? !
----------------------------!
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....!
நான் சொன்ன பதில் !
வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்!
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்!
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்!
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.!
சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்!
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய் !
வெற்றுப் பையுடன் ஏங்கும்!
ஏழைகளின் அங்கலாய்ப்பு.!
காதலின் பின் உன் மூளைக்கும் !
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா!
இரண்டிலுமே கவலைப் புழுதியால்!
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.!
அடிக்கடி சிரித்துக்கொள்வாய்!
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட!
ஏன் தெரியுமா!
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.!
சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்!
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்!
அதை சில பேர் தப்பாக நினைத்து!
உன்னிடம் தீட்சை பெற வருவர்!
அவர்களுக்கு தெரியாது போலும்!
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று!
அது தெரிந்தால் !
அவர்களும் ...!
வேண்டாம் எதற்கு இந்த வம்பு
கல்முனையான்