வலியைப் பொறுத்துக்கொண்டு!
ஆசைகளை மறைத்துக்கொண்டு!
தூக்கம் மறந்து!
உணவைத் துறந்து!
தன்னுள்ளே!
இன்னொரு உயிரைத் தாங்கிடும்!
அன்னை...!
தனக்கு கிடைப்பதில்!
அதிகமாய் பிரித்து!
தம்பிக்கும் தங்கைக்கும்!
தலைவருடி உண்ணக்கொடுத்து!
தாய்க்கு உதவியாய்!
தானே இருந்துகொண்டு!
தம்பியை பள்ளிக்கு!
அனுப்பி வைக்கும்!
அக்கா...!
தோல்விகள் வரும்போது!
உள்ளம் நொந்து!
உணர்வுகளினால் கட்டுண்டு!
வாழ்க்கையை வெறுக்கும்போது!
பாசமாய் அருகிருந்து!
நேசமாய் எடுத்துரைத்து!
தோழமையால் தூக்கிவிடும்!
தோழி...!
தாலி வாங்கியதற்காய்!
நம்மை சேயாகவும்!
தன்னை தாயாகவும் மாற்றி!
இன்பம் துன்பம்!
அத்தனையிலும் பங்கெடுத்து!
நம் மரணத்திலும் பங்கெடுத்து!
இன்னொரு அன்னையாய்!
கூடவே வரும்!
மனைவி...!
எத்தனையோ!
தியாகிகள் இருந்தாலும்!
அத்தனைபேரையும் மிஞ்சிய!
தியாகிகள் யாரென்றால்...!
அவர்கள் பெண்களைத் தவிர!
வேறு யாராக!
இருக்கமுடியும்...?
இராமசாமி ரமேஷ்