முனை 1: !
அடர்த்தியான வயல். !
எட்டித் தொடலாம் தண்ணீர் !
கண்ணாடிக் கிணறு. !
சுரக்குடுகை நீச்சல். !
திருட்டு மாங்காய். !
குருவிகள் !
அவை பறக்க வானம் !
நீலமாய் நீளமாய். !
!
குண்டுக் குண்டாய் மேகங்கள். !
ஓய்ந்த மழை. !
நனைந்த பூக்கள். !
ஒதுங்கிய கூரைக்கடையில் !
தேநீர் !
சூடாய் கொஞ்சம் கசப்பாய். !
எல்லாம் பற்றி !
எழுதத்தான் ஆசை !
எனக்கும். !
ooo !
முனை 2: !
உறைந்த ரத்தம். !
சிதறிக் காய்ந்த !
உறுப்புகள். !
குவியலாய் பிணங்கள், !
காங்க்ரீட்டுகள். !
டாங்கிகள் நசுக்கிய !
விளக்குக் கம்பங்கள். !
எறிந்து கூடாய் நிற்கும் !
பேருந்துகள் ரயில்கள். !
காலிழந்த பிஞ்சுகள். !
கன்னி வெடிகள் !
இன்னும் வெடிக்காமல் !
தாகத்தோடு. !
ரொட்டிக்கும் !
மருந்துக்குமான !
நாய்ச்சண்டைகள் !
வந்தவன் நகைக்க. !
அழித்து அழித்து !
மீண்டும் வரையப்படும் !
கோடுகள். !
நாளைக்காவது விடியும் !
என்று தூங்கச் செல்லும் !
கண்கள். !
எழுதத்தான் ஆசை !
எல்லாம் பற்றி. !
-- வினோபா

வினோபா