தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூரமும் பக்கம்தான்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
தூரம் கொஞ்சம்தான் !
கூட வா நண்பனே ! !
காலங்கள் பல நாம் இணைந்தே வந்தோம் !
கண்டது பாதையில் கற்களும் , முட்களுமே ! !
அதோ பார் ! !
பசுந்தரையன்று பச்சையாய் நம்முன்னே !
தூரம் கொஞ்சம்தான் கூட வா நண்பனே ! !
துன்பத்திலே பங்கெடுத்தாய் !
இன்பம் னரம் ஆதிகமில்லை !
இப்போது ஏன் பாதை மாற்றம் !
தூரம் கொஞ்சம்தான் !
கூட வா நண்பனே ! !
வாடிநின்றவேளை பசியால் , நாம் !
புசித்திருந்தது நமது நட்பையே !
வயிறார உண்ணும் ஓர் வசதி !
வரும் வேளை ஏன் தோழா !
வழிமாறப்போகிறேன் என்கிறாய் ? !
எதிர்காலம் ஒன்று வெளிச்சமாய் தெரிகிறதே !
தூரம் அதிகமில்லை என்னோடு கூட வா ! !
பாசம் எனும் விலங்கினால் பிணைத்து !
வாசம் அற்ற !
வாழ்க்கையில் காலம் எனைத் தள்ளி விட்ட போது !
வழித்துணையாய் வந்தவனே !
விடுதலை எனும் ஊரை நெருங்கி விட்டோம் !
விரக்தியோடு ஏன் இன்று !
விடைபெற்றுப் போகின்றாய் னரம் !
கொஞ்சம்தான் கூட வா ! !
நட்புக்கோர் இலக்கணமானவனே !
நன்றியை நான் செலுத்தும் முன்னே !
நெஞ்சத்திரையில் ஏன் உந்தன் காட்சியை !
நிறைவு செய்ய துடிக்கின்றாய் ? !
தொடர்ந்து செல்வோம் வா தோழனே !
விடுதலைக் காற்றை சுவாசித்துக் கொள்வோம் !
வேதனைகளை விற்று கொஞ்சம் சாதனைகளை !
வாங்கிக் கொள்வோம். !
நட்பெனும் தோணியில் ஆழ்கடலைத் !
தளும்பாது தாண்டி விட்டோம் !
தயங்காமல் தரை மட்டும் கூட வா

பனித்துளி புகட்டிடும் பாடம்

சத்தி சக்திதாசன்
பச்சைப் பசேலெனும்!
பசும் புற்தரையினில்!
பொன்னொளி பூத்தது!
போலொரு பனித்துளி!
மின்னுது நுனியில்!
உள்ளத்தின் விசாலம்!
உருவத்தில் இல்லை!
உண்மை அதனை!
உணர்த்திடும் பனித்துளி!
சின்னஞ்சிறிய பனித்துளியினுள்!
அழகாய்த் தெரியுது!
ஆலமரத்தின் அழகிய வடிவம்!
அறியும் உள்ளம் வாழ்வின் உண்மை!
இயற்கையின் வனைப்பில்!
இத்தனை படிப்பினை!
இருப்பதை அறியாமல்!
இறுமாப்புக் கொள்வது சரியோ!
இதயம் விரித்து அன்பைப்!
பொழிந்து இன்பம் காண!
செல்வம் வேண்டாம்!
இளகிய மனமே போதும்

இப் புத்தாண்டிலாவது உணருமா?

இமாம்.கவுஸ் மொய்தீன்
இப் புத்தாண்டிலாவது உணருமா?!
---------------------------!
அச்சு ஊடகம்!
காட்சி ஊடகம்!
எதைத் திறந்தாலும்!
கொலை கொள்ளை!
கடத்தல் கற்பழிப்பு!
நாச வேலைகள்!
அத்துமீறல்கள்!
அராஜகங்கள்!
ஆக்கிரமிப்புகளென!
நாள்தோரும்!
நெஞ்சைப் பதைக்கும்!
செய்திகளாய்!
அழிவுச்சக்திகளின்!
ஆதிக்கம்!!
ஒரு கன்னத்தில்!
அறைந்தால் !
மறு கன்னத்தைத்!
திருப்பிக் காட்டு!
என்றார் ஏசுபிரான்!!
அவரின் போதனைகளைக்!
காற்றில் விட்டதின்!
விளைவே!
இந்நிகழ்வுகளின்!
பிரவாகம்!!
அஹிம்சையைக்!
கடைபிடித்ததுடன் -அதைப்!
போதிக்கவும் செய்தார்!
மஹாத்மா காந்தி!!
இந்தியாவும் கடைபிடித்தது!!
அதன் மகத்தான !
சாதனையே!
இந்தியாவின் விடுதலை!!
உலகமே கண்டு!
வியந்து போற்றும்!
இப் பேருண்மையை!
விடுதலைக்காக இன்னும்!
போராடிக் கொண்டிருக்கும்!
நாடுகள்!
இப் புத்தாண்டிலாவது!
உணருமா?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

வாழ்க்கை நினைவுகளின் எச்சம்

வி. பிச்சுமணி
நினைவு தெரிந்த நாள்!
யாதென யாருக்கு தெரியும்!
உடனே நினைவில் வருவது !
அடம் பிடித்து!
அட்டை போட வைத்திருந்த!
பழுப்புதாள் கற்றையை !
ஒன்றாம் வகுப்பு ஆசிரியை!
எடுத்து கொண்டது !
அம்மாவை பெத்த தாத்தா!
இறந்த விட்ட பொழுது!
ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு!
தனியே பேரூந்தில் சென்றது !
தனி பயிற்சிக்கு செல்லாது!
மாட்டிகொண்டு!
அம்மாவிடம் அடிவாங்கியதென!
சின்ன சின்ன நினைவு திட்டுகள் !
நினைவுகள் மங்கும் நாளில்!
நினைவுகளில் நிற்கும் நினைவுகள்!
பத்து பக்கம் கூட தேறாது !
மற்றவர்கள் நினைவுக்கு!
விட்டு செல்லபோவதென்னவோ!
பெயரும் தோற்றமும் மறைவும்!
ஆக்கிரமிப்பு அகற்றலிலோ!
சாலை விரிவாக்கத்திலோ!
அதுவும் கூட அகற்றபடலாம் !
எள்ளுபெயரன் காலத்தில்!
என்னை பற்றிய!
எல்லாமும் போய்விடும் !
வாழ்க்கை நினைவுகளின் எச்சம்!
எச்சமும் சொச்சமில்லை!
சொச்சமில்லை யென்றாலும்!
சொர்ககம் தான் வாழ்க்கை

பருவ மழை

லலிதாசுந்தர்
மழலைப்பருவத்தில்!
மண் வாசனை கிளப்பிய மழையில்!
அப்பா குடைப்பிடிக்க தம்பியுடன்!
காகிதக்கப்பல் விட்ட ஞாபகம்!
பள்ளிப்பருவத்தில்!
விடுமுறைகிடைக்குமென்று!
அதிகாலை மழை வேண்டி!
கடவுளுக்கு காசுகொடுத்த ஞாபகம்!
கல்லூரி நாட்களில்!
பையில் குடையிருந்தும்!
அதை கையில் எடுக்காமல்!
நண்பர்களுடன் நனைந்த ஞாபகம்!
இன்று!
கையில் குடை இல்லாவிடினும்!
நனையாமல் செல்லும்!
ரெயின் செட்டரில் சென்றாலும்!
ஏனோ!
அந்த நாள் ஞாபகம்!
நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது!
மழைக்காலம்!
அது ஒரு கனாக்காலம்

மழைக் காட்சி

விடிவெள்ளி
கானகத்து மிச்சமாய்!
கடந்த காலத்தின் எச்சமாய்!
கல்லூரியின் கருத்த மூலையில்!
கம்பீரமாக!
நெருப்பின் மலர்களை வீசி!
காற்றைக் கொளுத்தி!
கதிரவனைக் கலங்கடிக்கும்!
அந்த!
மஞ்சள் கொன்றை,!
இன்று மௌனமாக!
தலை குனிந்து!
தன் உடல் வழியே!
வழிய விடுவதை!
மழை நீர் என்கிறாய் நீ!!
இல்லை நண்பா!
இல்லை!!
மண்ணைத் தொட்ட!
நீரின் சிலுசிலுப்பில்!
வேர் சிலிர்க்கும் முன்பே,!
நீரூற்று பாறைகளின்!
வேர்க்கால்களை துளைத்த!
பெப்சியின் ஆழ்துளை பைப்புகள்,!
வானத்தின் ஈரத்தை!
களவாடும் ஈனத்தை!
உணர்த்த – உனக்கு!
உணர்த்த!
கசிய விடுகிறது!
தன் உயிரை!
கிளை வழியே!
இலை வழியே

புள்ளியளவில் விபத்து.. ஜன்னலுக்கு

அக்மல் ஜஹான்
வெளியே..!
01.!
புள்ளியளவில் விபத்து..!
--------------------------------!
ஒரு புள்ளியில் தொடங்குகிறது!
விபத்து...!
சிறகு பூட்டுவதான!
அலங்கரிப்புக்கள்..!
விற்பனை பொருளாகிறது!
ஏதோ ஒன்று..!
நிறம் பூசிய சுவர்!
பேரங்களில் அரைபடும் வாக்குறுதி..!
விலைபோகும் இதயம்..!
அலங்கார வார்த்தைகளால் சமைகிறதென்!
பல்லக்கு..!
ஒற்றை சிறகோடு!
ஓரமாய் உட்கார்ந்திருக்கிறது!
இதயம்!
பிடிக்கவில்லை என்ற !
பிடிமானங்களை!
உரைக்க முடியாதபடி..!
சுமக்க முடியாத கனவுகளில்!
அதிர்கிறது!
அந்தப்புரம்..!
நான் தூங்க விரும்பிய தொட்டில்!
இதுவல்லவென்பதை எப்படியுரைப்பேன்..??!
ஒரு பூவிரிவதைப்போல்!
பேசாமல் பெய்யும் மழைபோல்!
ஓசைகளற்றுப்போகும் மொழிகளை!
என்குருவி குந்தி!
கொத்திஎறியும் கனவுகள்!
இப்படித்தான் தொலையுமோ... ??!
02.!
ஜன்னலுக்கு வெளியே..!
-----------------------------!
ஜன்னலுக்கு வெளியேதான்!
உலகம்...!
ஆனாலும்!
மலைகளுக்கும்!
பள்ளத்தக்குகளுக்கும் அப்பால்!
தவறிப்போன கைக்குட்டையை!
தேடுகிறேன்

மௌனத்தை மறுக்கும் நட்சத்திரம்

நவஜோதி ஜோகரட்னம்
எண்ணற்ற சதிகளினால்!
புனையப்பட்டது வாழ்க்கை!
பிரியங்கள் சுழன்று!
பரவசமடைந்த இடங்கள்…!
வெளிகள்… காடுகள்… ஏகலும்!
அத்துமீறி நுழைந்த!
கறுப்பு அங்கிகளின் கால்சுவடுகள்…!
பூக்களால்!
மண் வாசம் தொட்டு!
நாதத்தில் மிதந்து!
நடனமாடிய கிராமங்கள்…!
மரணபயத்தோடும் உயிராவலோடும்!
பறக்கின்றது இதயங்கள்!
முட்கள் மாலை கோர்த்து!
கடுகதி ஆயுளோடு பற்றி எரிகிறது…!
கடைசி ஒற்றையடிப் பாதையிலும்!
உயிர் தின்னும் காண்டாமிருகங்கள்…!
பதறும் உறவுகளை!
புகைகக்கி!
விதவிதமாய் ருசி பார்க்கிறது!
மாய்ந்து மணற்திட்டியில் செத்து!
கொத்துத் கொத்தாய்ப் பிணங்கள்!
ஊன உடல்களும்!
கட்குழிகளும்!
ஊற்றெடுக்கும் செந்திரவமும்!
எஞ்சிக் கிடந்து என்!
உள்ளத்தைக் கிழித்து!
நஞ்சாக்கி!
நெஞ்சையெல்லாம் எரிக்கிறது!
என் இனம்!
மயான நெருப்பாகி!
அவியாமல்!
நிலைகொண்டெரிவதை!
நிறுத்தத்தவறிய!
மனிதநேயமற்ற உலகே!
உன் மௌனத்தை!
செம்புள்ளிபோல்!
எஞ்சியிருக்கும் நட்சத்திரமும்!
ஏற்க மறுக்கிறது!
24.4.2009

தேடலில்லா கவிதை போல்

இளங்கோ
காலந்தவறி அசைந்தாடி வரும் !
ஓசி பஸ்சும் !
சளைக்காது !
மூசிவீசும் குளிர்க்காற்றும் !
நெஞ்சினிலுள் இறங்கும் !
கோபக் கவளங்களாய் !
வெறுப்பும் சலிப்பும் !
குழைத்தெறியும்பொழுதில் !
என்றேனும் ஒருகால் !
உருகாதோ உறைபனி !
மதுவருந்தி !
மயங்கும் வெள்ளியிரவுகளில் !
பலவீனங்களுடன் !
மனிதர்களை நேசிக்க !
நெஞ்சு கிஞ்சிக்கும் !
பாடப் புத்தகங்களின் !
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும் !
நான் !
மாந்தர்களைப் படித்தல் !
நடவாதென !
நினைவு ததும்பிச் சிரிக்கும் !
சுரங்கப் பாதையில் !
வகுப்புகளுக்காய் !
நடக்கையில் !
தென்படும் பெண்களெல்லாம் !
தேவதைகளாக மிதக்கின்றனர் !
அறிவும் தெளிவும் !
தெறித்துச் சிதற !
அவர்கள் பேசுகையிலும் !
ஆண்களுண்டாக்கும் !
காயங்களே !
பேச்சிடைப் பொருளாகின்றன !
முற்போக்குகளின் !
பிரதிநிதியாய் !
சமரசங்களற்று !
அலையும் இளைஞன், !
பட்டத்துடன் !
முகவரியற்றுப் போவது !
நாளைய விந்தை !
அவ்வவ்போது கற்றல் !
வன்முறையாய் !
சிந்தனையடுக்குகளை !
சிதைத்துப்போக !
நெருங்குகிறது பரீட்சை !
தேடலில்லா !
கவிதை போல் !
காலத்தை !
அசட்டை செய்து !
நகர்கிறது வாழ்வு. !
!
*OC Transpo : Ottawa - Carleton Transportation

தமிழா! இன்றும் நீ அகதியா

வேதா. இலங்காதிலகம்
உன்னைக் காப்போர் யார்?!

தமிழா! தமிழா! உன் தலையெழுத்தென்ன!!
தாய் நாட்டிலும் ஒரு அகதி நிலை.!
தங்கும் இடமெங்கும் நீ அகதியன்றோ!!
தரத்தில் நீயொன்றும் அகதியில்லையே!.!
உலகில் உன் திறமையை நிரூபித்துள்ளாய்!!
கலகம் அடக்கும் வகை தெரியவில்லை.!
வெளிநாட்டிலும் உன் வேகத்தைக் காட்டுகிறாய்.!!
வெகு சாதுரியமாய் உன் காய்களை நகர்த்துகிறாய்.!
கம்பியூட்டரில் பிற நாட்டிற்கு ஆலோசகராகிறாய்!!
கட்டிட வேலையில் அதை வாங்கி விற்கிறாய்!!
கழுவும் வேலையிலிணைந்து கம்பெனி நிறுவுகிறாய்!!
கடின உழைப்பில இலக்கம் ஒன்றாகிறாய்!!
கலைகளில் உலக தரம் எடுக்கிறாய்!!
கருமமே கண்ணாக தாயகத்திற்கும் உதவுகிறாய்!!
கண்ணியமற்ற அரசால் பிறநாட்டு; ஆதரவு!
கறுப்பாகத் தெரிகிறது, கவலை பெருகுகிறது.!
கவசகுண்டலமாய் நல்ல கடின உழைப்பு!
கைவசம் உள்ளது வெளிநாட்டுத் தமிழரிடம்.!
கருணை மனதாளரான கர்ணமனத் தமிழரே!!
கடவுளராக இன்று தமிழரைக் காப்போர்.!