தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மாறாத வலிகள்

ஆனந்தத்தில் ஒரு அனல்
அமைதியாக இருந்த பொழுதுகள்!
அதிர்ந்து போனது -!
நிலத்தில் திடீரென மாற்றம்!
களத்தினில்!
கடும் சமராம்....!
நெஞ்சுக்குள் ஒரே!
ஓயாத படபடப்பு!
நித்தம் குண்டுகளின் சத்தம்!
நிம்மதியை தொலைக்கும்!
உயிர்மையின் குரல்கள்!
விடிவை நோக்கி விரையும்!
பாய்ந்திடும் தோட்டா!
மாய்ந்திடும் உயிர்கள்!
துண்டாடும் உடல்கள்!
துர்நாற்றம் வீசும்!
வீதிகளில் இரத்த வெள்ளம்!
வெள்ளோட்டம் செய்யும்!
தூக்கங்களே இல்லாத!
துயரங்கள் வாட்டும்!
தற்சமயம் கண் அயர்ந்தால்!
கனவுகளுக்குள்ளும்!
குண்டுகள் வந்து வீழும்

தேடல்

ராமலக்ஷ்மி
என்னென்ன நம் தேவை!
என்கின்ற கோணத்திலேயே!
என்றைக்கும் சிந்தித்து!
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..!
அதை அடைந்திடும் நோக்கம்!
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்!
துடிப்புடன் நாளதும் பொழுதும்!
ஓயாமல் ஓடியாடி..!
ஒருவழியாய் ஆசையது!
நிறைவேறும் வேளைதனில்!
தேடத்தான் வேண்டியிருக்கிறது!
பலனாகக் கிடைத்ததா!
துளியேனும் பரவசமென்று!!
என்னென்ன தேவையில்லை!
எனத் தீர்மானித்து!
ஒருதெளிவாய் வாழ்கின்ற!
வகையினருக்கு மட்டுமின்றி..!
இதுயிதுவே தேவையென!
எல்லைகள்!
வகுத்துக் கொள்ளாமல்!
விடிகின்ற காலைகளை!
நன்றிப் புன்னகைசிந்தி!
எதிர்கொள்வது போலவே!
வருகின்ற வளர்ச்சிகளைச்!
சந்தித்தவராய்!
செய்யும் பணிகளிலே!
கவனத்தைக் குவித்துத்!
திறம்பட முடிப்பதையே!
பேரானந்தமாய்!
உணர்பவருக்கும்..!
தேடாமலேதான்!
கிடைத்து விடுகிறதோ!
நம்மில் பலருக்கும்!
தீராத் தேவையாகவே!
இருந்துவரும் அந்தப்!
பரிபூரண மனநிறைவு?!

காதல் என்றால் என்ன

கல்முனையான்
? !
----------------------------!
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....!
நான் சொன்ன பதில் !
வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்!
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்!
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்!
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.!
சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்!
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய் !
வெற்றுப் பையுடன் ஏங்கும்!
ஏழைகளின் அங்கலாய்ப்பு.!
காதலின் பின் உன் மூளைக்கும் !
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா!
இரண்டிலுமே கவலைப் புழுதியால்!
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.!
அடிக்கடி சிரித்துக்கொள்வாய்!
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட!
ஏன் தெரியுமா!
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.!
சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்!
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்!
அதை சில பேர் தப்பாக நினைத்து!
உன்னிடம் தீட்சை பெற வருவர்!
அவர்களுக்கு தெரியாது போலும்!
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று!
அது தெரிந்தால் !
அவர்களும் ...!
வேண்டாம் எதற்கு இந்த வம்பு

உண்மை.. கொலுசொலி

ந.அன்புமொழி
01.!
உண்மை!
--------------!
மேகங்கள் மறைத்தாலும் !
மரங்கள் மறைத்தாலும் !
இரவுகள் மறைத்தாலும்!
இனிய வீடுகள் மறைத்தாலும் !
உடைகள் மறைத்தாலும்!
குடைகள் மறைத்தாலும் !
சூரியனை மறைப்பது தற்காலிகமே. !
அவ்வாறே ஒருநாளில் !
நிரந்தரமாய் மறைத்தாலும் !
கவசங்கள் பயந்துக்கொண்டே சொல்லும் !
'சூரியனிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம் !
சூரியனை உன்னால் மறுக்கமுடியாது என்று.!
அதேபோல்!
இனங்கள் மறைத்தாலும் !
மொழிகள் மறைத்தாலும் !
மதங்கள் மறைத்தாலும் !
நாடுகள் மறைத்தாலும் !
செல்வங்கள் மறைத்தாலும்!
சாதிகள் மறைத்தாலும்!
உண்மையை மறைப்பதுவும் தற்காலிகமே.!
அவ்வாறே எதிர்காலத்தில் !
எதையெதையோ உருவாக்கி!
நிரந்தரமாய் மறைத்தாலும் !
அழிவுகள் பாய்ந்துக்கொண்டே சொல்லும் !
'உண்மையிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம் !
உண்மையை உன்னால் மறுக்கமுடியாது என்று. !
சோம்பேறிகளின் பரிணாமங்களே!
நன்றாகப் பாருங்கள், !
சூரியன் நம் அன்புக்காக !
தான் எரிவதைப் பற்றி கவலைப்படாமல்!
ஏங்கிக்கொண்டே கதறுவதை. !
உழைக்காமல் உணவுண்ணும் !
பெருநோய் பரம்பரைகளே!
நன்றாக உற்றுப்பாருங்கள்,!
பூமி நம் அன்புக்காக !
தன் ஓய்வைப் பற்றி கவலைப்படாமல்!
ஏங்கிக்கொண்டே சுழலுவதை.!
பேராசை கொண்டு!
பொருள் சேர்த்துச் சாகும் !
பரிதாபத்துக்குறியவர்களே!
தயவுசெய்து!
நன்றாக உற்றுப்பாருங்கள்,!
எல்லாம் ஒன்றேயென்றும் !
அனைத்தும் நமதேயென்றும், !
வா !
விதவிதமாய் !
உழைத்து உழைத்து!
புதுவிதமான இன்பங்களை !
பலவிதமாய் கொண்டாடுவோமென்று, !
உண்மை !
மீண்டும் மீண்டும் கத்திக்;கொண்டு!
பித்துப்பிடித்தது போல் !
ஏங்கிக்கொண்டே,!
ஏன்!
நீயும் நானும் கூட ஒன்றுதான்!
என்று!
கண்ணீரோடு சிரிப்பதை.!
02.!
கொலுசொலி!
---------------------!
அதோ !
ஏழைத் தங்கையின் !
செருப்பில்லா !
கால்களைப் பார்த்து !
கண்ணீர் விட்டேன. !
அவள் காலாடை விளிம்பில் !
மறைந்திருந்த கொலுசு !
சத்தமாய் சிரித்தது, !
பைத்தியக்காரா என்று. !
ஐயோ !
என்ன கொடுமையிது !
எது முக்கியமென்பதே !
தவறாக போதிக்கப்பட்டுள்ளதே !
என் தங்கைகளுக்கு,!
கதறியழுதேன்.!
முட்டாளே !
போதும் நிறுத்து !
வாழக்கற்றுக்கொள் !
தூ.. !
துப்பினாள் தங்கை. !
புழுங்கி !
புழுங்கியழுதேன் !
மனதிற்குள். !
உண்மை !
என் !
ஒட்டுமொத்த கண்ணீரையும் !
விலைக்கு வாங்கிக்கொண்டது !
எனக்கெப்படி தெரியும்!! !
உணர்ந்து!
வாழ்த்தியது !
வெள்ளி கொலுசு.!
!
-ந.அன்புமொழி

சிங்கம் கண்ட சிங்கப்பூர்

சுதர்மன்
மன்னன் பரமேசுவரன் !
சிங்கம் கண்ட சிங்கப்பூர் !
கவிஆக்கம்: சுதர்மன் !
மன்னன் பரமேசுவரன் சிங்கம் கண்ட !
சீரிளம் தீவுநாடுதான் இந்த சிங்கப்பூர் !
“ராப்பிள்ஸ்” எனும் பிரிட்டிஷ் குடிமகன் !
இதை உலகின் கடல்வழி அணைக் கலனாக்கினார்! !
காடும் சேறும் கலந்தசதுப்பு நிலமாகவும் !
கரடு முரடான புல்லும் புதராகவும் !
மான் மறைகளின் மேச்சல் நிலமாகவும் !
மீன்பிடிப்போர் தங்குமிடமாகவும் காட்சிதந்த இத்தீவை !
இன்று:- நல்லவர்கள் தலைமையில் நானிலமாகவும் !
நாப்பது லட்சம் நான்கின மக்களும் !
கல்வியும் கலையும் கற்றுணர்ந்து வாழ்ந்திட !
பொன்னான ஒரு பூமியை பெற்றிருக்கிறோம் !
இனபேதமில்லாத இனிய கொள்கையுடைய நாடாகவும் !
மதபேதமில்லாத மனித நல்லிண்க்க தேசமாகவும் !
ஏற்ற தாழ்வில்லாத இனியபண்புள்ள உலகமாகவும் !
போராட்ட மில்லாத புதுமை நாடாகவும் மாற்றியுள்ளோம் !
இதிலும் பெருமைகொள்ள இல்லையொரு நாடு !
இல்லையென்ற சொல்லுக்கு இலக்கணம் தேடும் நாடு !
பன்னாட்டவரும் பணிபுரிந்து பாராட்டும் இன்நாடு !
அக்கபக்க நாடுகளும் அகமகிழும் பொன்னாடு !
உன்னால் முடியும்தம்பி நீ உயர்ந்திட பாடுபாடு !
உன்தன்மான கல்வியேடு என்னாடும் போற்றிடும் !
குறுக்குவழி ஏதுமில்லை நீ கோடீசுவராவதற்கு !
உறங்காத சிங்கப்பூரில் உழைப்பிற்கே முதலிடம் !
கவிஆக்கம்: சுதர்மன் !
006567829683

ஏதேன் சீதனம்

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன் !
'வாழ்க்கை'ப்பட்டு வந்த.. !
எல்லோருக்கும் போலத்தான் !
எனக்கும் வழங்கப்பட்டது !
ஏதேன் சீதனம். !
கதறியழுதவர் தம்மின் !
கண்ணீரினூடே தெரிந்தன !
இருப்பின் நியாயமும்.. !
இறப்பின் அநியாயமும். !
என்றாலும்... !
இம்'மை' அநியாயம் !
மறு'மை' க்கு நியாயமோ..? !
இமைக்க மறந்த ஒரு கணத்தில் !
இன்னொரு(வர்) தோளுக்கு !
இறங்கிப்போயிருந்தன !
சுமைகளும்; சொந்தங்களும் !
சொல்லிக்கொள்ளாமலேயே.. !
ஆள் மாற்றி, தோள் மாற்றி !
அனுப்பி வைத்தனர் !
'நிலையத்'துக்கு. !
எண்ணங்கள்; !
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி !
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல் !
சமாதி வழிப்பயணம். !
!
வழியனுப்ப வந்தவர்களில் !
கனவுக்குமரிகளைத்தான் காணோம் !
அடைந்து விட்டவை !
சாதனைத்திருமதிகளாய்.. !
அடையாதவைகளோ !
ஏக்கக் கன்னிகளாய்.. !
குடும்பங்கள்-பொறுப்புக்கள் !
கூட்டாளிகள்-தொழில்கள் !
கடமைகள் உடமைகள் எல்லாமே !
கழற்றி விடப்பட்டிருந்த !
கால் செருப்புக்களோடு! !
தன் தேகக்கூடு தவிர !
தெரிந்துவைத்திராத ஆன்மா !
நன்மை தீமைகளின் !
நீதிநிலை அறிக்கையை !
வழியெங்கிலும் !
யோசித்தப்படி.. !
ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க.. !
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது !
நாளை நிரப்பப்படுமோ?....! !
!
--------------------------!
(குறிப்பு: !
ஏதேன் !
என்பது அந்த ஆதி சுவர்க்கத் !
தோட்டம் தான்- பைபிள் மரபில் !
ஈடன் என்பது !
தமிழில் ஏதேன் ஆனது.) !
-- !
H.FAKHRUDEEN- (இப்னு ஹம்துன்)

கருவறை.. தலைமுடி

வசிகரன்.க
01.!
கருவறை.. !
-------------------!
இருவரின் கூட்டு முயற்சி ..!!
இரண்டு நிமிட உழைப்பு ..!!!
இரண்டு துளி வெண்மணி ,!
பயணிப்பதோ பலமணி .!!!!
இறுதியில் உறைவது!
சூரியன் புகா நிலவறை !!
உண்டு உறங்கும் ஓர் அறை.!!!
சுவாசிக்க ஓர் உறை.!!
சுதந்திரமாக வாழும் பாசச்சிறை.!!!
ஒன்பது மாதம் வாசிப்பதுதான் முறை ..!!!!
அதற்குமேல் வாடகை கொடுத்தாலும்!
இருக்கமுடியாது என்பது பெருங்குறை ..!!!!!
கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை..!!
விலைமதிப்பில்லா ஓர் அறை .!!!
எத்தனை சிறிய ஜான் இடம் ,!
இதற்குள் உறைவது!
எத்தனை பெரிய மானுடம் ..!!!!
!
02.!
தலைமுடி!
------------------!
உயரத்தில் இவன் குடியிருப்பு , !
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு , !
தலையில் இருக்கும் வரை !
அப்படி ஒரு கவனிப்பு , !
தவறி உணவில் விழுந்தால் !
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!!!
இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..! !
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை !
இவர்களின் கணக்கெடுப்பு ..!! !
உள்ளவரை தலைக்கு !
அழகான கரும்பொன் காப்பு ...!!! !
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன் !
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!! !
பெண்ணின் அழகுக்கு வேண்டும் !
இவன் அருள்பாலிப்பு .! !
மனமிருந்தால் கொடுக்கலாம் !
சிறப்பு பாதுகாப்பு .!! !
மணமில்லை என்பது !
இவனின் தனிச்சிறப்பு ..!!! !
இளமையில் இவன் !
நிறமோ கருப்பு .! !
நடுதர வயதில் மாற்றங்களால் !
வரும் வெளுப்பு ..!! !
இவனை வைத்து !
கொலையாளியை பிடிக்கலாம் என்பது !
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!! !
மொத்தத்தில் இவனை !
பேணிகாப்பது என்பது !
நம் பொறுப்பு .! !
இருப்பதை விட்டு !
இழந்தபின் புலம்புவது என்பது !
பொறுப்பற்ற பிழைப்பு

புத்துருவாக்கம்.. ஒத்திகை

தீபா திருமுர்த்தி
01.!
புத்துருவாக்கம்..! !
--------------------------!
கண்களுக்கு !
விருந்து தந்த !
மரத் தாயே ! !
மன்னித்து விடு.... !
மண்ணின் மைந்தர்களை! !
வேந்தர்கள் !
உனைக் காக்க.... !
மைந்தர்களுக்கு மட்டுமேன் !
இத்தனை அங்கலாய்ப்பு? !
அவசர யுகம்! !
வாழ்ந்துவிட்டுப் போவதற்குள் !
வரும் சந்ததிகளின் !
பெருக்கம்! !
காடுகள் !
அழிக்கப் பட்டுவிட்டதால் !
அழுகிறீர்கள்! !
கவலை வேண்டாம் ! !
இன்றும் !
மனிதக் காடுகள் தான் !
மண்டிக் கிடக்கின்றனவே! !
02.!
ஒத்திகை..! !
------------------- !
அழகிய பதுமை! !
ஆம்! !
அவள் ஓர் !
அழகிய பதுமை! !
இயற்கை அழகை !
முழுவதும் !
விழுங்கிவிட்டுச் !
செயற்கை அழகில் !
தத்தளிக்கும்.... !
அவள் ஓர் !
அழகிய பதுமை! !
அவள் ஓர் !
காதல் விருந்து! !
அவனும் தான்! !
செயற்கை அழகை !
மொத்தமாய் தந்துவிட்டு !
இயற்கை அழகில் !
இணைந்திருக்கும் !
அவன் !
காதல் நோய்க்கோர் !
இலவச மருந்து! !
சந்தி செய்யும் !
அந்தி! !
பேருந்து பயணம்! !
ஒளி விழுங்கிய !
வானம் !
உமிழ்ந்துகொண்டு இருக்கிறது.... !
மின்னலை! !
இருவரயும் !
இணைக்கிறது !
சில் என வரும் !
தென்றல் காற்று! !
முடி திருத்துவதாய் !
மார்பில் !
இடிக்கிறாள்! !
சட்டை சரி செய்வதை !
அவனும் தான்! !
கதகதவென !
இதமாகிறது !
ஈரக் காற்று..... !
இதழ்களின் !
இளம் சூட்டிற்கு நிகராய் !
தலைகளின் !
உராய்வு! !
ஏனோ.... !
இதன் பின்னே !
கை கோர்த்து நடக்கிறது.... !
வழக்கமாய் !
திட்டி தீர்க்கும் !
மனம்

கனகரமேஷ் கவிதைகள் 2

கனகரமேஸ்
1. மேகத்துள் ஒட்டா நிலவு !
என் !
மனக் குளத்தில் !
விம்பமாய் வீழ்ந்தும் !
ஒட்டாத நிலவாய் !
நீ !
!
2. கடல் !
கரை தடவி !
திரை கிழித்து !
நுரை தள்ளும் !
அலை கடல் !
விரை மேவி !
புரை குலைய !
தரை தாவி !
உரை பறையும் !
-கனகரமேஸ்

இன்னுந்தான்

சி.வ.வரதராஜன்
நீங்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம்!
என்னால் மறுப்புச் சொல்லமுடியவில்லை!
நீங்கள் குத்திய மூக்கணாங்கயிற்றையும்!
அறுத்து எறிய இயலவில்லை!
எத்தனை முறைகள் என்னைத்!
திக்கற்ற காடுகளில் தவிக்கவிட்டீர்கள்!
எத்தனை தடவைகள்!
சாக்கடை நீ£¤னில் இறக்கினீர்கள்!
அப்பொழுதெல்லாம்!
நான் என் மூளையைத் தின்று பசியாறினேன்!
இரத்தத்தைக்குடித்து விடாய் தீர்த்தேன்!
என்னையே கொன்று, புதைகுழியுள் கிடத்தி!
மண்போட்டு நிமிர்ந்தேன்!
உங்கள் முகங்களுக்கு முன்!
பாசங்களுக்கு முன்!
தங்கியிருத்தல்களுக்கு முன்!
பெரும்பான்மையின் முன்!
நான் தோற்றுத்தான் போகின்றேன்!
ஆயினும்!
நான் கனவில் எழுந்து, குழித்து, முழுகி!
சோடனைகள் ஏதுமின்றி உடையணிந்து!
என் பாதையை அடையாளம் கண்டு!
செல்கின்றேன்!
அதில் சில்லென்று காற்று வீசுவதையும்!
நிலவு எறிப்பதையும்!
எப்படி உங்கள் முன் நிரூபிக்கப் போகின்றேன்.!