உண்மை.. கொலுசொலி - ந.அன்புமொழி

Photo by Gary Yost on Unsplash

01.!
உண்மை!
--------------!
மேகங்கள் மறைத்தாலும் !
மரங்கள் மறைத்தாலும் !
இரவுகள் மறைத்தாலும்!
இனிய வீடுகள் மறைத்தாலும் !
உடைகள் மறைத்தாலும்!
குடைகள் மறைத்தாலும் !
சூரியனை மறைப்பது தற்காலிகமே. !
அவ்வாறே ஒருநாளில் !
நிரந்தரமாய் மறைத்தாலும் !
கவசங்கள் பயந்துக்கொண்டே சொல்லும் !
'சூரியனிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம் !
சூரியனை உன்னால் மறுக்கமுடியாது என்று.!
அதேபோல்!
இனங்கள் மறைத்தாலும் !
மொழிகள் மறைத்தாலும் !
மதங்கள் மறைத்தாலும் !
நாடுகள் மறைத்தாலும் !
செல்வங்கள் மறைத்தாலும்!
சாதிகள் மறைத்தாலும்!
உண்மையை மறைப்பதுவும் தற்காலிகமே.!
அவ்வாறே எதிர்காலத்தில் !
எதையெதையோ உருவாக்கி!
நிரந்தரமாய் மறைத்தாலும் !
அழிவுகள் பாய்ந்துக்கொண்டே சொல்லும் !
'உண்மையிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம் !
உண்மையை உன்னால் மறுக்கமுடியாது என்று. !
சோம்பேறிகளின் பரிணாமங்களே!
நன்றாகப் பாருங்கள், !
சூரியன் நம் அன்புக்காக !
தான் எரிவதைப் பற்றி கவலைப்படாமல்!
ஏங்கிக்கொண்டே கதறுவதை. !
உழைக்காமல் உணவுண்ணும் !
பெருநோய் பரம்பரைகளே!
நன்றாக உற்றுப்பாருங்கள்,!
பூமி நம் அன்புக்காக !
தன் ஓய்வைப் பற்றி கவலைப்படாமல்!
ஏங்கிக்கொண்டே சுழலுவதை.!
பேராசை கொண்டு!
பொருள் சேர்த்துச் சாகும் !
பரிதாபத்துக்குறியவர்களே!
தயவுசெய்து!
நன்றாக உற்றுப்பாருங்கள்,!
எல்லாம் ஒன்றேயென்றும் !
அனைத்தும் நமதேயென்றும், !
வா !
விதவிதமாய் !
உழைத்து உழைத்து!
புதுவிதமான இன்பங்களை !
பலவிதமாய் கொண்டாடுவோமென்று, !
உண்மை !
மீண்டும் மீண்டும் கத்திக்;கொண்டு!
பித்துப்பிடித்தது போல் !
ஏங்கிக்கொண்டே,!
ஏன்!
நீயும் நானும் கூட ஒன்றுதான்!
என்று!
கண்ணீரோடு சிரிப்பதை.!
02.!
கொலுசொலி!
---------------------!
அதோ !
ஏழைத் தங்கையின் !
செருப்பில்லா !
கால்களைப் பார்த்து !
கண்ணீர் விட்டேன. !
அவள் காலாடை விளிம்பில் !
மறைந்திருந்த கொலுசு !
சத்தமாய் சிரித்தது, !
பைத்தியக்காரா என்று. !
ஐயோ !
என்ன கொடுமையிது !
எது முக்கியமென்பதே !
தவறாக போதிக்கப்பட்டுள்ளதே !
என் தங்கைகளுக்கு,!
கதறியழுதேன்.!
முட்டாளே !
போதும் நிறுத்து !
வாழக்கற்றுக்கொள் !
தூ.. !
துப்பினாள் தங்கை. !
புழுங்கி !
புழுங்கியழுதேன் !
மனதிற்குள். !
உண்மை !
என் !
ஒட்டுமொத்த கண்ணீரையும் !
விலைக்கு வாங்கிக்கொண்டது !
எனக்கெப்படி தெரியும்!! !
உணர்ந்து!
வாழ்த்தியது !
வெள்ளி கொலுசு.!
!
-ந.அன்புமொழி
ந.அன்புமொழி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.