தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அஜந்தனின் 7 கவிதைகள்

அஜந்தன் மயில்வாகனம்
வரம்! !
குழந்தை வரம் !
கொடு ங்கள் சாமி !
என்றாள் அவள் !
சரியான இடத்துக்குத் தான் !
வந்திருக்கிறாய் !
என்றார் சாமியார் !
இந்து மதம் !
மிருகங்களைத் தெய்வமாக்கி !
மனிதார்களை மிருகமக்கி !
இறந்தவருக்கு கோயில்கட்டி !
இருப்பவர்களைப் போட்டு த்தள்ளி !
மாட்டு மலத்தை !
திருநீறாக்கி !
மனித மண்டையில் !
நாமம் போட்டது. !
எமது பண்பாடு !
பாம்பிற்கு பாலுற்றி !
கும்பிடு வோம் !
பச்சைப்பெண்ணிற்கு கள்ளிப் !
பாலூற்றி !
கொன்றிடு வோம்! !
சோழியன் குடு மி !
பணக் கஸ்ரம் தீர !
என்ன வழி என்றான் !
ஆசாமி! !
ஒரு பத்து ரூபாய் கட்டி !
பூசை செய் என்றான் !
பூசாரி! !
அவசியமா? !
குடிசைத் தாயின் முலையில் பாலில்லை !
அழிகின்றது மழலை! !
கோபுரக் கோயிலில் பாலாபிஷேகம். !
தலைவர்கள் !
தமிழன் நடிகர்களையெல்லாம் !
தலைவர்களாக்கினான் !
அதனால் !
தலைவர்கள் எல்லாம் !
நடிகர்கள் ஆனார்கள் !
!
சமூகம் !
நேற்று வரை !
நானும் அவனைத் !
தேசத் துரோகியென்றே !
எண்ணியிருந்தேன் !
ஆனால் !
அவன் தான் உண்மையான !
தேச பக்தன் !
என்று நான் !
உணர்ந்த போது !
இன்று அவன் !
உயிருடன் இல்லை! !
உண்மைகள் வதந்திகளாகவும் !
வதந்திகள் உண்மைகளாகவும் !
உலாவரும் !
எமது சமூகத்தில் !
சாக்கடையில் !
அனாதரவாக !
மிதக்கின்றது !
அவனின் பிணம்

அந்த ஒரு சொல்மட்டும்

கவிதா. நோர்வே
ரணங்களை கிள்ளி!
விளையாடுகிறாய் என்னோடு.!
வாதங்கள் செய்வது!
வழமையென்றாலும்!
வலிக்கிறது!
அந்த ஒரு சொல் மட்டும்!
வார்த்தைக்குண்டானா சக்தியா!
இல்லை!
நீ சொன்னதால் வந்த விரக்தியா!
விளையாடிக்கொண்டிரு நீ.!
எனக்குள்ளே!
இறுகி இறுகி!
ஆகிவிட்டேன்!
உன் கைப்பொம்மைபோல நான்.!
வருகிறது கோபம்!
கோபக் கனைகளை வீச வீச!
திரும்பி விடுகிறது என்னிடமே!
வடிந்து போகிறது!
கண்ணின் ஓரம்!
என் ஆணைகளை மீறய வண்ணம்!
உயிரைப் பிழிந்து!
கசக்கி எறிவதென்பது!
இதைத்தானோ?!
இதயத்தில் அறைந்து!
பாராமல் போவதென்பதும்!
இதுதானோ!
!
“சில வேளைகளில்!
சில மனிதர்கள்” என்றில்லை!
உயிரான மனிதர்கள்!
உரசிப் பார்க்கையில்!
உதிர்ந்து போகிறது!
எனது உயிரும்...உணர்வும்!
கவலைப்பட்டதில்லை நான்!
எதும் இல்லை!
எனக்காக இவ்வுலகில் என்றபோதும்.!
நீயுமா?!
!
- கவிதா நோர்வே

கறவை

ஹெச்.ஜி.ரசூல்
அள்ளக் குறையாத பாலூற்றின் !
அமுத சுரபிகள்-காம்புகள் !
மூக்குத் துவாரங்களில் !
மூக்கணாங் கயிறுகள் !
விரிக்கும் உதடுகளில் வாய்கூடுகள் !
வைக்கோல் கன்றுகளை !
கண்களில் காட்டி !
கறவை நடக்கும் கள்ளத்தனமாய். !
தாக இளைப்பொடு !
கன்றின் வயிறுகள் !
நீர்த்துப்போகாத மௌனம் !
பசுமடியின் காம்புகளில் !
இப்போது கசிகிறது ரத்தம்

ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்

இளங்கோ -கவிதைக்காரன் டைரி
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகலை!
வேரோடு கிள்ளி எறிய!
தேடவேண்டியிருக்கிறது!
நேற்றைய இரவின் சிறு விரல்களை!
அது தன் மீது எழுதிச் செல்லும்!
தருணங்களை கைப்பிடி நிழலுக்குள்!
ஒளித்துவைப்பது சாத்தியமில்லை!
கண் கூசி..!
மன இடுக்குக்குள் பதுங்கிக்கொள்ளும்!
சாமர்த்தியத்தை பழகி வைத்திருக்கின்றன!
கொடும் பகல்கள்!
மழையற்ற நகரத்து வெறிச்சோடுதல்!
நம்பும்படியான ஒரு ஈரத்தை!
எப்போதும் வழங்குவதில்லை!
அன்றாடம் தீவுகளிலிருந்து புறப்படும்!
இரண்டு கால் பிராணிகளின்!
வால்கள்!
நூற்றாண்டுகளுக்கு முன் நறுக்கப்பட்டும்..!
ஆயாசத்துடன் மலரும் இந்த இரவையும்!
துண்டித்து வீச..!
தேடவேண்டியிருக்கிறது!
நேற்றையப் பகலில் நிகழ்ந்த!
ஒரு!
கூர்மையான உரையாடலை

ரகசியமானது இயற்க்கை

றஞ்சினி
குத்தும் குளிருக்குள் தோற்றுப்போன சூரியன்!
பழிங்குகளா தொங்கும் பனித்துகள்கள்!
கரையோரம் உறைந்து கிடக்கும் கடலின் ரகசியம்!
உணவுக்காக மனிதர்களிடம்!
உறவாகிப்போன பறவைகள்!
மூச்சுத்திணறும் குளிருக்குள்ளும்!
திமிராக கண்சிமிட்டுகிறது இயற்கை!
எல்லாத்திற்குள்ளுமாக எங்கேயோ!
தொலைந்துபோன நான்!
சேர்ந்து நடக்க நீயில்லா பொழுதுகள்!
குத்தும் குளிரைவிடக் கொடுமையானது!
-- றஞ்ஜினி

விடியலை நேரம் உணர்த்தினாலும்

நளாயினி
விடியலை !
நேரம் உணர்த்தினாலும் !
பனிதூறும் காலத்தில் !
சூரியன் வருவதில்லை. !
வழமையான !
உடல் நிறையை விட !
ஆறு ஏழு கிலோவால் !
என் நிறை உடை வடிவில் !
என்னைத் துரத்தும். !
தொட்டிலுக்குள் !
பார்த்தால் !
எட்டு மாத செல்ல மகள் !
கையால் முகம் போர்த்து !
பஞ்சுக்குஞ்சாய் !
துயிலும் அழகு. !
வெளியில் இறங்கும் போது !
நற நற என !
ஏன் காலடியில் உடையும் !
பனிக்கண்ணாடித்துண்டங்கள் போல் !
என் மனசு !
கால்கள் நடுவீதியில் !
நடக்கும் போது !
பூப்பூவாய் தேங்காய்ப்பூ !
பனித் து£வல்கள். !
தொட்டுப்பார்த்தால் !
வாய் நீர் வடித்துக்கொண்டே !
தள்ளுவண்டிக்குள் !
உறங்கும் குழந்தையின் !
கன்னத்தின் மென்மை. !
சிரித்து நின்ற !
மரங்கள் எல்லாம் !
என் உணர்வைப்போல் !
மரத்துத்தான் கிடக்கிறது !
விழியை மறைக்கும் !
உப்பு நீரைப்போல் !
மரங்களின் கிளை இலைகளை !
மறைக்கும் பனித்துளிகள் !
யாரும் ஆறதல் கூறிவிட்டால் !
உடைந்து விழுந்து !
கன்னக்கதுப்பை !
ஈரமாக்க துடிக்கும் !
உவர்ப்பு நீரைப்போல் !
மரக்கிளைகளிலும் !
கட்டிட கூரைகளிலும் !
தொங்கும் !
பனிக்கண்டாடிக் !
கூர்முனைகள். !
ஊசியாய் !
குளிர் என்னைத்தாக்க !
போரில் கண்முன்னே !
தாயை இழந்த !
குழந்தையின் !
படபடப்புப்போல் !
என் உடல் மெல்ல !
நடுங்கும். !
!
மெல்ல அணைத்து !
ஓசையின்றி முத்தமிட்டு !
காப்பக காறியிடம் !
குழந்தையை !
கொடுத்துவிட்டு !
உணவு விடுதியில் !
வேலையில் மூழ்கிற போது !
நெருப்பு !
கொதி எண்ணெய் !
எல்லாமே என் உடல் மேல் பட்ட !
வேதனை. !
இறைச்சி மீன் வெட்டும் !
கூரிய கத்தி கொண்டு !
என் உடலை யாரோ அறுப்பது !
போன்ற உணர்வு !
பீறும் இரத்தமாய் !
என் உணர்வுகள் எல்லாம் !
என்னை கொன்று தின்னும். !
ஓஓ ரணப்படும் என் மனசு. !
சொல்லமுடியாத துயரம் !
என்னை அப்பும். !
ஓ என் செல்ல மகள் !
என்னைத்தேடுவாளோ? !
உடலில் உள்ள !
உரோமம் எல்லாம் சேர்ந்து !
ஒருவித சிலிர்ப்பைத்தந்து !
விழிவழியே உப்பு நீரை வரவழைக்கும்

மனவெடிப்பிலுன் தடம்பதித்து

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு பெருவெளிப் போர்க்களத்தை!
மனதுள் பரப்பிச்!
சென்றதுன் வருகை !
மீளவும் மீளவும்!
சுடுகாடாய்ப் புகை கசிய!
வெடித்துச் சிதறுகிறது மனம் !!
!
அமைதி,அந்தஸ்து,!
அத்தனை நிம்மதியும்!
வாய்க்கப் பெற்றவன் நானென!
இறுமாந்து நின்றவேளை!
சலனமற்ற தூறலென!
சப்தங்களை விழுங்கி,விழுங்கி!
நீ வந்துநின்றாய் !
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...!
நானேதுமறியேன் !!
!
வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்!
மௌனத்தை மொழியாக்கிப்!
பார்த்தபடி நின்றாயதில்!
சலனத்தையோ,சிவப்பையோ!
நான் காணவில்லை !!
!
கேள்விகளை மட்டுமே!
வார்த்தைகளாக்கியுன்னிடம்!
வருகையின் மூலத்தை - நான்!
வினவிச் சோர்ந்தவேளையிலும்!
என் நெஞ்சப்பரப்பில்!
ஆழத்தடம் பதித்து,!
மௌனத்தை மொழியாக்கி!
ஓர் தென்றல் போல!
நீ விலகிச்சென்றாய் !!
!
உனது கருவிழிகள்!
பயணிக்கும் திசையில்!
மட்டுமே வாழ்ந்திடப்!
பலர் காத்து நிற்கையில்...!
!
எந்தக் கோலத்துக்கும்!
வசப்படாப் புள்ளியொன்றிடம்!
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?!
எந்தத்திசை நோக்கியும்!
முடிவுறாப் பாதையொன்றில்!
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?!
!
உன் வாசனை நிறுத்திச்சென்று!
சிலபொழுது கடந்தவேளை,!
தீயிடம் என் பெயரை - நீ!
உச்சரித்து மாண்டதாக!
வேதனை மிகும் செய்தியொன்று!
காற்றோடு வந்தது !!
!
ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை!
மனதில் ஓயாமல் அலையடிக்கச்!
செய்ததுன்னிறப்பு !
மீளவும் மீளவும்!
வசந்தங்களேதுமற்றவொரு!
மயானத்து வனாந்தரமாய்!
வெடித்துச் சிதறியும்!
துடித்துக்கொண்டே!
ஏனின்னும் இருக்கிறதுன்!
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

காணவில்லை

வேல் கண்ணன்
நீயும் நானும்!
நம்மிடையே நிகழ்ந்த நிகழ்வொன்றில்!
ஐந்து தலை நாகமொன்று!
நிரம்பிக்கொண்டது இடை....வெளியை.!
உன்னுடையது என்று நானும்!
என்னுடையது என்று நீயும்!
தனித்தனியே விலகிக்கொண்டோம்!
நான் விட்டு சென்ற ஆளுமையையும்!
நீ தெளித்து சென்ற அலட்சியத்தையும்!
விழுங்கி செழித்தது!
மாறிமாறி பழிச்சொன்ன சொற்கள்!
உற்சாககபானமானது!
ஒரு பின்மாலையில் !
நகர பற்களிலிருந்து பிதுங்கி ஒரு சேர!
வந்தபோது அறையில் நிரம்பி தளும்பிய!
ஆலகால விஷத்தில் மூழ்கிபோனோம்.!
சில நாட்களாகவே!
நாமிருவரையும் காணவில்லை

வசந்தகால தளிர்கள்

ஒளியவன்
கொடுப்பதுமின்றி!
எடுப்பதுமின்றி!
புரிதலில் ஊறிய!
பேச்சுக்கள்!
உனக்குமெனக்குமான!
உள்ள வாசல்கள்.!
தொடுகையின் நேரத்தில்!
சலனமற்ற உனது விரல்கள்!
வசந்த காலப் பொழுதின்!
புதிய தளிர்களாய்!
என்னுள்.!
உன் வேர்கள்!
உனக்கான இடத்திலேயே!
இருப்பதும் உன்!
இலைகள் எனக்கான!
இடத்தில் நிழல்!
தருவதுமே நட்பின் சாட்சி.!
நாளை துவங்கும்!
எனது நெடுந்தூரப்!
பயணத்தில் நமது!
பிரிவைக் கடக்கவல்ல!
துடுப்பைப் பரிமாறிச்!
சென்று கொண்டிருக்கிறாய்!
'எனக்கெதிரான திசையில்!'

இதயங்கள் தேவை

எம்.ரிஷான் ஷெரீப்
பூத்திருந்த பூவொன்று!
செடிவிட்டுக் கழன்று!
புல் மீது விழுந்தென்னெஞ்சில்!
தீப்பற்ற வைத்தது !!
கூட்டிலிருந்து!
காகம் கொத்திச்!
சொண்டகன்று!
நிலம் வீழ்ந்தென்!
கரண்டிப் பால் நக்கிப்!
பின்னிறந்த அணில்குஞ்சு!
என்னிதயத்தில்!
அமிலமள்ளிப் பூசியது !!
பாதை கடக்கமுயன்று!
கண்முன்னே கணப்பொழுதில்!
மோதுண்டு மரணித்த தாயும்!
குருதிக்கோடுகளைச்!
சிரசில் ஏந்தி,!
லேசான புன்னகையை!
முகத்தில் கொண்டு!
பெற்றவளின் !
கரத்திலிருந்திறந்த!
கைக்குழந்தையும்!
என்னுள்ளத்தைச்!
சிலுவையிலறைந்தனர் !!
நம்பவைத்து நயவஞ்சகனாகிய !
நண்பனும்,!
உரிமையெடுத்து உருக்குலைத்த !
உறவினரும்!
என்மனதைக் கழற்றியெடுத்துக்!
கூர்ஈட்டி குத்திக்!
கொடூரவதை செய்தனர் !!
புராணக்கதைகளில் போல!
படைத்தவன் முன் தோன்றி!
வரம் தரக்கேட்பானெனின்,!
செத்துப்பிழைக்க-எனக்குப் பல!
இதயங்கள் வேண்டுமென்பேன்...!
இல்லையெனில்-உடம்புக்குப்!
பாரமெனினும்,!
எதையும் தாங்கும்!
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!!
!
- எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை