தொடர்கிறது!
-------------------------------------------!
மரணத்திலிருந்து மீண்டவர்களுக்காக!
மல்வத்து ஓயாவில்!
புனித நீராடலுக்கு ஏற்பாடு!
நீண்டோடும் அவ்வாற்றை!
முட்கம்பி வேலிகளால் கூறுபோட்டு!
குளிப்பொழுங்கு நடக்கிறது!
இந்த ஆறு என்றும்!
சனத்திரளை!
இம்மாதிரிக் கண்டிராது!
கோடையாற்றில்!
நீர் வற்றென்றாலும்!
வேறு வழியின்றிப் பற்பலருமதை!
நாடத்தான் செய்தனர்!
புனித நீராடல்!
தொடர்ந்தபடியிருக்க!
ஆற்றின் நடையோடு!
சேறு… சகதி…!
மலம்… எனக் கலந்து!
நீரின் நிலை மாறிற்று!
இரத்தக் கறைபடிந்த!
எனது ஆடைகள்!
இன்னும் கழற்றப்படவுமில்லை!
துவைக்கப்படவுமில்லை.!
ஆற்றை வெறித்தபடி பார்த்த!
நானும்!
என்போன்றோரும்!
திரும்பி நடக்கிறோம்!
மல்வத்து ஓயாவில்!
நீராடல் தொடர்கிறது
பொலிகையூர் சு. க சிந்துதாசன்