தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாய்களை கண்டால் பயம்

பிரியமுடன் பிரபு
எங்களுக்கு!
---------------------------------------------!
ஒருநாள்!
அழகான இரவின்!
அமைதி குலையும்படி!
எங்கள் குடியிருப்பின்!
வடக்குப் பகுதியில் இருந்து!
தெரு நாய்கள் சில குரைத்தது!
எல்லா நாய்களைபோல!
லொல் லொள் என்றில்லாமல்!
மதம் மதம் என்று அது குரைத்தது!
இது நாய்களிலே ஒரு!
பைத்தியகார நாய் - என்று!
என்ணினோம் நாங்கள்!
நாட்கள் நகர!
நாய்களின் எண்ணிக்கை!
அதிகமானது - ஆம்!
பக்கத்து குடியிருப்பில் இருக்கும்!
பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்!
நாயாக மாறியிருந்தார்கள்!
ஆம்!
இந்த நாய்களின்!
மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு!
அப்படியொரு சக்தி!
காதுகொடுத்து கேட்போரையெல்லாம்!
மயக்க நிலைக்கு தள்ளி!
நாய்களாய் மற்றிவிடும்!
இப்போ!
மதம் மதம் எனற சப்தம்!
சற்று அதிகமகவே கேட்க்குது!
நாக்கை தொங்கவிட்டபடி!
கூர்பற்களை காட்டும் அந்த!
நாய்களை கண்டு!
மனிதர்களாகிய எங்களுக்கு பயம்!
அவற்றை அடித்து விரட்ட!
ஆசைதான் - ஆனால் எங்களுக்கு!
கடித்து விடுமோ என்ற பயம்!
மதம் மதம் என்று!
குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக!
அவைகள் அடித்து கொள்கின்றன!
தெருவில் நடக்கவே!
பயமாக உள்ளது எங்களுக்கு!
இன்னும்!
மதம் மதம் என்ற சப்தம்!
கேட்டுகொண்டே இருக்கிறது!
மிக அருகில் , மிக அதிகமாக கேட்கிறது!
பயம் அதிகமாக உள்ளது!
பக்குவப்பட்டவர்கள் குறைவாக !
உள்ளனரோ ?!? - என்று!
பயம் அதிகமாகவே உள்ளது!
சப்தம் கேட்டுகொண்டே இருக்கு!
மதம்.. மதம்.. மதம்.. மதம்..!
-பிரியமுடன்பிரபு

ஏய் என் பேனாவே

செம்மதி
ஏய் என் பேனாவே!!
ஏன் எழுதத்துடிக்கிறாய்?!
என்னை சிறையிலிடப்போகிறாயா?!
இல்லை சிரச்சேதம் செய்யப்போகிறாயா?!
நீதி செத்துவிட்ட தேசத்தில்!
உனக்கு என்ன வேலை?!
அதர்மம் தலைவிரித்து ஆடுகையில்!
உண்மை சொன்னால்!
நீ சிலுவையில் அறையப்படுவாய்!
அல்லது சிறையிடப்படுவாய்!
ஏய் என் பேனாவே!!
போர் நடந்த போர்!
தவிர்ப்பு வலையத்தில்!
கோரமாக கொல்லப்பட்ட!
எம் உறவுகள் பற்றி!
ஏதும் எழுதிவிடாதே!
உண்மை செல்வது குற்றம் என்று!
இருபது என்ன, முப்பது ஆண்டுகளும்!
சிறையிலிடக்கூடும்!
ஐயோ என் பேனாவே!!
செட்டிகுளம் கானகத்தில்!
சீரழியும் எம்மவர் வாழும் வாழ்க்கைபற்றி!
ஏதேனும் எழுதி வைத்துவிடாதே!
சிவராம்,நடேசன் நிலை!
எனக்கும் தந்துவிடாதே!
ஏய் என் உயிர்ப் போனாவே!!
இறுதிப்போரின் இறுதிக்காலத்தில்!
தூய்மையான விடுதலைப்போராட்டம்!
மாசுபடுத்தப்பட்ட!
கதைகளை கக்கிவிடாதே!
முறிந்த பனைமரமாய்!
என்னையும் ஆக்கிவிடாதே!
ஏய் என் நேய பேனாவே!!
சொந்த நாட்டில் வதைக்கப்பட்டு!
தொலைக்கப்பட்டவர்,!
புதைக்கப்பட்டவர்,!
சிதைக்கப்பட்டவர் கதைகளை!
கிறுக்கிவிடாதே என்னையும் வதைத்து!
வீசிவிட வைத்துவிடாதே!
ஏய் என் தூய பேனாவே!!
குற்றமற்ற குற்றவாழிகளாய்!
தமிழராய் பிறந்ததே குற்றம் என்று!
வழக்கும்இன்றி விசாரனையும் இன்றி!
சிறை வைகப்பட்டிருக்கும்!
எம்மவர் பற்றி!
ஏதும் எழுதிவிடாதே!
அதர்மத்தர் கையால்!
என்னையும் அழித்துவிடாதே

புன்னகையின் சாதுர்யை

வெளிவாசல்பாலன்
திறக்கப்படாத கதவின் உட்புறத்தில்!
தொங்கும் ஓவியத்தில்!
வயலெட் புக்களின் நடுவே !
பச்சைச் செடிகளில்!
மறைந்திருக்கும்போது கண்டேன்!
உன்னுடைய முதல்நாள் புன்னகையை!
எவ்வளவு நேரம் அங்கிருக்க முடியுமெனத் தெரியவில்லை!
உனதந்தப் புன்னகை !
ஓவியங்களாகிக் கொண்டேயிருந்தது!
நமக்கருகிலிருக்கும்!
எக்சோறாச் செடிகளுக்கருகில்!
நீ தேரோடுகிறாய்.!
பிரார்த்தனை மண்டபமாய்!
விரிந்த வானத்தின் கீழே!
இரண்டு பட்சிகளின் சலனத்தில்!
நகர்கிறது அந்தக்கணம்!
என்ன தருகிறாய் பருக!
சொற்களினூடே மெதுவாக நகர்ந்து எங்கோ செல்லும்!
சாதுர்யை!
ஒரு யாத்திரீகனை உபசரிக்கும் மாயப் பொழுதில்!
கிளைகளிலிருந்து கடலுக்குத் தாவும் !
உனதந்தத் சிறகுகளை வருடுகிறேன்!
காலம் பொய்யாகிப் போவதில்லை!
எனச் சொல்லிச் சிரிக்கிறது!
உனது புன்னகையும் அந்த எக்சோறாச் செடியும் !
எப்போது விடை பெறுவது !
எப்போது விடை தருவாய்?!
வெளிவாசல்பாலன்

பேனாவின் இரு முனை

வினோபா
முனை 1: !
அடர்த்தியான வயல். !
எட்டித் தொடலாம் தண்ணீர் !
கண்ணாடிக் கிணறு. !
சுரக்குடுகை நீச்சல். !
திருட்டு மாங்காய். !
குருவிகள் !
அவை பறக்க வானம் !
நீலமாய் நீளமாய். !
!
குண்டுக் குண்டாய் மேகங்கள். !
ஓய்ந்த மழை. !
நனைந்த பூக்கள். !
ஒதுங்கிய கூரைக்கடையில் !
தேநீர் !
சூடாய் கொஞ்சம் கசப்பாய். !
எல்லாம் பற்றி !
எழுதத்தான் ஆசை !
எனக்கும். !
ooo !
முனை 2: !
உறைந்த ரத்தம். !
சிதறிக் காய்ந்த !
உறுப்புகள். !
குவியலாய் பிணங்கள், !
காங்க்ரீட்டுகள். !
டாங்கிகள் நசுக்கிய !
விளக்குக் கம்பங்கள். !
எறிந்து கூடாய் நிற்கும் !
பேருந்துகள் ரயில்கள். !
காலிழந்த பிஞ்சுகள். !
கன்னி வெடிகள் !
இன்னும் வெடிக்காமல் !
தாகத்தோடு. !
ரொட்டிக்கும் !
மருந்துக்குமான !
நாய்ச்சண்டைகள் !
வந்தவன் நகைக்க. !
அழித்து அழித்து !
மீண்டும் வரையப்படும் !
கோடுகள். !
நாளைக்காவது விடியும் !
என்று தூங்கச் செல்லும் !
கண்கள். !
எழுதத்தான் ஆசை !
எல்லாம் பற்றி. !
-- வினோபா

எதிர்ப்பாட்டு

கோ.புண்ணியவான், மலேசியா
சிட்டுக்குருவியைப்பற்றி!
கவிதைஎழுத முனைந்தான்!
ஒரு சிட்டுக்குருவி...அதன் பட்டுச்சிறகு!
என தொடங்கியது......எனத்தொடர்ந்ததும் ம்ஹம்....உயிர்க்கவில்லை!
சிறகுகள் விரிப்பில்!
மனசு லேசானது.....!
அதுவும் வரவில்லை!
ஆழமாக யோசித்ததில்!
அழுத்தமான வரியொன்று தட்டுப்பட்டது!
காற்றின் மறுபிம்பம்!
கடவுளின் சிறுவிரல்.......!
என எழுதியதும் சற்று நேரத்தில்!
சலிப்பூட்டியது கவிஞனுக்கு!
அப்போது!
சன்னல்வெளியில்!
மரக்கிளையின் இலைகள்சிலவற்றை!
இசைத்து கீச் கீச்சென்றது!
நிஜப்பறவை!
-கோ.புண்ணியவான்

ஒளி

வேதா. இலங்காதிலகம்
ஓளியில்லாப் பாதை தரும் அச்சம்.!
ஓளி நோக்கிய பயணம் தரும் உச்சம்.!
ஓளி தரும் துணிவு அதிட்டமச்சம்.!
ஒளியெனும் துணிவில் துயரமும் துச்சம்.!
விரிவான் நோக்கு மனதிற்கு ஒளி.!
சொரியும் கானம் சோகத்தில் ஒளி.!
0000!
அருவியின் சொரிவு ஆனந்த ஒளி.!
குருவியின் குறுநடை குனகல ஒளி.!
மருவிடும் வாசைன மனதிற்கு ஒளி.!
தங்கிய இருளில் மின்னலும் ஒளி.!
பொங்கிய காதல் வதனத்தில் ஒளி.!
தங்கிய அகதிக்குப் பணமன்றோ ஒளி.!
0000!
இருண்ட வாழ்வில் கல்வி ஒளி.!
சுருண்ட மனதில் நட்பு ஒளி.!
உருண்ட உலகில் தாய்மண் ஒளி.!
வெருண்ட மனதிற்கு ஆதரவு ஒளி.!
வரண்ட மனதிற்கு தமிழ் ஒளி.!
திரண்ட மனிதநேயம் வாழ்வில் ஒளி.!
0000!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்

அபலை பெண்ணே

மின்னல் இளவரசன்
ஓ அபலைப் பெண்ணே!
இந்த பாலையில் வந்து!
ஏன் பயிர் செய்ய நினைக்கிறாய்.!
நானோ பாறையாகிப் போனவன்!
என்னுள் ஈரமில்லை!
வேர்விட நினைக்காதே!
வேறு இடம் பார்.!
வாழ்வின் ஓரங்களிலும்!
உணர்வுகளின் எச்சங்களிலும்!
சதா பயனித்து கொண்டிருக்கும்!
ஒரு சமாளியனிடம்!
நீ எதை எதிர்பார்க்கிறாய்.!
நீ தருவதற்கு அதிகம் உள்ளது!
ஆனாலும் சொல்கிறேன்!
என்னிடம் நீ பெறுவதற்கு!
ஒன்றுமில்லை.!
கண்ணீரின் கண பரிமானம்!
என்னை சுற்றி இருக்க!
இந்த கனத்த இதயத்துக்கு!
காதலின் அருமை புரியாது.!
உதிர்ந்துவிட்ட பூக்களுக்கும்!
ஒரு காலத்தில் அஞ்சலி!
செலுத்தியவன்தான்!
இறுதிகட்ட பயணத்திற்கு!
என்னை தயார்படுத்தியபோது!
நீ ஏன் என்னை!
வாழ்வின் ஆரம்பத்திற்கு!
அழைக்கிறாய்.!
ரணம் படுவதற்கு!
இனி இதயமில்லை!
புறப்படு பெண்ணே!
புதிய புகலிடம் தேடு

அர்த்தமற்ற விடியலிற்காய்

மித்திரன், கொழும்பு. இலங்கை
தூரத்து விடியலுக்கய்!
இன்னமும் நாம்!
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்!
பாதையற்று...!
குந்தியிருக்க!
குடிநிலமின்றி!
கூப்பாடுபோடும்!
மந்தைக்கூட்டமாய்!
தொலைந்துபோனதாக நாம்!
நினைத்த நிம்மதியும் நிலவொளியும்.....!
கட்டிய கோவணமும்!
உருவ உனக்கு நாள்!
குறித்த பின்னர்!
எதற்கு!
அலங்காரமும் அபிசேகமும்...!
விதைநிலங்கள் எங்கும்!
விஷங்களின்!
விதைகள் இனி!
உனக்கெதற்கு விளைநிலங்கள்?!
உறவிழந்தபோதும் உன்!
விண்ணப்பங்கள்!
விடையறியாமலே!
விழுதொடிந்து போகிறது.....!
எனினும் உன்னுள்!
உறங்கிக் கிடக்கிறது!
விடுதலையின்!
வினாத்துளி.....!
தினம்தினமாய் நீ!
காண்பது உன்!
விடுதலையின்!
உதயங்களை அல்ல.......!
அஸ்த்தமனங்களையே

மேலுமொரு விருந்தாளி

கருணாகரன்
வாருங்கள்!
கைதுசெய்யப்படுவோனின் வரவேற்பில்!
ஒரு ருஷியுண்டு!
முழுப்பணிவுடைய வரவேற்பல்லவா இது!
கைதி குற்றவாளியா இல்லையா என்பது!
யாருக்கும் முக்கியமல்ல!
அவன் கைதியென்பதே போதுமானது!
கைது செய்யப்படுவோனின்!
நிழல்கூடச்சந்தேகிக்கப்படுகிறது.!
யாராலும் அனுமதிக்கப்படாத!
அவனுடைய கனவு!
அவனைக்கொண்டுபோகிறது!
அவனுடைய வெளிகளுக்கு!
கைதி!
கண்காணிக்கப்படும் வலயங்களில்!
நிழலுக்கும் அனுமதியில்லை!
தனிமைப்படுத்தப்படுதலில் தொடங்குகிறது!
அவனுக்கான தண்டனை!
இருள்!
அவனுடைய நிழலையும்துண்டித்து விட்டது!
அல்லது சிறைப்பிடித்து விட்டது.!
இப்போதவன் கலவரங்களிலிருந்து விடுபட்;ட!
அமைதிப்பிராந்தியத்தின் பிரதிநிதி!
திரளும் எண்ண அலைகளில்!
உருவாகிறது அவனுடைய!
ஒளிவெளி!
தளமாற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது!
அவனுடைய இன்னொரு மண்டலம்!
நெல்சன் மண்டேலாவுக்கு வாழ்த்துகள்!
இருளிலும் தனிமையிலும் வாழும் ரகசியத்தின்!
விதையைத்தந்தவரல்லவா நீர்

நடுநிசி

ஒளியவன்
மழையின் குளிரில்!
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்!
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது!
வெள்ளிநிலா மறைத்த மேகம்!
சில நாய்களின் சத்தம்!
சில்வண்டுகளின் இரைச்சலோடு!
கூடிச் சேர்ந்து மேலும்!
குரூரமாக்கிக் கொண்டிருந்தது!
கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு!
யாருமில்லை எனினும்!
திரும்பிடும் பக்கமெல்லாம்!
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்!
ஆந்தையின் இரைச்சலும்!
வரதட்சணைக் கொடுமையால்!
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய!
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்!
அப்பா வரக்கூடும் அதிகாலையில்!
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ.....!
-பாஸ்கர் (எ)ஒளியவன்