பல்லவி!
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன்!
தாய் மண்ணை முத்தமிடு தமிழா!
ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன்!
ஈர மண்ணை அள்ளியெடு தமிழா!
எம் மண்ணை அள்ளித் தின்றேனும்!
நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம்!
குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை!
எதிரியின் குண்டுகள் தின்கிறதே!
போரிலே பாயும் பிள்ளைகளை!
பதுங்கிடும் குழிகள் காக்கிறதே!
!
சரணம்-1!
வீட்டினை இழந்து நாட்டினை இழந்து!
காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா!
உணர்வினை இழந்து உறவினை இழந்து!
சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா!
போரை நிறுத்தென தமிழரின் குரல்கள்!
உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே!
செவிகளை விழிகளை மூடிய உலகம்!
செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே!
எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து!
ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே!
!
சரணம்-2!
உதிரத்தை கொடுத்து உயிரையும் கொடுத்து!
போரிலே நாங்கள் வெல்வோம்!
நீதிகள் கேட்டு நியாங்கள் கேட்டு!
எரியும் நெருப்பிலே நாங்கள் நடப்போம்!
எங்கள் சோகத்தை கழுவிடும் கண்ணீர்!
தமிழகக் கரைகளை நனைக்கிறதே!
எங்கள் உயிர்களை விதைக்கும் நிலங்களை!
எதிரியின் கைகளில் கொடுப்பதா!
ஏழுகோடி தமிழரும் எழுந்து வந்தால்!
எங்கள் துயரங்கள் ஓடி மறையாதா!
தமிழக உறவே தமிழக உறவே!
தை பொங்கி நீங்கள் எழுகவே!
!
-வசீகரன்!
நோர்வே!
11.01.2009
வசீகரன்