தாயா? தாயகமா?!
முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில்!
நான் உன்னை!
முதன் முறையாகப் பிரிந்தேன்!
உரிமைகள் மீட்கப்!
புறப்பட்டோம்!
உடமைகளும் களவாடப்பட்டன!
இன்று எனது நாள்!!
இத்தனைநாள் பயிற்சிகளையும்!
என் விரல்களுக்குள்!
அடைத்துக் கொண்டு!
புறப்படுகிறேன்!
எது பற்றியும் சிந்திக்கவில்லை!
இன்றுவரை!
உன் மடியில்!
படுத்துறங்க!
இப்பொழுது தோன்றுகிறது!
பார்வைகளிலேயே முடிந்து போன!
என் காதலை!
இன்னொருமுறை!
சந்திக்கத் சொல்கிறது!
என் செங்வந்திப் பூக்களுக்கும்!
வழி நெடுக நிற்கும்!
பச்சை மரங்களுக்கும்!
நீருற்ற வேண்டும்!
என்று கைகள்!
கேட்கிறது!
ஒரே ஒரு முறை!
எங்கள் துலாவில்!
நீரள்ளிக் குளிக்கும் ஆவலில்!
வேர்வை ஊற்றெடுக்கிறது!
உன் கைக்கவளங்களை!
நினைக்கும் போது!
மட்டும்தான்!
இப்பொழுதெல்லாம் பசிக்கிறது.!
ஒரு நாள் உழைப்பையேனும் கொடுத்து!
அப்பாவின்!
வியக்கும் ஒற்றைப் புருவத்தை!
பார்க்கும் வேகம்!
காலம் கடந்து வருகிறது!
உன்னைக் கட்டிக்கொண்டு!
ஒரு இரவுத் தூக்கம்!
தூக்கு தண்டனை கைதியிடம்கூட!
கேட்பார்களாம்!
கடைசி ஆசை என்று...!
உன்னிடமிருந்து!
பதில் தேவையில்லை.!
இனி எனக்கு முகவரி இல்லை!
என்னுடனே புறப்பட்ட!
என் சினேகிதர்களை!
நாளை வேறுலகில் சந்திக்கலாம்!
நான்...!
முடிந்த மட்டும் அழாதே!!
மூடிய பிணக்குழிகளின் மீது!
நீர் ஆள்ளி உற்று!!
பிற போராளிகளுடன்!
ஒரே குழியிற் புதைக்கப்படுவேன்!
என் கண்களை திறந்தபடியே!
புதைய விடு!
இச் சாம்பல்!
புத்த பூமியில்!
ஒருநாள் பூக்கள் மலரும்!
அதையேனும் நான் பார்க்கவேண்டும்!!
!
பின்குறிப்பு:!
!
இது முடிவல்ல...!
நான் பிறப்பேன்!!
!
- கவிதா நோர்வே