பேய் மழையின் விரல்பிடித்து!
ஊரோரம் ஓடும் நதி!
ஊர்ப் பார்க்கும் வெறி கொண்டு கிளம்புகிறது!
ஊழிக் காற்றின் ஓசையில்!
ஊருக்குள் பாய்கிறது வெள்ளம்!
எதிர்கொள்ள எதுவுமின்றி!
மனிதர்கள் கைப்பிசைந்தோம்!
காற்றுப் புகும் இடங்களெல்லாம்!
வெள்ளம் பெருகுகிறது!
பெருவிரல் கணுக்கால் முட்டளவு மார்பு!
கழுத்தென வளரும் ஆலகால விஷநீர்!
பிரிக்கும் மதில்கள் இணைக்கும் சாலைகள்!
அனைத்துமழித்து பெருக்கெடுக்கிறது வெள்ளம்!
மரண ஓலத்தோடு ஓலம் மோதி மின்னல்!
மழை பூமி தொடும் தேவையற்று!
தன்னைப் பெய்து பெய்து கொண்டாடுகிறது!
வரத்து அதிகரிக்க உயர்கிறது வெள்ளம்!
வெள்ளம் பெருவெள்ளம்!
மொட்டை மாடிகளுக்கும் மேலே!
ஓடியாடி நெழிகின்றன பாம்புகள்!
சற்றே நேரத்தில்!
மலைகளும் மூழ்கிச் சாகும்!
கடல் கொள்கிறது!
கடல் காவு கொள்கிறது!
நீர் வானம் இடையே காற்று!
உலகின்றி அமைகிறது நீர்
ஜி.எஸ்.தயாளன்