தூரத்து விடியலுக்கய்!
இன்னமும் நாம்!
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்!
பாதையற்று...!
குந்தியிருக்க!
குடிநிலமின்றி!
கூப்பாடுபோடும்!
மந்தைக்கூட்டமாய்!
தொலைந்துபோனதாக நாம்!
நினைத்த நிம்மதியும் நிலவொளியும்.....!
கட்டிய கோவணமும்!
உருவ உனக்கு நாள்!
குறித்த பின்னர்!
எதற்கு!
அலங்காரமும் அபிசேகமும்...!
விதைநிலங்கள் எங்கும்!
விஷங்களின்!
விதைகள் இனி!
உனக்கெதற்கு விளைநிலங்கள்?!
உறவிழந்தபோதும் உன்!
விண்ணப்பங்கள்!
விடையறியாமலே!
விழுதொடிந்து போகிறது.....!
எனினும் உன்னுள்!
உறங்கிக் கிடக்கிறது!
விடுதலையின்!
வினாத்துளி.....!
தினம்தினமாய் நீ!
காண்பது உன்!
விடுதலையின்!
உதயங்களை அல்ல.......!
அஸ்த்தமனங்களையே

மித்திரன், கொழும்பு. இலங்கை