தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மனம்.. மாற்றம்

கலாநிதி தனபாலன்
01.!
மனம் !
---------!
அவன் அவள் !
இவர்கள் அவர்கள் !
இவர்கள் எல்லாம் வீட்டுக்குள் !
இரண்டு கால் மிருகங்கள் !
நீயும் நானும் !
நிலையாய் இணைவதை !
நிறுத்தத்துடிக்கும் !
(அ)நியாய வாதிகள் !
நீயும் நல்ல நீ !
நானும் நல்ல நான் !
நல்லவனாதலால் !
நகர முடியவில்லை !
நிலையாய் நிற்க முடியவில்லை !
நீண்ட தூரம் !
விடைபெறத் துடிக்குது மனசு! !
02.!
மாற்றம் !
------------!
என்றேனும் மரணித்துப் போகக்கூடிய !
மாந்தர்களின் !
மனம் என்ற குரங்கு !
எண்ணற்ற பல மந்திரக்கனவுகளால் !
கணத்துக்கு கணம் !
கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது. !
கண்டதையும் கேட்டதையும் !
கௌரவமாய் நினைத்து !
கடிவாளம் போடாத குதிரையைப் போல் !
காரணமே தெரியாமல் ஓடி- கடைசியிலே !
காலனின் கைகளிலே கட்டுண்டு போகிறது. !
எனினும் !
இடைப்பட்ட இந்த ஓட்டத்தில் தான் !
எத்தனை மாற்றங்கள்… !
மாற்றம் ஓன்றே மாறாததாயினும் !
மரணம் ஒன்றே மாற்ற இயலுமோ? !
-கலாநிதி தனபாலன்

ஒருவன் முடித்த கதை

ரசிகன்!, பாண்டிச்சேரி
எல்லாமும் !
முடிந்து போயிருக்கும் இந்நேரம்!!
என்னில் கொஞ்சியதைப்போலவே!
வாழ்வை தொடங்கியிருக்கக்கூடும் அவள்!!
கடவுள் இருந்திருப்பதாக!
பலமுறை வேண்டியிருக்கிறாள்...!
நீ,!
நான்,!
நம் குழந்தை!
என ஒரு உலகுக்காக!!
நிராகரிக்கப்பட்டது!!
பதில்- ஆதாம் ஏவாளுக்கு காவு விடப்பட்டிருக்கும்!!
இனிவரும்!
உணர்வுகளோ , வார்த்தைகளோ !
ஆபாசமானதாகவும்!
வன்மையாகவுமே இருக்கக்கூடும்!!
நானும்!
சராசரி மனிதன் தானே?!
திடப்படுத்திய மனதுடன்!
புள்ளி வைக்கிறேன்!!
உங்களில் யாரேனும்!
காதலியை தாரை வார்த்திருக்கக்கூடும்!!
என்னால் தொடர முடியாத!
இக்கவிதையை!
நீங்கள் முடித்து வையுங்கள்...!
என் மௌனம்..!
என் தனிமை..!
எனக்காக காத்திருக்கிறது!!

ரயில் நிலையப் பாடகன்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
கைகளிலே வாத்தியம் அவன் !
கண்களிலே ஓர் கூர்மை !
கலைந்து பறக்கும் !
கேசத்துடன் !
கானமிசைக்கும் இவன் ரயில் நிலையப் பாடகன். !
வீடின்றி அலைபவனோ இல்லை !
விட்டெறிந்து வந்தவனோ ! !
பிழைக்கும் வழிதெரியா நாகரீகப் !
பிச்சைக்காரனோ ! !
பிளாட்பாரப் பாட்டுக்காரனோ ? !
பின்னென்ன , இவன் ரயில் நிலையப் பாடகன் . !
சத்தத்துடன் துணியில் !
சர்ரென்று உருளும் நாணயங்கள் !
சம்பளமின்றிப்பாடும் !
சவரம் செய்யா இவன் !
சத்தியமாய் ரயில் நிலையப் பாடகன். !
விதியின் வேகத்திற்கு !
விலயாகியவனோ அன்றி !
வீணே தன் வாழ்க்கையை !
விரயம் பண்ணுவனோ , இவன் ரயில் நிலையப்பாடகன் !
தேவைகள் இல்லாதவன் அதனால் !
தேடியலையாதவன் !
சொந்தங்கள் இல்லாதவன் அதனால்-பொருள் !
சேர்ப்பதை நம்பாதவன் - இவன் ரயில் நிலையப் பாடகன் !
அவன் வாழ்வின் சுதந்திரம் கண்டு !
அலயும் பல ரயில் பயணிகள் மனமே !
மனத்தை நிறைக்கும் சோகங்கள் மறையும் மட்டும் !
மயக்கமிக்கும் பாடல்கள் நிறைக்கும் ரயில் நிலையத்தை !
சொத்துக்கள் வேண்டாம் - அவை தரும் !
சோதனைகளும் வேண்டாம் !
சொந்தங்கள் வேண்டம் - அவை மூலம் !
தீராத மனக் கவலைகளும் வேண்டாம் !
இவன் வாழ்க்கையைச் சரியாய் புரிந்து கொண்டான் !
இவன் ஒரு ரயி நிலையப் பாடகனே

குறு குறுக்கும் மௌனம்

இனியவன்பூபாலன்
நட்சத்திரங்கள் !
இருளை போர்த்திக் கொண்டது. !
நிலவும் !
அவசரமாய் !
அடி வானத்திர்க்கு அப்பால் !
இடம் தேடியது. !
நீண்ட ரயில் இருப்பு பாதையும் !
நெடிய பெரு மூச்சாய் நீட்டிக் கிடந்தது. !
காற்றும் தன் ஆரவார மொழி மறந்து !
மூர்ச்சையானது. !
மின்விளக்கும் !
மஞ்சள் நிறமாய் !
பதறியது. !
நீ வந்தாய் !
கொலுஸுக்கும் வலித்து விடாத படி !
பூமி வழுக்கியது !
ஆஹாயம்தான் தாங்க வேண்டும். !
ஒரு குகைக்குள் !
அடைக்க பட்டதென் மௌனம் !
ஏதோ இருப்பதாய் !
சலனப் பட்டது... !
நீ சென்றாய் !
இன்னமும் சிற்றோடையின் !
குறு குறுப்பாய் !
எனது மௌனம்

கடிதம் கை சேரும் கணம்

ப்ரியன்
ஊனமான நெஞ்சம் மெல்ல !
தத்தித் தத்தி !
தாவும்! !
இயலாமையில் தீக்கிரையாக்கிய !
என் கவிதைகள் !
கொஞ்சம் சிறகு !
முளைத்துப் பறக்கும்! !
அறுப்பட்ட வீணை மனதில் !
மெல்லிய கீதம் !
இசைக்கப் படும்! !
எரித்துத் தொலைக்கும் !
என் வீட்டு நிலவு !
குளிர் பரப்பும்! !
என் காதல் வால் !
முளைத்துத் !
தாவித் திரியும்! !
இத்தனையும் நடக்கும்! !
ஊடல் உருகி !
கூடலாகும் போது !
அனுப்புவாயே !
ஒரு கடிதம்! !
அது வந்து சேரும் கணம்! !
- ப்ரியன்

ஒரு காலைப் பொழுதில்

அகில்
கனவு கலைந்தது!
கவிதை பிறந்தது - அந்த!
சில நிமிட சந்தோசமும்!
சட்டென்று மறைந்தது!
வங்கிக் கடன்!
ஞாபகத்துக்கு வந்தது!
மனைவியின் நச்செரிச்சல்!
காதைத் துளைத்தது!
குளிரால் வண்டி!
ஓட மறுத்தது!
இவைகள் எல்லாவற்றையும் மறந்து!
மீண்டும் ஒரு முறை!
கனவு காண ஆசை தான்!
ஆனால்....!
வேலைக்குப் போக!
நேரம் வந்து விட்டதே……

உயிரில் உயிர் வைக்க

கத்துக்குட்டி
அடுத்த காட்சியே உன்னுடன் !
என் இறுதிக் காட்சியாய் !
இறுதியாய்... !
வேண்டாம் என்று மறுத்த என் !
மனதுடன் போராடி இறுதியாய் !
உனக்கொரு வார்த்தை சொல்ல !
சம்மதம் பெற்றேன் !
என் வார்த்தைகள் உன்னைத் !
தொந்தரவு செய்யாவண்ணம் !
உன் நினைவுகள் இனி என்னைத் !
தொந்தரவு செய்யாவண்ணம் !
வேறொரு உயி£¤ல் உயிர் !
வைக்க இன்று முதல் முயல்கிறேன்

உதவாத மனிதர்கள்

த.சரீஷ்
அதிசயப்படவோ!
அல்லது!
ஆச்சரியப்படவோ!
இங்கு...!
ஏதுவுமே இல்லை!
எல்லாம் என்றென்றும்!
வழமைபோலவே.!
தலைகுத்தாக விழுந்த!
பச்சைக்குழந்தைபோல்!
அதர்மத்தின் வாசலில் வைத்து!
மனிதத்தின் அடையாளம்!
உடைக்கப்பட்டிருக்கும்.!
சுயஉரிமைகள்!
பறிக்கப்பட்டிருக்கும்.!
இரத்தத்தின் நிறம் சிவப்பு!
இதை...!
பலதடவைகள்!
உறுதிப்படுத்தியபின்பும்!
மீண்டும் மீண்டும்!
எங்களின்மீது!
இரத்தப் பரிசோதனைகள் தொடரும்...!!
எப்போதும்போலவே!
அப்போதும்...!
அந்த நாலுபேர்!
நாலுவிதமாய்!
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்....!!
அவர்களுக்கு உன்னைப்பற்றி!
என்ன கவலை..?!
எப்போதுமே...!
அவர்கள் அப்படித்தான்...!!
உன் உணர்வுகள்!
மனிதரால் மதிக்கப்படும்வரை!
மறுக்கப்பட்ட உரிமைகள்!
மறுபடி உருவாகும்வரை!
விழிரெண்டில் விடியல்!
தெரியும் வரை...!
உனக்காக...!
நீதான் போராடவேண்டும்...!!
அப்போதும்கூட...!
அந்த நாலுபேர்!
நாலுவிதமாய்!
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்....!!!!
!
த.சரீஷ்!
05.07.2006 பாரீஸ்

மின்னல்

பனசை நடராஜன், சிங்கப்பூர்
புது(அக)க் கவிதை !
மின்னல் !
பூமிப்பெண் மீது !
காமுற்ற வானம் - அதன் !
மேனியில் மலைகளை !
‘மேகக்’ கைகளால் !
மெதுவாகத் தழுவும்! !
!
‘வானவில்’ சிரிப்பால் !
வசீகரிக்கும், - பூமி !
வசப்பட்டு மயங்கி !
தாகத்தால் தகிக்கையில் !
வேகமாய் ‘மழை’ பெய்து !
தேகத்தால் கூடும் முன்.., !
!
மோகத்தோடு நெருங்கி !
முத்தமிடும் முயற்சியும், !
‘இடியாகத்’ தரைமீது !
இதழ்பதிக்கும் முத்திரையும் !
“மின்னல்”!! !
!
பனசை நடராஜன், சிங்கப்பூர்

அபார்ட்மெண்ட்

எம்.அரவிந்தன்
சில குறிப்புகள்!
-----------------!
!
நாளெல்லாம்!
ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துவிட்டு!
மாலைக்குள் வாடிப் போகிறது!
பகலில் ஆளில்லாத ஃப்ளாட்களின்!
பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும்!
சில குழந்தைகளும்!
-----!
!
வாயில் முழுதும் செருப்புகள்!
தொலைக்காட்சி இரையாமல் பார்த்துக்கொண்டோம்!
அனாவசியமாக சிரிக்கவில்லை!
கதவைத் திறக்கையிலெல்லாம்!
என்ன பாவனை கொள்வது எனத் தவித்தோம்!
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்!
ஞாயிற்றுக்கிழமையில் இறந்து போன!
பக்கத்து ஃப்ளாட்டு யாரோ!
சாந்தி அடைந்து கொள்ளட்டும்!
-----!
!
நான்கு நாட்கள்!
கொடியில் கிடந்தும்!
சோகமான பிசுபிசுப்பைத் தருகின்றன!
சூரியனைப் பார்க்காமல்!
உலர பயிற்றுவிக்கப்பட்ட!
துணிமணிகள்!
!
-----!
!
என் பூஜையறைக்கு!
கீழேயும் மேலேயும்!
கழிப்பறைகள் இருக்கலாம்!
கான்க்ரீட் கடவுள்!
காக்க காக்க!
!
-----!
!
தனித்த பெரிய!
சுதந்திரமான வீடுகளில்!
குழந்தைகளின்!
கண்ணாமூச்சி விளையாட்டு.!
உயர்ந்த பெரிய!
அப்பார்ட்மெண்ட்களில்!
பெரியவர்களின்!
கண்ணாமூச்சி விளையாட்டு.!
-எம்.அரவிந்தன்