பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
என்னும் குற்றச்சாட்டோடு புலம்ப நேரிடலாம்..!
01.!
பெரு மழைக்கு அல்ல...!!
-----------------------------!
உள்ளங்கை பொதிக்குள்..!
பத்திரமாய் உறங்கும் குழைந்தைகளின்!
செவிகள் சேகரிக்கின்றன..!
தூரத்து கரைகளில்..!
வெடித்து அடங்கும் குண்டுகளின்!
சப்தங்களை..!
உயிர்களைத் துளையிட்டு!
புதையும் துப்பாக்கி ரவைகளை!
பிடுங்கி எரியும் வல்லமை!
இனி எந்த விரல்கள் பெறுமோ!
அறியோம்..!
நம்பிக்கையோடு தாங்கி சுமக்கிறோம்..!
பூமிக்கு வருகைத் தந்திருக்கும்!
ஒவ்வொரு ராஜக்குமாரியையும்..!
மௌனமாய் விழி உருட்டி..!
கருகிய மரங்களின் இலைகளை உள்வாங்கி!
பதியும் ராஜக்குமாரன்களையும்...!
வேலிகளுக்கு வெளியே..!
பூத்துவிடுதல் குறித்து..!
ராணுவ பூட்சுகளின் கால்மிதி!
சகதிகளுக்கு கீழே...!
ஆழத்தில்..!
புதையுண்டு கிடக்கின்றன விதைகள்..!
அவற்றுக்கு உரமாய் ஆகிப் போயினர்!
என் சகோதர சகோதரிகள்..!
நாங்கள் காத்திருப்பது!
பெரு மழைக்கு அல்ல..!
சிறு தூறலுக்கு..!!
!
02.!
தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு!
புலம்ப நேரிடலாம்..!
-----------------------------------------------------------!
புதையும் கனவின் ஈரச் சகதிக்குள்..!
கால்களை மீட்டுக்கொள்வதான!
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கியது!
ஒரு காட்சி..!
வண்ணங்களைத் தேடி அலையும்!
வேட்டை எனவும்..!
அசைவுகளின் பதிவுகளை சுரண்டிப் பார்க்கும்!
ஆவல் எனவும்..!
வழித் தவறுதலுக்குரிய!
காரணங்களை பக்கவாட்டு மரங்களில்!
கிறுக்கி வைக்கிறது..!
தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு!
புலம்ப நேரிடலாம்..!
படுக்கையிலிருந்து அலறியோ மருண்டோ!
விழிக்கும் கணத்தில்..!
இவைகளைத் திட்டமிட்டு!
வாழ்வின் நொடிப்பொழுதுகளில் என்னிடம்!
அனுப்பி வைக்கும் தருணங்களைக்!
கைது செய்துவிடப் போவதாக!
அனுமதி கேட்டு அரசாங்க வரிசைகளில்...!
நிற்பதற்கான தீர்மானத்தோடு..!
கழிவறைக் கண்ணாடி முன் நின்றபடி..!
பற்களை பரிசோதித்து..!
பற்பசை பிதுக்கியபோது..!
கால்களை மீட்டுக்கொள்வதான!
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கும்!
ஒரு காட்சி..!
கண்ணாடியின் பாதரசக் குழம்பென!
வழிந்து...உருகி...!
சட்டென ஆவியாகி மறைந்தது