று!
உலுப்பியதில்!
முன்னத்திக் கிளைகளில் ஒன்றிரண்டு!
முறிய தொடங்கின!
மனம் ஏற்கனவே வெகுவாய்!
சோர்வுற்றிருந்தது.!
பூக்களும் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன!
காற்றும் விட்டபாடில்லை.!
உதிர்ந்திருந்தவற்றில்!
ஒன்றிரண்டை கைகளில் வாங்கி!
சோகம் தவிர்க்க வருடினேன்!
விவரங்கெட்ட பூக்களுக்கு!
அப்போதும்!
சிரிப்பதை தவிரவும்!
வேறொன்றும் தெரியவில்லை.!
வெட்கங்கெட்ட நானும்!
சிரிப்பை மட்டும் களவாடி!
வீடு திரும்புகிறேன்
ஜெனோவா