தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அகதி மடி

கருணாகரன்
வெளியற்ற வெளியில்!
ஊற்றிய தீயில்!
தலையசைக்க முடியாமற் திணறும் காற்று!
ஒடுங்கியது!
இந்தக் குடியிருப்பில்!
புழுதித் தெருவில்!
படுத்துறங்க முடியாமல் அலையும் !
நாயின் மடியில்!
திண்ணையில்!
விட்டுச் சென்ற வழிப்போக்கனின்!
துயரம் !
அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!
யாரையும் நெருங்க விடாமல்.!
துடைத்தளிக்க முடியா !
ஞாபகத்தோடு!
தாத்தாவின் கைத்தடி !
தனியே நடந்து சென்றது!
வெளியம்பலக் கோவில் முற்றத்தில்!
விளையாடும் குழந்தைகளிடம்.!
ஒரு சொட்டு நீரில்லாத !
அகதி முற்றம்!
இவ்வெளி கடந்து !
இத்திசை கடந்து!
சடைக்கிறது ஜெயமோகனின்!
டார்த்தீனியமாய்.!
ஆப்கான் மலைச்சரிவுகள்!
பெரும் பள்ளமாகின!
அகதிப்போக்கரின்!
துயர் நிறை சுமை கூடி.!
பார்த்தேன் !
சிதறியோடும் குர்திஸியையும்!
பற்றியெரியும் தீயில்!
கருகும் ஈராக்கியையும்!
தலையில் காஸாவை !
தூக்கியபடி !
போகும் வழியும் நிற்குமிடமும் !
தெரியாமற் தடுமாறும்!
பலஸ்தீனியையும்!
தெருவான என்முற்றத்தில்!
துக்கமொழுக!
மட்டக்களப்பின் பெரு வாவிகளில்!
நிறைந்தது பெரிய காக்காவின் கூக்குரல்!
நிலவை ஊடுருவி!
பெரிய தம்பிரான் பாடுகிறார்!
தன் துயர் குத்தும் வலி!
பொறுக்காமல் வெடித்த சொற்கொண்டு!
வன்னியிலும்!
புத்தளத்திலும்!
அனற்காற்றடித்து!
ஊற்றிய தீயில்!
வெளியான வெளியில்!
படுத்துறங்க முடியா நாயின் மடியில்!
ஆற்றவியலாப் புண்ணென!
சாம்பல் பூத்துக்கிடக்குமென்!
அகதி மடி

உதவிக்கு வருவீர்களா ?

புஸ்பா கிறிஸ்ரி
என்றும்மை !
உதவி கேட்டு நிற்போர்க்கு !
இதோ வருகிறேன் என்றே கூறிவிட்டு, !
இருந்த இடம் தொ¤யாமல், !
ஓடி ஒளித்துவிடும் !
உத்தம மனிதர்களே!... !
உம்மை நாடி உதவி கேட்பவர் யார்? !
எண்ணிப் பாருங்களே ! !
அவர் யாருமில்லை உம் சோதரர்களே ! !
ஓடி ஒளிக்க வேண்டாம் !
உதவிட முன் வாருங்கள் !
இன்றைய நீங்கள் செய்யும் இவ்வுதவி !
நாளை உங்களையும் !
உங்கள் சந்ததியையும் வாழவைக்கும் !
வரப்பிரசாதமாகி நின்று, காத்திருக்கும் !
என்னும் உயர் எண்ணம்தனை !
எண்ணித் தினம் மனதில் கொண்டால், !
உள் மனத்து, உண்மை நினைவுடன் !
ஓடி ஓடி உதவிடவே !
உள்மனம் தான் ஆசைப்படுமே ! !
நாடி நரம்பெல்லாம், நலிந்திங்கு கிடக்கையில் !
ஆடித்திரிந்த, நல்ல நாட்களில் !
ஓடித் திரிந்து நீர் செய்த உதவிகள் !
தேடிவந்திங்கு, நம் துயர் துடைத்து விடும் !
மறவாதீர், மகிழ்வுடன் உதவிடுவீர்

கிராமத்தில் நான்

தென்றல்
அப்போதெல்லாம் - என் !
கால்களுக்கு பாதணி !
தேவைப்படவில்லை முட்கள் !
என் கால் கால்களின் !
சினேகிதர்கள் !
வானம்பாடிகளுக்கும் எனக்கும் !
சின்ன சின்ன மனஸ்தாபங்கள் !
யாத்திரைக்குச் செல்லும் எறும்புகளின் !
தீனிகளை பறித்து - அவைகளுக்கு !
பகைவனுமானேன் !
கவனும் கல்லுமாய் !
பறவைகலோடு சண்டை இட்ட !
காலமது-அவைகளின் !
பிள்ளை பிடி காரன் !
என்றும் என்னக்கு ஒரு !
பெயர் உண்டு - ஆனலும் !
ஆட்டுக்குட்டிகளுக்கும் !
என்னக்கும் அப்படி ஒரு !
சினேகிதம் !
புல் வெளிகளை கண்டால் !
ஒரு குட்டித்து£க்கம் !
செய்வது என்னக்கோரு !
போழுது போக்கு !
குரங்குகலை பார்த்து !
மூக்கை சுரண்டி - அவைகளின் !
கோபத்துக்குள்ளகி !
பல மரக்கிழைகளை உடைத்த !
குற்றச் சாட்டும்- என்னிடம் !
இருக்கிறது !
தோட்டக்காரன் !
துரத்தும் போது !
முள்வேலிகளுக்கு !
இரத்த தானம் செய்த !
முதல் சிறுவனும் !
நானாகத்தான் இருக்க !
முடியும் !
தென்றல்

வாழ்க்கை

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
ஒற்றைக் கம்பியில் !
ஒருக்கணித் தமர்ந்து !
ஓரக்கண்ணால் காணும் !
ஓராயிரம் காட்சிகள். !
நீண்ட தொலைவில் !
நீள் பனையொன்று - அதன் !
நிழல் வழியே !
நிம்மதியாய் இருநாய்கள். !
ஆகாய உச்சியெட்ட !
ஆலாக்கள் இரண்டு !
அதன் பின்னே !
அழகிய கிளிகள்பல. !
வயலில் வயதான !
விவசாயிகள் பலர் !
வடிவாய்ச் செப்பனிட !
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை. !
கொங்கை குலுங்கிட !
மங்கையர் பலர் !
களை கொள்ளும் !
கண்கொள்ளாக் காட்சிகள்பல. !
சக்கரச் சவட்டுதலில் !
சில புழுக்கள் - அதைக் !
கொத்தித் தின்ன !
கொக்குகள் பல. !
வீதியால் வந்தவனை !
வேருடன் பிடுங்கி !
வயலில் விட்டெறிந்த !
விபத்து ஒன்று. !
பஸ் மிதிப்பலகையில் !
பயணம்செய்த இளைஞன் !
பரிதாபமாய் விழுந்ததை !
பார்த்துச்சிரிக்கும் இளசுகள். !
வலதுகையை உரசிக்கொண்டு !
விரைவாய்ச் செல்லும் !
பாதுகாப்பு வாகனமொன்று !
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி. !
அழகழகாய் அணிவகுத்து !
அவசரமாய் பறந்துவந்த !
வாகனங்கள் அனைத்தும் !
வந்த அரசியல்வாதிக்காய். !
இத்தனையும் பார்த்துரசித்த !
இளைய காக்கை !
மற்றக்காலை உயர்த்தியபோது !
மரணம் மின்கம்பியில்

அதற்குப் பிறகு

அ. விஜயபாரதி
கைகளுக்ககப்படும்!
இறகுகளைச் சேகரிக்கிறேன்!
ஒவ்வொன்றிலும் தன்னினத்தின்!
பெயரை மட்டும் எழுதிவைத்திருக்கிறது!
அதில் அநேகமானவைகளை!
இனம் பிரித்தறிய முடிவதில்லை!
வெளியின் விசாலம் குறித்து!
அவை ஒருபோதும்!
அறைச் சுவர்களோடு பகிர்வதில்லை!
சிறகுகளிலிருக்கும் வரையில்!
காற்றை வலித்து!
திசைகளின் கூடடைகிறது!
இலைகளைப் போலல்லாமல்!
உதிர்ந்த பிறகும்!
பறக்கத் தெரிகிறது!
இறகுகளுக்கு மட்டும்.!
!
அ. விஜயபாரதி

யாதுமூரே

வை. அண்ணாஸாமி
யாதும் ஊரே யாவரும் கேளீரென!
ஓதிய உத்தமர் ஒருங்கே நின்றிட,!
தீதிலா தமிழில் நானும் கலந்தேன்.!
புதிய கவிதை ஒன்றை புனைந்தேன்.!
ஆர்வம் அன்போடு என்னை அழைக்க,!
தீராக் காதல் கொண்டேன் மொழிமேல்;!
பாரினில் கவிஞனென போர்வையோடு நானும்!
தேர்வில் வெற்றி உறுதி கொள்வேன்

புரிந்தால் சொல்வீர்களா?

சத்தி சக்திதாசன்
எனக்குள்ளே!
என்னைப் பரப்பி!
அதற்குள்ளே!
அதனைத் தேடி!
எதற்காக இத்தனை!
ஏக்கம்?!
விடைகாணா!
வினாக்களின் முழக்கம்!
நினவாலே இசைத்திடும்!
சங்கீதம்!
கனவோடு கலந்திடும்!
சிலநேரம்!
முடிவோடு தொடக்கம்!
முடியாமல்!
ப்கலோடு இரவாகத்!
தெரியாமல்!
இது என்ன மாற்றம்?!
இதுதானா சீற்றம் ?!
தெரியாத ஊருக்கு ஏனோ!
புரியாத பயணம்!
புலராத் பொழுதொன்றில்!
முடியாத கனவு!
சுகமான சுமைகளை!
சுமந்திடும் தோள்கள்!
கனக்கின்ற எடைகளை!
களைகின்ற மேடை!
சொல்லொன்று தீட்டிய!
ஓவியத்தை!
கண்ணில்லா மனிதனிடம்!
காட்டிய நேரம்

வெற்றியின் ஸ்பரிசம்

லலிதாசுந்தர்
தோல்விகள் முற்றுப்புள்ளிகள் அல்ல - அவை!
வெற்றியின் ரம்பபுள்ளிகள்!
தோல்விகள் தடைகற்கள் அல்ல - அவை!
உன் மனதை எடைபோடும் எடைகற்கள்!
தோல்விகள் நெரிஞ்சில் முட்கள் அல்ல - அவை!
உன் தன்னம்பிக்கையையும் முயற்சியையும்!
அளக்கும் தராசு முட்கள்.!
தோல்விகள் சுனாமிகள் அல்ல!
வாழ்க்கையை புரட்டிப்போட - அவை!
உனை வெற்றியை நோக்கி !
ஓடவைக்கும் சுகமான வலிகள்.!
பூக்களின் வலி!
விதைகளின் வெற்றி.!
வேர்களின் ஊடுருவல் வலி !
கிளைகளின் வெற்றி.!
குளிர்மேகங்களின் வலி!
மழையின் வெற்றி.!
உளிகளின் செதுக்கல் வலி!
சிற்பங்களின் வெற்றி.!
தோல்வியின் வலியே!
இந்த வெற்றியின் ஸ்பரிசம்.!
- லலிதாசுந்தர்

யார் கொடியவர்கள்?.. காத்திருக்கின்றது

தேவி
01.!
யார் கொடியவர்கள்?!
---------------------------!
பெண்ணாக பிறந்து !
பெண்ணை விரும்ப வைத்த !
இயற்கையின் கொடுமை !
எதற்கு எனக்கு?!
எல்லாவற்றையும் !
இலகுவில் மறக்கலாம் !
என்று கூறுபவர், !
நிலை உணர்ந்து தான் !
இப்படி கூறுகிறார்களா?!
இவர்கள் இயற்கையை !
விட கொடியவர்களாயிற்றே!!
அப்படி தான் நினைத்தேன் !
ஒரு பொழுது! - ஆனால் !
விரும்பியவளின் !
அன்பே கிடைக்காத போது, !
அந்த காதலை வேறு வழியின்றி !
கைவிட வேண்டிய நிலை!
மட்டும் எம்மாத்திரம் !!
இப்போது !
யார் தான் கொடியவர்கள்?!
02.!
காத்திருக்கின்றது..!
------------------------!
உன் விழிகளில் !
இனம் தெரியாத மின்னல் கண்டு !
என் கண்கள் கூசாதா?!
இவ்வுலகில் தொலைந்து நிற்கின்ற எனதுயிரின் ஆத்மா !
என் கண்களினூடு எட்டிப் பார்த்து உன் அன்பை தேடுகிறது!
ஓ! என அழுகிறது ஜீவாத்மா. எடுத்துறைப்பதற்க்கு !
வார்த்தைகள் இன்றி தவிக்கிறது.!
இருந்தும், !
இந்த உயிர் கொண்ட உடலால் !
ஆத்மாவின் கீதத்தை இசைத்து !
உன்னிடம் தஞ்சம் புகுகிறது.!
வாழ்வின் எல்லையில் !
உன் ஆத்மாவோடு !
என் ஆத்மா சேர்ந்து கரைய காத்திருக்கிறது

வருந்தாதே கடலே

ரவி (சுவிஸ்)
வருந்தாதே கடலே !
உன் அடிமடி பிளந்து !
வெளிப்பிரசவமாகிய சுனாமிப் பயங்கரம் உன் !
முதுகுமீதேறி அதிசவாரிசெய்தது. !
நாம் அறிவோம் !
வருந்தாதே கடலே !
நீர்திருகி அலைதிரட்டி எம் வாழ்வின் !
குரல்வளைவரை தாக்கியது. !
உயிரோடு நீருள் புதையுண்டனர் மனிதர்கள் !
சிதைவுகளுள் சொருகுண்டனர் !
தப்பிப் பிழைத்தவர்கள் உறவறுந்துபோயினர். !
கதறினர் நினைவுகளை வீசி !
அவர்தம் வரவை கேள்விக்குறிகளால் !
வரைந்து தள்ளினர். !
வலிதாங்க முடியவில்லை. !
எங்கள் குழந்தைகளும் சேர்ந்தே !
காணாமல் போயினர், காவுபோயினர். !
மரணம் எம் மனிதர்களை !
உனது மடியில்வைத்து !
உயிர்கோதி உறங்கச் செய்த கதை !
சொல்லிமாளா. !
வலிதாங்க முடியவில்லை. !
நீ மண்ணோடு பிணைந்ததனால் நாம் !
உன்னோடு பிணைந்தோம் பார். !
வாழ்வளித்து வாழ்வளித்து !
சலிப்படையா மனசுனக்கு. !
நீ அளித்த வாழ்வின் பலிபீடம் !
உன் பரப்பில் நாட்டப்பட்டிருந்ததுதான் !
இன்னும் துயர் தருகிறது. !
வலிதாங்க முடியவில்லை. !
கடலே, !
உனை தழுவி எழும் காற்றுக்குச் !
சொல்லிவிடு - வீழ்ந்த எம் வாழ்வை !
சிலிர்ப்பிவிடு என. !
எஞ்சிய எம் மனிதர்களை !
நோய் பசி எடுப்பெடுத்து !
மரணமேடைக்கு அழைத்துச் சென்றுவிடாதே !
என்றேனும் சொல்லிவிடு. !
வலிதாங்க முடியவில்லை. !
ஏவியவன் இருக்க அம்பை நொந்தென்ன. !
வருந்தாதே கடலே !
உன்மீது வலைவிரித்து !
அவர்கள் தம் வாழ்வைப் படர !
மீண்டும் வருவர். !
நிலாச் சந்திப்பொன்றில் !
காதலர்கள் ஒளிவீசி உன் !
மணலில் புரண்டெழுவர். !
ஓயாது நீ பாறைகளில் !
மோதுமோர் உயிர்ப்பொழுதில் !
துயர்கரைத்து !
இலேசாகிப்போக நான் வருவேன். !
ஓயாது மண்நுகரும் உன் !
அலைநுனியின் குறும்பினில் எம் !
குழந்தைகள் மகிழ்வெடுப்பர். !
அளைந்து அளைந்து !
அழிவினதும் ஆக்கத்தினதும் புள்ளிகளில் !
நம்பிக்கைகளை சலிப்பின்றி வரைவர். !
வருந்தாதே கடலே, நீ !
வருந்தாதே! !
- ரவி (சுவிஸ்)