ஓளியில்லாப் பாதை தரும் அச்சம்.!
ஓளி நோக்கிய பயணம் தரும் உச்சம்.!
ஓளி தரும் துணிவு அதிட்டமச்சம்.!
ஒளியெனும் துணிவில் துயரமும் துச்சம்.!
விரிவான் நோக்கு மனதிற்கு ஒளி.!
சொரியும் கானம் சோகத்தில் ஒளி.!
0000!
அருவியின் சொரிவு ஆனந்த ஒளி.!
குருவியின் குறுநடை குனகல ஒளி.!
மருவிடும் வாசைன மனதிற்கு ஒளி.!
தங்கிய இருளில் மின்னலும் ஒளி.!
பொங்கிய காதல் வதனத்தில் ஒளி.!
தங்கிய அகதிக்குப் பணமன்றோ ஒளி.!
0000!
இருண்ட வாழ்வில் கல்வி ஒளி.!
சுருண்ட மனதில் நட்பு ஒளி.!
உருண்ட உலகில் தாய்மண் ஒளி.!
வெருண்ட மனதிற்கு ஆதரவு ஒளி.!
வரண்ட மனதிற்கு தமிழ் ஒளி.!
திரண்ட மனிதநேயம் வாழ்வில் ஒளி.!
0000!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்
வேதா. இலங்காதிலகம்