தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பனிப்பிரதேச பேரழகி

ரசிகன்!, பாண்டிச்சேரி
ஒரு!
வெளிர்நீல மைதானத்தின் கீழ்!
பனிக்குவியல்களை உரிமை கோர!
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!!
கொஞ்சம் எடுப்பாகவும்!
கொஞ்சம் மிடுப்பாகவும்!
வண்ணம் பூசிக்கொள்கின்றன!
அவள் அழகுகள்!!
மிதமாய்!
தூறல் விட்டுக்கொண்டே !
அங்குமிங்குமாய்!
சில புன்னகை மழைகள்...!
ஆர்குட்டையோ!
முக நூலையோ!
இன்ன பிற சமூக வலைத்தளங்களை !
கவர்ந்து விட எத்தனிக்க!
முற்றிலுமாக!
முடங்கிக்கொள்கிறாள்!
ஒரு !
குளிர் தாங்கும் மேலாடையில்!!

மாசாய்… வழியில்... நல்ல தாய்

செண்பக ஜெகதீசன்
மாசாய்…!
காசிருந்தால் ஒருபேச்சு, !
இல்லையெனில் ஒருபேச்சு, !
இந்த மனிதனுக்கு என்னாச்சு, !
இவன் கண்டுபிடித்தான் காசு. !
இது ஆகிவிட்டது !
இனத்துக்கே மாசு…!!
இந்தக் கடையில்…!
காசினி என்பது !
காலதேவன் நடத்தும் !
கள்ளுக் கடைதான், !
இங்கு !
ஓசியில் குடிக்கவும் !
காசுமிகக் குறைவாய்க் கொடுத்து !
ஆசை மிகுதியில் !
அதிகம் குடிக்கவும் !
காத்திருப்பவர்கள்தான் - !
மனிதர்கள்…! !
கற்றாலும்…!
கற்றுக்கொள்ள !
கலாசாலைகள் இல்லாமலே !
கற்றுக்கொள்கின்றன, !
காட்டு மிருகங்கள் !
அதனதன் !
கலைகளை மட்டும், !
கலைபல !
கற்கிறான் மனிதன் !
கலாசாலையில், !
ஆனாலும் !
கற்காலத்தைத்தான் !
காட்டுகிறது அவன் பண்பு…! !
கல்லாய்…!
கல்லில் வடித்த சிலையினிலே !
மனிதன் !
கடவுளைக் காட்டுகிறான், !
கடவுள் படைத்த மனிதன் !
ஏனோ !
கல்லாய் மாறிவிட்டான்…!!
வழியில்...!
வாழ்க்கை !
வழிப்போக்கன் நான், !
வழியில் பார்த்தேன் -!
காலம் என்னைக் !
கடந்து சென்றது, !
கண்ணாடியில் பார்த்தபோது !
கண்டது -!
களவாடப்பட்டது !
என் !
இளமைதான்...!!
அந்தநாள்…!
காலையில் !
கண்விழித்து எழுந்தால்தான் !
மனிதனுக்கு அது !
மறுநாள், !
அல்லது அது !
அவன் நினைவு நாள்…!!
நல்ல தாய்.!
நல்லதாய் !
நாகரீகமானதாய் !
தாகம் தீர்ப்பதாய் !
தரித்திரம் போக்குவதாய் !
சரித்திரம் படைப்பதாய் !
சாதாரணமாய் இல்லாததாய் !
வேதனை தீர்ப்பதாய் !
வெற்றியைத் தருவதாய் !
சுற்றம் சேர்ப்பதாய் !
சூழ்ச்சி அறுப்பதாய் !
வாழ்த்தி நிற்பதாய் !
வரம்பல தருவதாய் !
சிரமம் குறைப்பதாய் !
சீரெலாம் செய்வதாய் !
பாரெலாம் உயர்வதாய் !
பலனை எதிர்பாராததாய் !
உலகுக்கு உதவுவதாய் !
உயிரைத் தருவதாய் !
உள்ளவள் தாய் - !
உன்னைப் பெற்ற தாய்...!!
!
--செண்பக ஜெகதீசன்…!
()

கவிதைக்காரன்

சிவ. தினகரன்
கவிதைக்காரன்!
சொந்தமாய்!
ஏதும்!
எழுதுவதில்லை!
எதிரில் !
சுருங்கிய!
தேகத்துடன்!
வரும்!
மோர்!
கிழவியின்!
கூடையிலிருந்து!
முதல் கவிதை!
பருகிவிடுகிறான்!
ஓடும்!
ரயிலில்!
நடந்து!
வரும் !
விழியிழந்த!
பாட்டுக்காரனின்!
சட்டைப்பையிலிருந்து!
மற்றொன்று!
மருத்துவருக்கு!
காத்துக்கிடக்கும்!
இருக்கையின்!
பின்புறமிருந்து!
கிழித்துக்கொண்டு!
மருந்தை!
மறந்து!
வெளியேறுகிறான்.!
இருள்!
வீட்டின்!
கொல்லைபுற !
குழாயில்!
சொட்டும்!
இசையிலிருந்து!
யாருக்கும்!
தெரியாமல் !
எடுத்ததை!
எழுதுகிறான்!
திருடி!
எடுத்த!
மகிழ்ச்சியை!
இறகை வருடி!
கிடைத்த!
சோகத்தை !
சேர்த்து!
இனிதாய்!
முடிகிறது !
ஒரு!
தொகுப்பு.!
எல்லா!
வெளியும் !
கவி!
நிறைவதால் !
சொந்தமாய்!
ஏதும் !
எழுதுவதில்லை!
கவிதைக்காரன்.!
!
- சிவ. தினகரன்!
குன்றத்தூர்

காதலே

நிர்வாணி
என்றும் உனை நான் மறவேன்!
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை!
இரண்டாம் நாளில் நீ பேசிய!
முதல் வார்த்தை!
மூன்றாம் நாளில் .....!
எதையும் மறவேன் அன்பே!
மறக்கவும் முடியாது!
இன்னொரு காதலி கிடைக்கும்வரை

ஆழியின் சிரிப்பு

தேவஅபிரா
பெருவிசும்பின் தொன்மையின்கீழ் !
மரத்தூரிகைகள் உலையும் காற்றில் !
மரணத்தின் கேள்வியை விட !
மரணித்தவர்களின் கேள்விகள் வலுக்கின்றன... !
கையறு நிலையின் காலம் !
அதோ என் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. !
இவ்வெளியோ மண்ணோ எனதல்ல. !
நான் உங்களைக் கேட்க விரும்புவதெல்லாம்: !
என் கால் நனைத்த என்கடலின் மண்துகள்கள் !
தட்டிப்பிரிந்த அக்கடைசி நாளில் !
கடல் என்னைப்பார்த்துச் சிரித்ததா? !
ஐப்பசி 2002 !
-தேவஅபிரா puvanendran@home.nl !
**** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன

எனக்குள் நான்

எதிக்கா
எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் !
சிந்தனைகளை-மெலிதாய் !
தட்டியெழுப்பி !
என்னோடு கொஞ்சம் !
பேசமுற்பட்டபோது.. !
இறந்துபோன காலத்தின் !
நினைவுகள் மட்டும்-இன்னமும் !
இறக்காமல் !
நெஞ்சை வேகமாய் மோதிச்சென்றது !
வார்த்தைகள் மெதுவாய் அடங்க !
தர்க்கம், குதர்க்கம் !
எல்லாமே ஓய்ந்துவிட்டது !
பரிவு, இரக்கம்கூட !
கொஞ்சம் கொஞ்சமாய் !
குறைந்துவிட்டது !
பந்தம், பாசம் !
எல்லாமே போலி வேசம் !
மனம் வேதனையுடன் ஓலமிட்டது !
இதுவரையில் அணிந்திருந்த-அவர்களின் !
முகமூடிகள் எல்லாம் கிழிந்து !
உருக்குலைந்த நிலையில் !
நிஜமான முகங்கள் என்முன்னிலையில் !
தோற்றமளித்தது !
எனக்கென யாரும் இல்லை !
தொண்டைக்குழி அடைத்து-மனம் !
விம்மிக் கலங்கியது-ஆனால் என் !
சிந்தனை வெகுவேகமாய் !
அதை நிராகரித்துச் சென்றது !
”உறவு என்று எதுவும் இல்லை” !
நண்பனின் வாசகம் -நெஞ்சில் !
அடிக்கடி வந்துபோனது !
மளுங்கிப்போன பார்வை !
மெல்ல விலக !
தெளிவான பார்வைக்குள்-பல்வேறு !
விம்பங்களாய் நான் !
”இன்பம் துன்பம் எதுவந்தாலும் !
உன்னோடு நான் இருப்பேன் !
துவழாது துணிந்து நில்!” எனக்குள் இருக்கும் !
”நான்” ஏகாந்தமாய் என்னோடு !
பேசிவிட்டுச் சென்றது !
இது போதுமெனக்கு !
நெஞ்சம் கல்லாகிறது

இவர்களெல்லாம்

இளந்திரையன்
காற்றலையில் !
சேதி சொல்லும் !
மனம் அழுது !
கண் துடைக்கும் !
பத்துப் பேர் பலி !
பயங்கரவாதம் !
குண்டு வெடிப்பு !
குவிந்தது !
பிணமலை !
கட்டிடக் காட்டினுள் !
கற் குவியலுள் !
காணாமல் போயினர் !
பரிதாபம் !
ஆயிரம் போதுமா? !
பத்தாயிரம் அனுப்பு !
பாதுகாப்புப் (!) !
படைகள் !
மண்ணின் !
முதல்வர்கள் !
மதத்தின் !
தலைவர்கள் !
பணத்தின் !
முதலைகள் !
இவர்களெல்லாம்... !
எந்தக் கிரகத்து !
தேவர்கள் !
இன்னும் !
எங்கள் பூமியில் !
யுத்தங்கள்

சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்

த.எலிசபெத், இலங்கை
ஞாயிறு வாராதா என்று!
ஞாபகத்தில் உளைகின்றது மனது...!
சிவப்பு நாளை கலண்டரில்!
கண்டவுடன் வரும் குதூகலிப்பு!
மேலதிக வேலையென்று பறக்கும்!
அப்பாவினால் இப்போதெல்லாம்!
பிடிக்காமலே போனது...!
!
கண்விழிக்கையில்!
உறங்கும் அப்பா நான்!
கண்ணுறங்கையில் வந்துதரும்!
முத்தத்தினை தூக்கத்தில்!
தட்டிவிடுகின்றேன்...!
பேச்சுப்போட்டியில் பெற்ற‌!
முதற்பரிசு கூட இன்னும்!
வராந்தாச்சாலை மேசையில்!
அப்பாவின் வாழ்த்துக்காய்!
ஏங்கிக்கொண்டிருக்கின்றது...!
பாலர்வகுப்பு வரை!
என்னோடு வந்த அப்பா!
டாலர்களின் மதிப்பேறியதும்!
ரொக்கத்தின் பின்னே ஓடியலைகின்றார்...!
மாலைநேர சைக்கிளோட்டம்!
மழைநாளின் ஐஸ்கிரீம்!
சாலையோரம் கைகோர்த்த நடை!
சாப்பாட்டுக்கடை தேடுமென் பிடிவாதம்!
அப்பாவின் தோளில் குதிரையோட்டம்!
அவர் மடியில் ஆட்டம்பாட்டம்!
தப்பாமல் தருகின்ற செல்லமுத்தம்!
தலைகோதும் விரல்கள் - எல்லாமே!
தாள்களுக்குள் அடங்கிப்போய்!
தாராளமாகவே இடைவெளியை!
விசாலப்படுத்தி விட்டிருந்தது....!
வாங்கிவந்த இனிப்பையூட்ட‌!
வாசலிலிருந்தே கூப்பிடுமென்!
அப்பாவின் குரல்கேட்க‌!
இப்போதெல்லாம்!
ஆசைப்பட மட்டுந்தான் முடிகின்றது...!
!
பாசத்தை நிரூபிக்க‌!
பணத்தை நிரப்ப வேண்டியதில்லை!
என்றுணர்த்த நானின்னும்!
வாழ்க்கையை படிக்கவில்லை....!
!
சொத்துசுகத்தினால் மட்டுமே -தன்!
சொந்த மகளின் சோகம்!
தீராதென்றுணர அப்பா இன்னும்!
உறவுகளை படிக்கவில்லை

புவி வெப்பமும் பொங்கலும்

ஜான் பீ. பெனடிக்ட்
வட அமெரிக்கா...!
கடும் குளிர் ஜனவரியும்!
கதகதப்பா யிருக்குதிங்கே!
கால நிலை மாற்றத்தின்!
காரணி யிதுதானோ?!
தமிழகம்...!
பருவம் வருதுன்னு!
பயிரிட்ட நெல் வயலெல்லாம்!
பருவமழை பொய்த்ததனால்!
பட்டு அழிஞ்சு போனபின்னே!
பரவலாக (பருவ)மழை பெய்தும்!
பலனின்றிப் போனதங்கே!
தாமதமா மழைபெஞ்சு!
தாமதமா பயிர்செஞ்சா!
தை மாதம் விளையாது-விவசாயிக்கு!
தைப் பொங்கல் இனிக்காது!
கால மாற்றத்திற் கேற்ப!
காலண்டரை மாற்றுங்களே-அறுவடைவரை!
தள்ளிக் கொஞ்சம் போடுங்களே-பொங்கலை!
தள்ளிக் கொஞ்சம் போடுங்களே!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

ஞான சூனியம்

த.சு.மணியம்
வயதுமோ மூன்றில் அன்று!
வந்தவர் கொடுத்த பாலால்!
வினையது பலனும் கண்டு!
விதைத்தவன் பாடல் கேட்டு!
தினமது கேணிக்கட்டில்!
திருவருள் கிட்டும் எண்ணி!
பலனது பாலும் கிட்டா!
பாதியாய் வயதும் போச்சு.!
பூட்டிய கதவை அன்று!
பாட்டிலே திறந்தார் கேட்டு!
பூட்டியே நானும் வீட்டை!
றோட்டிலே நின்று பாட!
கேட்டுமே போவோர் சொன்ன!
கேலிகள் பலவும் கேட்டும்!
நீட்டியே பாடி நானும்!
நிற்கிறேன் மருந்து வாங்க.!
ஆற்றிலே போட்டதெல்லாம்!
குளத்திலே எடுத்தார் கேட்டு!
நேற்றுமே வழியில் போட்ட!
என் பணம் தேடி நானும்!
முற்றுமே கிடைக்கும் எண்ணி!
வங்கியைக் கண்டபோது!
போட்டவன் எனது காட்டும்!
திரும்பியே வரவும் காணோம்.!
நரிகளைப் பரிகளாக்கி!
நற்பலன் பெற்றார் கேட்டு!
மருவியே எனது காரை!
மாற்றிட நினைத்த போது!
சுருதிகள் ஏதுமற்று!
சுத்தமாய் முடக்கம் காண!
கருதியே வேலை செல்லா!
காண்பலன் வேலை போச்சு.!
ஞானத்தைத் தேடி நானும்!
நாட்பல அலைதல் பார்த்தும்!
ஞானமும் என்னைக் காண!
நாணியே ஒதுங்கிக் கொள்ள!
ஓரமாய் தலையிருந்த!
ஒருசில முடியும் போக!
யாருமே தேடா நானும்!
நடக்கிறேன் வல்லை நோக்கி.!
-- த.சு.மணியம்