சிட்டுக்குருவியைப்பற்றி!
கவிதைஎழுத முனைந்தான்!
ஒரு சிட்டுக்குருவி...அதன் பட்டுச்சிறகு!
என தொடங்கியது......எனத்தொடர்ந்ததும் ம்ஹம்....உயிர்க்கவில்லை!
சிறகுகள் விரிப்பில்!
மனசு லேசானது.....!
அதுவும் வரவில்லை!
ஆழமாக யோசித்ததில்!
அழுத்தமான வரியொன்று தட்டுப்பட்டது!
காற்றின் மறுபிம்பம்!
கடவுளின் சிறுவிரல்.......!
என எழுதியதும் சற்று நேரத்தில்!
சலிப்பூட்டியது கவிஞனுக்கு!
அப்போது!
சன்னல்வெளியில்!
மரக்கிளையின் இலைகள்சிலவற்றை!
இசைத்து கீச் கீச்சென்றது!
நிஜப்பறவை!
-கோ.புண்ணியவான்
கோ.புண்ணியவான், மலேசியா