தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உலகின்றி நீர்

ஜி.எஸ்.தயாளன்
பேய் மழையின் விரல்பிடித்து!
ஊரோரம் ஓடும் நதி!
ஊர்ப் பார்க்கும் வெறி கொண்டு கிளம்புகிறது!
ஊழிக் காற்றின் ஓசையில்!
ஊருக்குள் பாய்கிறது வெள்ளம்!
எதிர்கொள்ள எதுவுமின்றி!
மனிதர்கள் கைப்பிசைந்தோம்!
காற்றுப் புகும் இடங்களெல்லாம்!
வெள்ளம் பெருகுகிறது!
பெருவிரல் கணுக்கால் முட்டளவு மார்பு!
கழுத்தென வளரும் ஆலகால விஷநீர்!
பிரிக்கும் மதில்கள் இணைக்கும் சாலைகள்!
அனைத்துமழித்து பெருக்கெடுக்கிறது வெள்ளம்!
மரண ஓலத்தோடு ஓலம் மோதி மின்னல்!
மழை பூமி தொடும் தேவையற்று!
தன்னைப் பெய்து பெய்து கொண்டாடுகிறது!
வரத்து அதிகரிக்க உயர்கிறது வெள்ளம்!
வெள்ளம் பெருவெள்ளம்!
மொட்டை மாடிகளுக்கும் மேலே!
ஓடியாடி நெழிகின்றன பாம்புகள்!
சற்றே நேரத்தில்!
மலைகளும் மூழ்கிச் சாகும்!
கடல் கொள்கிறது!
கடல் காவு கொள்கிறது!
நீர் வானம் இடையே காற்று!
உலகின்றி அமைகிறது நீர்

மல்வத்து ஓயாவில் நீராடல்

பொலிகையூர் சு. க சிந்துதாசன்
தொடர்கிறது!
-------------------------------------------!
மரணத்திலிருந்து மீண்டவர்களுக்காக!
மல்வத்து ஓயாவில்!
புனித நீராடலுக்கு ஏற்பாடு!
நீண்டோடும் அவ்வாற்றை!
முட்கம்பி வேலிகளால் கூறுபோட்டு!
குளிப்பொழுங்கு நடக்கிறது!
இந்த ஆறு என்றும்!
சனத்திரளை!
இம்மாதிரிக் கண்டிராது!
கோடையாற்றில்!
நீர் வற்றென்றாலும்!
வேறு வழியின்றிப் பற்பலருமதை!
நாடத்தான் செய்தனர்!
புனித நீராடல்!
தொடர்ந்தபடியிருக்க!
ஆற்றின் நடையோடு!
சேறு… சகதி…!
மலம்… எனக் கலந்து!
நீரின் நிலை மாறிற்று!
இரத்தக் கறைபடிந்த!
எனது ஆடைகள்!
இன்னும் கழற்றப்படவுமில்லை!
துவைக்கப்படவுமில்லை.!
ஆற்றை வெறித்தபடி பார்த்த!
நானும்!
என்போன்றோரும்!
திரும்பி நடக்கிறோம்!
மல்வத்து ஓயாவில்!
நீராடல் தொடர்கிறது

துடிக்கின்றது.. என்னவள்.. பெறுமதி

கமல்ராஜ்
துடிக்கின்றது என் காதல்.. என்னவள் எங்கே..? பெறுமதியற்றவன் காதலன்!
01.!
துடிக்கின்றது என் காதல்!
-------------------------------!
வாடாத மலராக !
வயதுக்கு வந்த இதழே..! !
வாலிபம் துள்ளுதடி-எனக்குள் !
ஏதேதோ பண்ணுதடி.... !
வார்த்தைகளை உச்சரிக்க !
நாக்குத் துடித்தாலும் !
பார்வையிலே நான் மயங்கி !
புதுமையாய்ப் பார்க்கின்றேன், !
பாவாடைத் தேருன்னை. !
யாரென்று அறியாமல் !
யாசித்தாலும் !
உன்னைத்தான் நேசிக்கின்றேன். !
அட்சயப் பாத்திரமாய் !
குறையாத உன் புன்னகையில் !
புதையுண்ட காதலை !
சம்மத நீரூற்றி !
வேரோடு விழுதாக !
விருட்சமாய் வளர்த்து விடு. !
விழிகளுக்குள் விதைகளை !
பார்த்தவுடன் விதைத்து விட்டேன். !
உரமாக உன் பதிலை !
உயிராகக் கேட்கின்றேன். !
உள்ளவரை நேசிப்பேன் !
உயிராக சுவாசிப்பேன், !
சம்மதம் தந்து விட்டால் !
உனக்காக உயிர் வாழ்வேன்.!
!
02.!
என்னவள் எங்கே..?!
-----------------------------!
முகம் வாடி வருகிறது தென்றல் !
அவள் முகம் காணாது...... !
முற்றத்துக் கோலம் சிதைந்து !
எறும்புகள் விருந்துண்ணையிலே !
புள்ளிவைத்த சித்திரம் !
சிறைவைக்கப் பட்டதுவா? !
திசை மாறிய தென்றல் !
அவள் !
சடைகளை தீண்டாமல் !
சடையின் வாசம் !
சலனப் படுமே!
சாமத்தியம் அறியாமல். !
தூது செல்லும் தென்றலில் !
எத்தனை தூசிக்கள்.... !
தூசிக்கள் வடிவிலும் !
அலைகின்றது துன்பங்கள். !
காத்திருக்கும் பொழுதெல்லாம் !
கற்பனையோ அவள் மீது, !
தனிமையில் மட்டும் !
கண்ணீர்தான் என்னோடு. !
காதலில் தோற்றவன் !
முழுமனிதன். !
வெற்றிகள் கண்டவன் !
அனுபவம் குறைந்தவன். !
கம்பிகள் இல்லாத சிறை வாசம் !
காதலில் மட்டும் !
அனுபவம் தன் புத்தியைத் தட்டும். !
அறியாத காதலுக்கு !
அனுபவமே வெற்றி. !
அவளைக் காணாத போது மட்டுமே !
உணர்கின்றது புத்தி.!
!
03.!
பெறுமதியற்றவன் காதலன்!
-------------------------------!
இதயத்துள் மெத்தையிட்டு !
உயிரினுள் நிழல் பிடித்து !
உனக்காக காத்திருந்தேன். !
நீயோ.....! !
துணையோடு இணையாக !
என்னருகில் வந்துநின்றாய். !
கண்களில் மழையடிக்க !
கால்கள் தானாய் உதறிக்கொள்ள !
கன்னத்தில் கைகள் வந்து !
கதையேதோ பேசுதடி...!
எண் திசையும் எப்படித்தான் !
என் கதை பரவியதோ..? !
தேவதாஸ் பட்டியலில் !
தேடாமல் ஒரு வாய்ப்பு !
தேடி என்னை வருகின்றது.... !
புன்னகையாய் நீ வந்து !
புயலாகச் சென்றாய் !
புழுதியெல்லாம் என்னில் குவிந்து !
தடம்மாறிப் போனேன் !
தெருவோரச் சிலையாக !
வெப்பம் தாங்கும் கள்ளிச் செடியாய் !
நீயின்றி வாழ்கின்றேன். !
வெண்மை முகிழுக்குள் !
காரிருளாய் இணைகின்றேன். !
கவலைகளை மறைத்து !
மழையாக கண்ணீர் சிந்த. !
துண்டாய் உடைத்த மனதை !
தேடி எடுப்பது எங்கே..? !
தெருவோர நாய்களெல்லாம் !
ஒன்றுசேர்ந்தது அங்கே. !
எத்தனை கேள்விகள் என்னிடம் !
உன் பெயரைக் கேட்டு !
இராணுவ இரகசியமாய் !
பூட்டி வைத்தேன் கனவோடு சேர்த்து. !
பெறுமதி இல்லாத சதங்களாய் !
எங்கோ அலைந்து திரிகின்றேன், !
நிழலைப் பிரிந்து !
நினைவோடு வாழ்கின்றேன்

காணாமல் போன அம்மிக்கல் !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
பெருநாள் பிறை!
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி!
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை!
பச்சை வாசனை பக்கத்தில் நான் !
நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு!
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்!
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்!
அந்த அரைத்த சம்பலுக்காய்!
உயிர் விடத் தோணும். !
அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்!
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்!
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்!
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது. !
அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை!
தண்ணீர் விட்டுக் கழுவவும்!
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்!
சின்னதாய் ஏற்பாடுகள் !
அம்மிக்கல்லின் பின்னால்!
நீள் கம்பி வைத்த!
சில் காற்று ஜன்னல் !
கருங்கல் அம்மிக்குள்!
மெல்லிய அதிர்வுடனான!
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு!
பல சமயங்களில் உணர்த்தி நின்றது. !
முன்றல் கொய்யாமரம்!
வளையங்கள் கூட்டிக்கொண்ட!
பின்னொரு கோடை நாளில்..!
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது. !
அம்மிக்கல்லும் இல்லை!
சில் காற்று ஜன்னலும் இல்லை!
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு!
ஒரு!
மின்சார மிக்ஸி…!

என்னவர்களை நோக்கியே

நடராஜா முரளிதரன், கனடா
தொடைகளுக்குள்!
அழுந்தி நெரியும்!
யோனிகளை!
அளவளாவவே!
எனது பார்வை!
தெறித்தோடுகின்றது!
முனைதள்ளி நிற்கும்!
மேடுகளையும்!
நுனிப்புல் மேய்ந்தவாறே!
மனைவியோடு!
பிள்ளையோடு!
நண்பனோடு!
பேசாத!
கனிவான வார்த்தைகள்!
அங்கு கொட்டுகின்றன!
அன்றொரு நாள்!
யேசு வாங்கிப்!
பெற்றுக்கொண்ட!
கற்களைக் கூடைகளில்!
சேகரித்துக்கொண்டு!
எறிவதற்காய்!
எல்லோரையும் நோக்கி!
குறிபார்த்தல்!
தொடருகிறது.!
வார்த்தைகளை!
இரவல் வாங்கியவனாகி!
விடக்கூடாது!
என்பதற்காய்!
வாசித்தலையே மறுத்து!
துறவறம் பூணுகின்றேன்!
ஆயினும்!
பிரபஞ்சமெங்கணும் இருந்து!
எனக்கான!
படிமங்களை வேண்டியும்!
இன்னும் அதற்கு மேலாயும்!
இரந்து வேண்டி!
இன்னுமோர் தவத்தில்!
மோனித்திருப்பதாய்!
கூறிக்கொள்ளுகின்றேன்!
எனினும்!
ஓங்கியொலிக்கும்!
மனித ஓலம்!
பெருக்கெடுத்தோடும்!
மனிதக் குருதி!
மூச்சுக் குழல்களை!
அடைத்து நிற்கும்!
பிணவாடை!
என்னை மீண்டும்!
என்னவர்களை!
நோக்கியே!
அழைத்துச் செல்கிறது

ஆசிரியர்கள்!..சோகம்..தாய்மை

முனைவென்றி நா சுரேஷ்குமார்
ஆசிரியர்கள்!.. சோகம்.. தாய்மை!!
01.!
ஆசிரியர்கள்!!
-----------------!
வாழ்க்கைப் பயணத்தில்!
திசைகள் தெரியாமல்!
தத்தளிக்கும் குழந்தைகட்கு!
கலங்கரைவிளக்கமாய்!
உங்கள் போதனைகளே!!
பள்ளிக்குச் செல்கின்ற!
பிள்ளைகள் மனதை!
பண்படுத்துபவை!
உங்கள் போதனைகளே!!
அன்னையும் தந்தையும்!
முதலிரண்டு கடவுள்களென்றால்!
மூன்றாவது கடவுள்!
நீங்கள் தானென்று!
சொல்லி வைத்தார்கள்!
எம்முன்னோர்கள்!!
இன்னும் சொல்லப்போனால்!
மாதா பிதா!
குரு தெய்வம் என!
உங்களுக்குப் பிறகுதான்!
தெய்வம்!!
களிமண்ணுங்கூட!
பிடிப்பவர் பிடித்தால்தான்!
பிள்ளையார் ஆகுமாம்!!
உங்களின்!
அன்பான அரவணைப்பே!
பிஞ்சு உள்ளங்களை!
நெஞ்சில் உரமிக்க!
நேதாஜியாய்...!
நேர்மைத் திறங்கொண்ட!
காந்தியாய்...!
பாட்டுத்திறமிக்க!
பாரதியாய்...!
அன்புக்கே அன்னையான!
தெரசாவாய்...!
தொண்டுகள் செய்யும்!
தேசத்தலைவனாய்...!
மாற்றுகிறது!!!
மாற்றங்களை நிகழ்த்துவது!
நீங்கள்!!
உங்களை!
வணங்கி மகிழ்வதில்!
பெருமை கொள்கிறோம்!
நாங்கள்!!!
!
02.!
சோகம்!
--------------!
நேற்று நீ!
என்னுடைய காதலி!
இன்று நீ!
வேறு ஒருவனுக்கு மனைவி!
எப்போதும்!
என் நினைவினில் இருக்கும்!!
என் பெயரைப் போலவே!
உன் நினைவுகளும்...!
தயவுசெய்து!
இனி என்னை!
நேசிக்கவோ...!
என் கவிதைகளை!
வாசிக்கவோ!
செய்யாதே...!!
பச்சிளங்குழந்தை!
நீ!!
உன் பிஞ்சு உள்ளத்தால்!
தாங்கிக் கொள்ள முடியாது!!!
என் கண்களில் இருந்தும்!
என் கவிதைகளில் இருந்தும்!
வழிந்திடும் சோகத்தை...!
!
03.!
தாய்மை!!
--------------!
நீண்டதொரு சாலையில்!
மிதிவண்டியை இழுத்தபடியே!
என்னோடு!
பேசிக்கொண்டே நடந்தாய்!
நீ!!
நாமிருவரும்!
தற்காலிகமாய் பிரியவேண்டும்!
என்பதை!
குறிப்பால் உணர்த்தியது!
சாலையின் பிரிவு!!
என்னிடம் விடைபெற்றபடியே!
சாலையின் வலதுபுறமாய்!
அழுத்தினாய் நீ!
உன் மிதிவண்டியை!!
என் கண்ணைவிட்டு!
நீ மறையும்வரை!
உன்னை!
பதைபதைக்கும் உள்ளத்தோடு!
பார்த்துக் கொண்டிருந்தேன்!!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு!
உற்சாகமாய்க் கிளம்பும்!
தன் குழந்தை!
கீழே விழுந்துவிடக்கூடாது!
எனத் தவிக்கும்!
தாய் போலவே

ஏது செய்வது??

த.எலிசபெத், இலங்கை
தமிழ் காற்றை!
தரணியெங்கும் சுவாசித்து-நல்ல!
தலைமைகள் உருவாகிட!
தலைவிதிகள் செய்திடலாம்...!
பூமியெங்கும்!
பூத்துக்கிடக்கும்!
பூரிப்புக்களெல்லா மொன்றாக்கி-புது!
பூலோகம் செய்திடலாம்...!
கண்மணிக்குள் கலந்திருக்கும்!
கனவுகளையும்!
கல்லுக்குள் ஒளிந்திருக்கும்!
கலைகளையும் புனரமைத்து!
கலியுகம் செய்திடலாம்...!
விண்ணுக்குள் புகுந்திடும்!
விஞ்ஞானம் போல!
விளைநிலங்களில்-வறுமையகற்றும்!
வித்தைகள் செய்திடலாம்...!
காலங்காலமாய்!
காதல் வளர்த்து!
கல்லறைகளமைத்திட்ட நாம்!
கல்யாணங்களை முறித்திடும்-காதலுக்கு!
கல்லறை செய்திடலாம்...!
எதுவுமற்ற மடமைகளகற்றி!
எண்ணற்ற எண்ணங்கள் சூழ!
ஏதேனும் செய்திடலாம்-மனிதத்தை!
எய்திடலாம்

தியாகிகள்

இராமசாமி ரமேஷ்
வலியைப் பொறுத்துக்கொண்டு!
ஆசைகளை மறைத்துக்கொண்டு!
தூக்கம் மறந்து!
உணவைத் துறந்து!
தன்னுள்ளே!
இன்னொரு உயிரைத் தாங்கிடும்!
அன்னை...!
தனக்கு கிடைப்பதில்!
அதிகமாய் பிரித்து!
தம்பிக்கும் தங்கைக்கும்!
தலைவருடி உண்ணக்கொடுத்து!
தாய்க்கு உதவியாய்!
தானே இருந்துகொண்டு!
தம்பியை பள்ளிக்கு!
அனுப்பி வைக்கும்!
அக்கா...!
தோல்விகள் வரும்போது!
உள்ளம் நொந்து!
உணர்வுகளினால் கட்டுண்டு!
வாழ்க்கையை வெறுக்கும்போது!
பாசமாய் அருகிருந்து!
நேசமாய் எடுத்துரைத்து!
தோழமையால் தூக்கிவிடும்!
தோழி...!
தாலி வாங்கியதற்காய்!
நம்மை சேயாகவும்!
தன்னை தாயாகவும் மாற்றி!
இன்பம் துன்பம்!
அத்தனையிலும் பங்கெடுத்து!
நம் மரணத்திலும் பங்கெடுத்து!
இன்னொரு அன்னையாய்!
கூடவே வரும்!
மனைவி...!
எத்தனையோ!
தியாகிகள் இருந்தாலும்!
அத்தனைபேரையும் மிஞ்சிய!
தியாகிகள் யாரென்றால்...!
அவர்கள் பெண்களைத் தவிர!
வேறு யாராக!
இருக்கமுடியும்...?

இறந்தவர்களின் கைகள்

கே.பாலமுருகன்
அந்த மங்கிய!
நீர் முகப்பில்!
அவர்களின் கைகள்!
நெருங்கி வருகின்றன!!
நீர் அலைகளில்!
அவர்களின் கைகள்!
விட்டுவிட்டு தவறுகின்றன!!
எப்பொழுதோ !
ஏதோ ஒரு பொழுதில்!
அவர்களின் கைகள்!
உயிர் வாழ வேண்டி!
நீர் முகப்பின் மேற்பரப்பில்!
அசைந்து அசைந்து!
எத்தனை பேர்களை!
அழைத்திருக்கும்!!
இன்று!
அது இறந்தவர்களின்!
கைகள்!!
“எத்தன பேரு !
இங்க உழுந்து!
செத்துருக்கானுங்க. . .!
இந்தத் தண்ணீ!
அப்படியே ஆளே!
உள்ளெ இழுத்துரும்”!
நீர் முகப்பின்!
அருகில் அமர்ந்துகொண்டு!
ஆழத்தை வெறிக்கிறேன்!!
மங்கிய நிலையில்!
ஓர் இருளை!
சுமந்திருக்கிறது!!
இருளுக்குள்ளிலிருந்து!
எப்பொழுது வரும்!
இறந்தவர்களின் கைகள்?!
கே.பாலமுருகன்!
மலேசியா

தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா

வசீகரன்
பல்லவி!
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன்!
தாய் மண்ணை முத்தமிடு தமிழா!
ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன்!
ஈர மண்ணை அள்ளியெடு தமிழா!
எம் மண்ணை அள்ளித் தின்றேனும்!
நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம்!
குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை!
எதிரியின் குண்டுகள் தின்கிறதே!
போரிலே பாயும் பிள்ளைகளை!
பதுங்கிடும் குழிகள் காக்கிறதே!
!
சரணம்-1!
வீட்டினை இழந்து நாட்டினை இழந்து!
காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா!
உணர்வினை இழந்து உறவினை இழந்து!
சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா!
போரை நிறுத்தென தமிழரின் குரல்கள்!
உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே!
செவிகளை விழிகளை மூடிய உலகம்!
செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே!
எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து!
ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே!
!
சரணம்-2!
உதிரத்தை கொடுத்து உயிரையும் கொடுத்து!
போரிலே நாங்கள் வெல்வோம்!
நீதிகள் கேட்டு நியாங்கள் கேட்டு!
எரியும் நெருப்பிலே நாங்கள் நடப்போம்!
எங்கள் சோகத்தை கழுவிடும் கண்ணீர்!
தமிழகக் கரைகளை நனைக்கிறதே!
எங்கள் உயிர்களை விதைக்கும் நிலங்களை!
எதிரியின் கைகளில் கொடுப்பதா!
ஏழுகோடி தமிழரும் எழுந்து வந்தால்!
எங்கள் துயரங்கள் ஓடி மறையாதா!
தமிழக உறவே தமிழக உறவே!
தை பொங்கி நீங்கள் எழுகவே!
!
-வசீகரன்!
நோர்வே!
11.01.2009