துவாரகன்-!
இந்த நாய்கள் !
எப்போதும் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன.!
இரவு பகல் நடுச்சாமம் !
எந்நேரமும் நாய் குரைப்பு.!
எக்கணத்திலோ,!
எப்பொழுதிலோ,!
வரப்போகின்ற சாவுக்கே!
கலங்காத நாங்கள்!
இந்த நாய் குரைப்புக்களுக்கு மட்டும் !
கலங்க வேண்டியிருக்கிறது.!
மார்கழி மாதத்துக் கூதற் குளிர்கால நடுக்கம்போல், !
ஒரு முதியவரின் தளர்வைப்போல், !
எல்லாமே இந்த நாய்குரைப்புக் காலங்களில் !
முளைத்து விடுகின்றன.!
அந்தக் காலங்களில்…!
இந்த நாய்கள்!
சுடலையிலிருந்து !
புளியமரங்களிலிருந்து !
நடந்து சென்ற பேய்களைப் பார்த்தும் !
வானத்தைப் பார்த்தும் !
கூரையைப் பார்த்தும்!
குரைத்த காலங்கள் போய்விட்டதாக !
என் அம்மாச்சி சொன்னது ஞாபகம். !
இப்போ !
எங்கள் காலங்களுடன் !
குரைத்துக் கொண்டிருக்கின்றன.!
மழைபெய்து ஓய்ந்த !
மந்தார வேளைகளில்தான் !
தடிகளுடனும் வேட்டைநாய்களுடனும் !
எங்களுர் மனிதர்கள் !
முயல் வேட்டைக்குப் புறப்படுவார்கள்!
அந்தக் காலங்கள் கறங்குபோல் சுழன்று !
இப்போதும் திரும்பிவிட்டனபோலும். !
இறந்த காலங்களும்!
நிகழ்காலங்களும்!
எதுவெனப் புரியாமல்!
விறுவிறுவென வலிக்கும் தேள்கடிபோல் !
என் மூளைக்குள் எல்லாமே குழம்பிப்போயுள்ளது.!
இப்போ!
இந்த நாய்கள் !
குரைக்காது கடித்து விட்டால்கூடப் !
போதுமாயிருக்கிறது.!
அப்போதாவது!
தொப்புளைச் சுற்றி !
ஊசியைப் போட்டாவது தப்பிக்கொள்ளலாம்.!
271020070815