ஓ அபலைப் பெண்ணே!
இந்த பாலையில் வந்து!
ஏன் பயிர் செய்ய நினைக்கிறாய்.!
நானோ பாறையாகிப் போனவன்!
என்னுள் ஈரமில்லை!
வேர்விட நினைக்காதே!
வேறு இடம் பார்.!
வாழ்வின் ஓரங்களிலும்!
உணர்வுகளின் எச்சங்களிலும்!
சதா பயனித்து கொண்டிருக்கும்!
ஒரு சமாளியனிடம்!
நீ எதை எதிர்பார்க்கிறாய்.!
நீ தருவதற்கு அதிகம் உள்ளது!
ஆனாலும் சொல்கிறேன்!
என்னிடம் நீ பெறுவதற்கு!
ஒன்றுமில்லை.!
கண்ணீரின் கண பரிமானம்!
என்னை சுற்றி இருக்க!
இந்த கனத்த இதயத்துக்கு!
காதலின் அருமை புரியாது.!
உதிர்ந்துவிட்ட பூக்களுக்கும்!
ஒரு காலத்தில் அஞ்சலி!
செலுத்தியவன்தான்!
இறுதிகட்ட பயணத்திற்கு!
என்னை தயார்படுத்தியபோது!
நீ ஏன் என்னை!
வாழ்வின் ஆரம்பத்திற்கு!
அழைக்கிறாய்.!
ரணம் படுவதற்கு!
இனி இதயமில்லை!
புறப்படு பெண்ணே!
புதிய புகலிடம் தேடு
மின்னல் இளவரசன்