நீங்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம்!
என்னால் மறுப்புச் சொல்லமுடியவில்லை!
நீங்கள் குத்திய மூக்கணாங்கயிற்றையும்!
அறுத்து எறிய இயலவில்லை!
எத்தனை முறைகள் என்னைத்!
திக்கற்ற காடுகளில் தவிக்கவிட்டீர்கள்!
எத்தனை தடவைகள்!
சாக்கடை நீ£¤னில் இறக்கினீர்கள்!
அப்பொழுதெல்லாம்!
நான் என் மூளையைத் தின்று பசியாறினேன்!
இரத்தத்தைக்குடித்து விடாய் தீர்த்தேன்!
என்னையே கொன்று, புதைகுழியுள் கிடத்தி!
மண்போட்டு நிமிர்ந்தேன்!
உங்கள் முகங்களுக்கு முன்!
பாசங்களுக்கு முன்!
தங்கியிருத்தல்களுக்கு முன்!
பெரும்பான்மையின் முன்!
நான் தோற்றுத்தான் போகின்றேன்!
ஆயினும்!
நான் கனவில் எழுந்து, குழித்து, முழுகி!
சோடனைகள் ஏதுமின்றி உடையணிந்து!
என் பாதையை அடையாளம் கண்டு!
செல்கின்றேன்!
அதில் சில்லென்று காற்று வீசுவதையும்!
நிலவு எறிப்பதையும்!
எப்படி உங்கள் முன் நிரூபிக்கப் போகின்றேன்.!

சி.வ.வரதராஜன்