தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆடுகளம்

த.சரீஷ்
மாறாத சுவடுகளாக!
அங்கும்!
இங்கும்!
சிலசமயங்களில்!
மறக்கமுடியாமல் அகலவிரிந்தாடும்!
துயரங்களாக...!
ஆட்டங்கள் தொடர்கின்றன...!!
அடுத்தது என்ன...?!
என்ற கேள்விக்குறியோடு!
அவர்களின்!
ஆட்டத்தின் போது!
எங்களுக்கு...!
ஏக்கங்கள் கலந்த!
வழமையான காத்திருப்புகள்!
வளர்ந்துகொண்டே செல்கின்றது.!
வீரம்கொண்ட உலக நாடுகளின்!
விளையாட்டு!
சிலவேளைகளில்!
விளையாட்டுத்தனமாகவும்!
பலவேளைகளில்!
கவலைக்குரிய விடயமாகவும்!
ஆட்டங்கள் தொடர்கின்றன...!!
இப்போது நாங்கள்!
நினைப்பதெல்லாம்!
இனி...!
ஆடுகளம் எது என்பதும்!
நடுவர்கள் யார் என்பதும்தான்!
எதிரணியில்!
ஆட்டக்காரர்கள் யார் என்பதில்!
எமக்கு எப்போம்!
சந்தேகம் உண்டாவதே இல்லை...!!
இன்றைய ஆட்டம்!
நல்ல விறுவிறுப்பு என்று!
சொல்லிக்கொண்டே!
தொடர்ந்தும்!
அவன் அதே...!
உலகக்கிண்ண உதைபந்தாட்டம் பற்றி!
பேசிக்கொண்டிருக்கின்றான்.!
நான்...!
மனிதர்களால் ஒருபோதும் ஆடமுடியாத!
மகிந்தரின் சிந்தனைப்படி...!
வங்காலையிலும்!
அல்லைப்பிட்டியிலும் ஆடிய!
அந்த ஆட்டம் பற்றி!
சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்...!!
த.சரீஷ்!
20.06.2006 பாரீஸ்

ஏமாற்றம்

அனாமிகா பிரித்திமா
வீட்டின் அழைப்புமணி அடித்தது...!
மானாய் துள்ளி ஓடினேன்...!
அது நீங்களாய் இருப்பீர்கள் என்று...!
இம்முறையும் இல்லை... !
ஏமாற்றம்...!
தொலைபேசி மணி அழைத்தது...!
மூச்சிரைக்க ஓடி எடுப்பேன்...!
அந்த அழைப்பு தங்களின்...!
சிம்மக் குரலை சுமந்து வரும் என்று...!
இம்முறையும் இல்லை... !
ஏமாற்றம்...!
தபால் என்றவுடன்...!
தலை தெறிக்க ஓடுகிறேன்...!
தங்கள் முத்தான கடிதம்...!
என் கையில் தவழும் என...!
இம்முறையும் இல்லை... !
ஏமாற்றம்...!
இதை ஒவ்வொரு...!
முறையும் செய்கிறேன்...!
என்றாவது ஒரு நாள்...!
என் ஏமாற்றத்திற்கு...!
முற்றுப்புள்ளி...!
வரும் என்று...!
........?!
!
-அனாமிகா பிரித்திமா

நட்பின் வலி

தமிழ் ராஜா
காலங்கள் செல்லும் வழி!
என் காலோடு நான் செல்கையிலே!
வீதி மட்டும் வந்த உன் நட்பு!
என் விழியை நனைத்துப் போகையிலே!
கால் வலியும் தெரியலையே!
கன்னி உந்தன் நினைவினிலே!
முகம் சிவக்க சிரித்தநாட்கள்!
என் ஆயுள் முழுதும்!
என் நெஞ்சினிலே!
பழுகும் பொழுதும் படித்த!
உன் மனது!
பிரியும் பொழுதும்!
நெஞ்சம் மறக்கலையே!
பாசமென்றோ! நேசமென்றோ!!
பல பெயர் சொல்லலாம்!
ஆனால் நட்பொன்றே!
நம் உறவை அழகாகச் !
சொல்லும் வார்த்தை! இல்லை, வாசகம்!!
உன் பந்தம் எனக்கு!
ரத்த பந்த மின்றி ஒரு!
சகோதிரியையே நினைவுப்படுத்துகிறது!
சகோதிரியிடமும் நட்பையே நினைவுப்படுத்துகிறது!
பழைமை கொண்ட நம் நட்பில்!
உரிமையான உணர்வுகள்!
சில காலம் !
ஊஞ்சலாடியது உலக அனுபவம்!
எனக்கு...!
நட்பின் வலியை உணர்ந்தேன்...!
அந்த வலியும்!
நெஞ்சில் சுகமாகவே இருக்கு!
காலங்கள் செல்லும் வழி!
என் காலோடு நான் செல்கையிலே... !
!
--தமிழ்ராஜா

சரியான பிணம்

கே.பாலமுருகன்
“சரியான பிணம்”!
------------------!
அவன்!
நடந்து வருகிறான்!!
“பிணம்” என்று !
சிலர் பிதற்றுக்கிறார்கள்!!
அவனுடைய கண்கள்!
பிணமாகியிருந்தன!!
“பொணம் போது பாரு”!
கல்லெறிந்தார்கள் சிலர்!
விளையாட்டாக!!
அவன் !
பிணமாகியிருந்தான்!!
பிணமாகவே நடந்தான்!!
அருகிலுள்ளவர்களின் கூச்சல்!
விகாரமடைந்து!
பயங்கர முகங்களாக!
மாறியிருந்தன!!
எல்லோரும்!
பிணத்தைக் கண்டு!
வெறுக்கிறார்கள்!!
எல்லோரும்!
பிணங்களைப் பற்றி!
பேசுகிறார்கள்!!
எல்லோரும்!
பிணங்களை அடையாளம் !
காட்டுகிறார்கள்!!
பிணங்களை!
உருவாக்கும்!
இவர்களின் பிடியிலிருந்து!
விலகி!
வேகமாகப் பின்தொடர்கிறேன்!
அந்தப் பிணம்!
என்கிற மனிதனை!!
‘அவன் சரியான பிணம்’!
என்று கதறும்!
ஓசைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன!!
கே.பாலமுருகன்!
மலேசியா

விஜயபாரதி கவிதைகள் 25-11-07

அ. விஜயபாரதி
1. உடன்பிறப்பு!
மருத்துவச்சிகளால்!
அறுத்தெறிய முடிவதில்லை!
உடன் பிறந்த!
சாதியின் தொப்புள்க்கொடியை!
!
2. அஃறிணை தேவதைகள்!
பூவிதழ் நெய்த இருக்கைகளில்!
செந்தேன் சிந்தும் விருந்து!
வானவில் தைத்த சிறகுகளில்!
வானில் துய்க்கும் புணர்ச்சி - இவை!
யாவுமடங்கிய வாழ்க்கை!
எட்டுப்பகலுக்குத் தான் என்றாலும்!
பட்டினிச் சாவுகளில்லை!
பட்டாம்பூச்சிகளிடம்!
!
3. முதல் பயணத்தில்…!
துண்டுச்சீட்டு கிழித்து!
மை கசியும் பேனாவில் பெயரெழுதி!
வயிற்றில் இறுக்கிய நூலின்!
வலியைச் சுமந்தபடி!
விரல்களிலிருந்து விடுதலையான!
பட்டாம்பூச்சி பற்றிய!
பால்ய நினைவுகள் பறந்துகொண்டிருந்தன!
என் விமானத்திற்கு மேலே!
!
4. சாவிக்கொத்து!
நகரத்து வீடுகளின்!
சாவிக்கொத்துகள் சொல்லும்!
திருடர்களின் பலம்!
!
5. நிழல்!
நின்றுகொண்டிருக்கும்!
பேருந்திற்கடியில்!
ஓய்வெடுக்கிறது!
ஓடிக் களைத்த!
நாய்!
!
6.அழுக்கு!
வீடு சென்று!
விடுமுறை கழித்து!
கல்லூரி திரும்பிய!
சில நாட்களுக்குள்ளாக!
அழுக்கேறிவிடுகிறது!
அம்மா வெளுத்த!
உடைகளோடு ‘உள்ளமும்’

தமிழ் மண்ணே வாழ்க

இனியஹாஜி, தோஹா - கத்தார்
தமிழ் மண்ணே வாழ்க!!
தமிழ ரெல்லாம் வாழ்க!!!
தமிழும் நாமும் வேறல்ல..!
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!! !
தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..!
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. !
அன்பு செய்தால் அடங்குவோம்!!
வம்பு செய்தால் அடக்குவோம்!!!
தெம்பு எமக்கு இருக்குடா..!
தம்பியை நினைச்சு பாரடா...!!! !
ஒன்றே இறை.. ஒன்றே மறை...!
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!!
எல்லா மொழியும் நம் மொழிதான்...!
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்... !
யாதும் ஊரே... யாவரும் கேளிர்...!
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...! !
மனிதம் போற்றுவோம் - அதில்!
புனிதம் காட்டுவோம்!!
இரத்தல் இழிவுடா - தம்பி!
உழைத்தால் உயர்வுடா...! !
உண்மை பேசுடா - அதில்!
நன்மை இருக்குடா...!
வாய்மை வெல்லவே - நீ!
வாழ்ந்து காட்டடா...! !
பெண்மை போற்றடா - அவர் நம்!
அன்னையர் அல்லவா!!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்!
இணைய வேண்டுமல்லவா...! !
ஆசை அடக்கவே - கொஞ்சம்!
அறிவைக் கூட்டடா!!
வேஷம் கட்டிய - வீணோரை!
விரட்டி ஓட்டடா...!! !
உலகம் முழுவதும்!
வாழும் நம் உறவுகள்...!
வானம்பாடி போல்!
விரிக்கட்டும் நம் சிறகுகள்

இரவு மிருகம்

சுகிர்தாராணி
பருவப்பெண்ணின் பசலையைப் போல!
கவிழத் தொடங்கியிருந்தது இருள்.!
கதவடைத்துவிட்டு!
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்!
தனியாக அமர்ந்திருந்தேன்!
இப்போதுதான் தினமும் விரும்பாத!
அதன் வருகை நிகழ்ந்தது.!
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே!
என்னை உருவி எடுத்துவிட்டு!
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.!
நான் திகைக்க நினைக்கையில்!
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே!
படித்து முடித்திருந்தேன்!
என் கண்களின் ஒளிக்கற்றைகள்!
முன்னறையில் உறங்குபவனின்!
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன!
கோப்பை நிறைய வழியும் மதுவோடு!
என்னுடல் மூழ்கி மிதந்தது!
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை!
சன்னமாய் சொல்லியவாறு!
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்தவேளை!
பறவைகளின் சிறகோசை கேட்டதும்!
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு!
ஓடிவிட்டது இரவு மிருகம்!
-சுகிர்தாராணி (காலச்சுவடு, இதழ் 47 மே-ஜீன் 2003)

காருண்யனின் 2 கவிதைகள்

காருண்யன்
சுமை !
!
வாழ்க்கை !
அப்படியொன்றும் !
சுமக்க முடியாததென்றில்லை !
அடியும் கண்டலும் !
ரணமும் வலியும் !
இருக்குந்தான், !
ஆனாலும் சுமக்கலாம். !
அதுதான் !
சுமக்கிறோமே? !
ஆயுள். !
!
அடியில் ரணத்தில் !
அலைச்சலில் ஆதரவில் !
தவிப்பில் தாகத்தில் !
காமத்தில் போகத்தில் !
வம்பில் வாழ்த்தில் !
பழியில் பந்தாவில் !
சராசரி மனுஷன் ஆயுளில் !
மூன்றில் இரண்டைக் கரைத்தாயிற்று !
உள்ள சொச்சத்தையாவது !
பயனாக்க வேணுமென்றால் !
கொஞ்சம் வாசிப்பதையும் !
எழுதிக் குழப்புவதையும் தவிர !
வேறு என்னதான் !
செய்வதென்றுதெரியவில்லை

ஒரு நீதி நியாயம் கேட்கிறது

ஆனந்தன்
உலகிற்கு வெளிச்சம் தரும் !
காரணத்தால் மட்டும் !
சூரியனின் வாதம் கேட்டு !
சந்திரனை தண்டித்தல் நியாயமே ? !
பூமிக்கும் மேகத்திற்கும் !
நடக்கும் சண்டையில் !
மழையைத் தண்டித்தல் நியாயமே ? !
பூவின் வாதம் கேட்டு !
தேன் திருடுவதாய் !
வண்டை தண்டித்தால் !
மகரந்த சேர்கை ஏது ? !
உள்ளம் திருடியதாய் !
காதலர்களைத் தண்டித்தால் !
காதல் தான் ஏது ? !
விதை திருடியதாய் !
நிலத்தை தண்டித்தால் !
மண்ணில் மரங்கள்தான் ஏது ? !
மழைத்துளிகளைத் திருடுவதாய் !
கடலைத் தண்டித்தால் !
விலை உயர்ந்த முத்துக்கள் ஏது ? !
வாயைத் திறந்து !
உலகத்தைக் காட்ட !
வெண்ணை திருடும் !
மாயக் கண்ணனல்ல நான் ! !
கொடை வள்ளல் கர்ணனின் !
புண்ணியத்தையும் திருட !
பரந்தாமனல்ல நான் ! !
ஏவல் மட்டும் அல்ல !
இடமும், பொருளும் !
அறியாது பேசும் !
பேச்சாளன் நான் ! !
நியாயம் பேசும் இடத்தில் !
மெனமாய் நிற்கும் !
நிராயுதபானி நான் ! !
என் நியாயத்தையும் !
ஒரு முறை கேளுங்கள் !
முடிவுகள் எடுக்கப்படும் முன்னர்

நீயும் நானும்.. சந்தா்ப்ப பிராணிகள்

கல்முனையான்
01.!
நீயும் நானும்!
----------------------!
அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்!
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்!
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்!
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !!
சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே!
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்!
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட!
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…!
அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்!
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்!
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு!
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.!
இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்!
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை!
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்!
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”!
நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க!
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க!
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்!
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்!
பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்!
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்!
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று!
மலராகி மணம் வீசுகின்றது என்று!
பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று!
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை!
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்!
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்!
முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்!
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே!
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே!
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?!
02.!
சந்தா்ப்ப பிராணிகள்!
--------------------------------!
ஈர வலயத்து அட்டைகளின் மறு பிறப்பாய்!
நன்மையை உறிஞ்சி விட்டு நாதியின்றி தவிர்க்கவிடும்!
மனிதன் என்ற பெயரிலுள்ள இரண்டு கால்!
பூச்சிகளாய் செத்தைகளில் பதுங்குகின்ற மானிடம்!
பச்சை இரத்தத்தின் சிவப்பு நிறத்தினிலே காகிதப்!
படகு விட்டு தோராட்டம் பார்க்கின்ற பாசாங்க!
மனிதா்களின் ஈரமற்ற இதய இடுக்குகளின் ஓரத்திலே!
இன்னும் இருக்கிறது சந்தர்ப்பவாதம் என்ற சாக்கடை வடிகான்கள்!
சுவாசிக்கும் ஒட்சிசனின் ஓரப்பார்வையிலே ஒடுங்கி!
நாசி நீரில் கால் கழுவி வெளியேறும் காபனீரொட்சைட்டிலே!
ஈரத் தலையை வீரத்தோடு உலா்த்தி எட்டிப் பார்க்கும்!
எட்டப்பக் கூட்டத்தின் ஏழாம் சாமத்து சாத்தான்கள்!
எண்ணெய் வடியும் தலையினிலே மண்னை அள்ளி!
மலர்க் கோலம் போடும் மானம் கெட்ட மங்கையரின்!
அற்கஹோல் பார்வைக்காய் அரை வயிறு சாப்பிட்டு!
அலைகின்ற ஆந்தைக் கூட்டத்தி்ன் முகவரிகள்!
தார்போட்ட றோட்டினிலே யார் வீட்டில் குழப்பம் என்று!
தூர் போட்டு மேய்கின்ற வெள்ளாட்டுக் கூட்டத்தில்!
தள்ளாத வயதினிலும் துள்ளாத கால்கலுடன்!
தூங்காமல் விழித்திருக்கும் பெருசுகளின் விழிகள்