திறக்கப்படாத கதவின் உட்புறத்தில்!
தொங்கும் ஓவியத்தில்!
வயலெட் புக்களின் நடுவே !
பச்சைச் செடிகளில்!
மறைந்திருக்கும்போது கண்டேன்!
உன்னுடைய முதல்நாள் புன்னகையை!
எவ்வளவு நேரம் அங்கிருக்க முடியுமெனத் தெரியவில்லை!
உனதந்தப் புன்னகை !
ஓவியங்களாகிக் கொண்டேயிருந்தது!
நமக்கருகிலிருக்கும்!
எக்சோறாச் செடிகளுக்கருகில்!
நீ தேரோடுகிறாய்.!
பிரார்த்தனை மண்டபமாய்!
விரிந்த வானத்தின் கீழே!
இரண்டு பட்சிகளின் சலனத்தில்!
நகர்கிறது அந்தக்கணம்!
என்ன தருகிறாய் பருக!
சொற்களினூடே மெதுவாக நகர்ந்து எங்கோ செல்லும்!
சாதுர்யை!
ஒரு யாத்திரீகனை உபசரிக்கும் மாயப் பொழுதில்!
கிளைகளிலிருந்து கடலுக்குத் தாவும் !
உனதந்தத் சிறகுகளை வருடுகிறேன்!
காலம் பொய்யாகிப் போவதில்லை!
எனச் சொல்லிச் சிரிக்கிறது!
உனது புன்னகையும் அந்த எக்சோறாச் செடியும் !
எப்போது விடை பெறுவது !
எப்போது விடை தருவாய்?!
வெளிவாசல்பாலன்
வெளிவாசல்பாலன்