அந்த மங்கிய!
நீர் முகப்பில்!
அவர்களின் கைகள்!
நெருங்கி வருகின்றன!!
நீர் அலைகளில்!
அவர்களின் கைகள்!
விட்டுவிட்டு தவறுகின்றன!!
எப்பொழுதோ !
ஏதோ ஒரு பொழுதில்!
அவர்களின் கைகள்!
உயிர் வாழ வேண்டி!
நீர் முகப்பின் மேற்பரப்பில்!
அசைந்து அசைந்து!
எத்தனை பேர்களை!
அழைத்திருக்கும்!!
இன்று!
அது இறந்தவர்களின்!
கைகள்!!
“எத்தன பேரு !
இங்க உழுந்து!
செத்துருக்கானுங்க. . .!
இந்தத் தண்ணீ!
அப்படியே ஆளே!
உள்ளெ இழுத்துரும்”!
நீர் முகப்பின்!
அருகில் அமர்ந்துகொண்டு!
ஆழத்தை வெறிக்கிறேன்!!
மங்கிய நிலையில்!
ஓர் இருளை!
சுமந்திருக்கிறது!!
இருளுக்குள்ளிலிருந்து!
எப்பொழுது வரும்!
இறந்தவர்களின் கைகள்?!
கே.பாலமுருகன்!
மலேசியா
கே.பாலமுருகன்